அம்பாள்

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யானம் ப்ரவசனம்

ஶ்ரீகாமாக்ஷி நவாவரண கீர்த்தனை ப்ரவசனம் 1: ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண த்யானம்: ஊத்துக்காடு ஶ்ரீவேங்கடஸுப்பய்யர் இயற்றிய ஶ்ரீமத் காமாக்ஷி நவாவரண கீர்த்தனா த்யான விமர்சம் ஸர்வம் லலிதார்ப்பணம் காமாக்ஷி சரணம் — மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி த்யானம்:

ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் த்யானம் (காமாக்ஷி விலாஸம்) 1) காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்தததே ஸதா ஆதிசக்தி ஸ்வயம் வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம் “த்ரிபுரா காயத்ரி வடிவான ஓங்காரமான கோணத்தில் வீற்றிருப்பவளும், காமாக்ஷியும், ஆதிசக்தியும், ஸர்வ புவனங்களுக்கும் காரணமானவளும்!!” 2) பத்மாஸனே நிஷண்ணா ஸா காமபீட நிவாஸினி சதுர்புஜா த்ரிநயனா மஹாத்ரிபுரஸுந்தரி “பத்மாஸனத்தில் வீற்றிருப்பவளும்,… Read More ›

கௌரீ மாயூரம் ஶ்ரீமத் அபயப்ரதாம்பிகை வைபவம்:

திருமயிலாடுதுறை எனும் கௌரீமாயூரம் புண்ய க்ஷேத்ரங்களில் தலையாயது. ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான தாயார் கௌரீமாயூரத்தில் ஶ்ரீஅபயாம்பாள் எனும் நாமாவுடன் ப்ரகாசிக்கின்றாள். அத்தகைய வைபவத்தை உடைய ஶ்ரீபராம்பாளின் வைபவத்தை அடியேன் இயற்றிய ப்ரவசனம் கீழே!! காமாக்ஷி சரணம் ஸர்வம் லலிதார்ப்பணம் — மயிலாடுதுறை ராகவன்  

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 3:

பஞ்சப்ரஹ்மாஸனத்தின் மத்யத்தில் ஶ்ரீபரதேவதை அமர்ந்து விளங்கிய வைபவத்தை சிந்தித்தோம்!! சிவசக்தி அனாதி மிதுனமான காமகாமேச்வராளின் வடிவம் இவ்வண்ணமே ப்ரஹ்மாண்டங்களுக்கு அப்பால் இங்ஙனமே விளங்குகின்றது. அங்ஙனமே, காஞ்சிபுராலயத்திலும் ஶ்ரீதேவியான காமாக்ஷி சிவசக்தி ஸம்மேளன மஹாசக்தியாகவே காயத்ரி மண்டபத்தில் விளங்குகின்றாள். யோகீச்வராளின் நேத்ரங்களுக்கே ஶ்ரீகாமாக்ஷி பராம்பிகையின் திவ்யமங்கள ஸ்வரூபம் வித்யுத் லதையைப் போல் காக்ஷியளிக்கிறது. ஶ்ரீகாமாக்ஷியை ப்ரத்யக்ஷமாக ஒரு… Read More ›

ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அம்பாள் வைபவம் 2:

பஞ்சப்ரஹ்மாஸனத்தில் ஶ்ரீபராசக்தி வீற்றிருக்கிறாள் என்பதை போன பதிவில் பார்த்தோம்!! பஞ்சப்ரஹ்மாஸனமானது பராசக்திக்கு எங்ஙனம் ஏற்பட்டது என்பதை ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் எனும் மஹாக்ரந்தத்தில், ஶ்ரீமாஹாத்ம்ய காண்டத்தில், ஸுமேதஸ்(ஹரிதாயனர்) நாரத ஸம்வாதமாக விளங்குகின்றது. அந்த வைபவத்தினை ஶ்ரீலலிதாம்பாள் அனுக்ரஹத்துடன் காண்போம்!! ப்ரஹ்மாண்ட ச்ருஷ்டியில் ஆதியில் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள் மூவரும் ச்ருஷ்ட்யாதி கார்யங்களை விட்டுவிட்டு ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியைக் குறித்து உக்ரமான… Read More ›

ஶ்ரீஆதிசங்கரரும் ஶ்ரீஅம்பிகையும் பாகம் 1:

ஶ்ரீமதாச்சார்யாள் ராஜராஜேச்வரியான ஶ்ரீபராம்பாளின் கடாக்ஷத்தால் ஶ்ரீவித்யோபாஸனை செய்துகொண்டு, ஶ்ரீசக்ர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீராஜராஜேச்வரியான அம்பாளை தனது ஆத்ம ஸ்வரூபமாக உணர்ந்து, பராம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்தார். பரதேவதானுக்ரஹம் அனைவருக்கும் ஏற்பட ஶ்ரீமஹாத்ரிபுரேச்வரியான அம்பாள் மீது அனேக க்ரந்தங்கள் இயற்றியுள்ளார். அவரியற்றிய ஸ்தோத்ரங்களின் முக்யமான சில ஸ்தோத்ரங்களுடைய வைபவம் கீழ்க்கண்ட அடியேன் இயற்றிய ப்ரவசனத்தில்!! அனைவரும் கண்டு ஶ்ரீராஜராஜேச்வரியான… Read More ›