Site icon Sage of Kanchi

Happy Tamil New Year – இனிய தமிழ் புத்தாண்டு மன்மத வருஷ நல் வாழ்த்துக்கள்

decorated_right_hand_blessing

“மநுஷ்யராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில், முதலில் பூக்கும் வேப்பம்பூவை உண்கின்றோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்து விட்டால் முடிவில் கசந்து போகும். கசப்பென்று வெறுப்படைய வேண்டாம். கசப்பையே இயற்கை அன்னையின்—அல்லது தர்மநியதியின்—மருந்தாக எதிர்கொண்டு வரவேற்போம். அதனால் போகப்போக முடிவில் எந்த அநுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.” – Mahaperiyava in Dheivathin Kural Volume 1

Thanks to Sri Krishnamoorthy Balasubramaniam for the below article.

தமிழ் புத்தாண்டு மன்மத வருஷம் –நாளை செவ்வாய்க்கிழமை(14.04.2015)

இந்த வருடம் பிறக்கும் தமிழ் புத்தாண்டு மன்மத வருஷம் ஆகும்.
சித்திரை மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பகல் 12.33 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2 ஆம் பாதம் கடக லக்னத்தில் மங்களகரமான மன்மத வருஷம் பிறக்கிறது.நாளை14-04-2015.

சித்திரை பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை கண்டு வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும். அதுபோல, இந்த சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை பிறப்பதால், மன்மத வருஷ நாயகனான தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்கினால், செந்தில் வேலவன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு வருஷம் முழுவதும் துணை நின்று வெற்றியை தருவார்.

அத்துடன், ஸ்ரீதுர்கை அம்மனையும் வணங்குங்கள். ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்புஅல்லது சர்க்கரையுடன் நெய் கலந்து, உங்கள் இல்லத்தில் இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி, தீப ஆராதனை செய்து, அந்த இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுங்கள்.

தித்திக்கும் இனிப்பை போல, உங்கள் வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள் தடை ஏதுமில்லாமல் நடைப்பெற அருள்புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி. அடுத்ததாக, உங்கள் இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். இதன் பலனாக, இந்த மன்மத வருட தமிழ் புத்தாண்டு தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம் செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் இறைவனின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.

இந்த மன்மத வருடம், நமக்கு வெற்றி தருகிற வருடமாக அமையட்டும். தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும் முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தும் நம் இல்லம் தேடி வரும்.

Exit mobile version