Author Archives

Devotee of Sri Kanchi Matam and Mahaperiyava and a strong believer in advaita and guru parampara. We all are blessed to live in the time period of Maha Periyavaa. Let His grace be on us at all times to guide us and elevate us to next level.

 • Sivan Saving Sivan

  பட்டாபி சார், பெரியவா பற்றிய செய்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்குக் கொண்டு வந்து, அவற்றைச் சுவாரசியமான கதை போல விவரித்துச் சொல்லுவார். அதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களும் பாடங்களும் நிறையவே இருக்கும்… திருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார்… Read More ›

 • உபதேசத்தால் ஜனங்களை மாற்ற முடியுமா ! !

  உபந்நியாசம் பண்ணுகிறோம். இன்னும் பல தினுசுகளில் தத்துவங்களை, தர்மங்களைப் பிரசாரம் பண்ணுகிறோம். ஆனால் இவற்றாலேல்லாம் தற்காலிகமான ஓர் உற்சாகம் தான் ஏற்படுமே ஒழிய, ஸ்திரமான மாறுபாடு நடக்காது என்பதுதான் என் அபிப்பிராயம். உபந்நியாசத்தினாலே ஏதோ கொஞ்சம் மாறுதல் சில ஜனங்களின் மனசில் ஏற்பட்டிருந்தால், அதுகூடப் போகப் போகத் தேய்ந்துதான் போகலாமேயொழிய வளருவதற்கில்லை. வெறும் உபந்நியாசம் என்று… Read More ›

 • Saving Mani Sastri

  மகா பெரியவா! மகான் திருவடியே போற்றி வியக்க வைக்கும் அனுபவங்களுடன் விறுவிறுப்பான வாழ்க்கைத் தொடர்20 தம்பி மணி சாஸ்திரியை அவர் முன்பு இருந்த பழைய உற்சாக நிலையில் பார்த்துவிடத் துடித்தார் ஹரிஹர சாஸ்திரிகள். ‘மணி சாஸ்திரியை எப்படியாவது காஞ்சிபுரம் கூட்டிப்போனால், மகா பெரியவாளைப் பார்த்ததுமே எழுந்து உட்கார்ந்து விடுவான். ஆனால், அவன் இப்போது இருக்கும் நிலையில்… Read More ›

 • Satyam Advaitam & Sri Mahalingeswarar

  அசரீரி வாக்கு சொன்ன ஸ்ரீமஹாலிங்கம்! இமயம் முதல் குமரி வரையில் பரந்து விரிந்துள்ள இந்தப் பாரத தேசத்தில் கணக்கற்ற சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. இவை இன்றும் ஸாந்நித்யத்துடன் அருள்பெருகும் ஜீவநதிகளாக இருக்கின்றன. 1,008 சிவாலயங்களில் 274 ஆலயங்கள் பாடல்பெற்ற தலங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பும்,… Read More ›

 • Skanda Vel Puja

  மகா பெரியவா! மகான் திருவடியே போற்றி 24 வியக்க வைக்கும் அனுபவங்களுடன் விறுவிறுப்பான வாழ்க்கைத் தொடர் ‘மகா பெரியவா சொன்னபடி தங்க வேல் செய்தாகி விட்டது. இதை அவரிடம் காட்டி அனுக்ரஹம் பெற வேண்டும். வேலுக்கு தினப்படி உண்டான பூஜா முறைகளையும் கேட்க வேண்டும்.’ – மதுரம் மற்றும் அவரது கணவர் சுப்ரமண்யம் இந்த நினைப்பில்தான்… Read More ›

 • Pavazha Maalai

  மகா பெரியவா! மகான் திருவடியே போற்றி வியக்க வைக்கும் அனுபவங்களுடன் விறுவிறுப்பான வாழ்க்கைத் தொடர் திம்மகுடியில் மதுரத்தின் வீட்டு பீரோவில் இருக்கும் பவழ மாலையை எடுத்து வருமாறு, மதுரத்தின் அண்ணனுக்கு உறவினர்களுக்கு மத்தியிலும், திரளான ஊர்க்காரர்களுக்கு இடையிலும் உத்தரவு போட்டார் மகா பெரியவா. ‘இந்த வீட்டில் இத்தனை வருடங்கள் நான் புழங்கி வந்தும் இப்படி ஒரு… Read More ›

 • Interaction with Ramana Maharishi

  காஞ்சி சங்கரமடத்துடனும் மகா பெரியவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பட்டாபி சார், பெரியவர் பற்றிய மெய்சிலிர்க்கும் விஷயங்களைத் தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். ”பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான்… Read More ›

 • Rare Photo of Sri Adi Shankara Vigraham @ Kaladi

 • MS Recollects Sri Periyavaa’s Anugraham

  Check under “Multimedia” Menu option.

 • Guruprasadam

  காஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பக்தி உண்டு. சர்மா எப்போதும் பெரியவரை மனதில் சிந்தித்துக் கொண்டே இருப்பார். 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவராஜசர்மாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சட்டென்று கண்திறந்து பார்த்தார். அவருடைய முன்னிலையில் விபூதி, ருத்ராட்சம், கஷாயத்துடன் பெரியவரே… Read More ›

 • HH Sri Perivaa on HH Sri Maha Perivaa

  HH Sri Perivaa on HH Sri Maha Perivaa from Swaminathan Balasubramanian on Vimeo.

 • Pandaripura Darshan / Air crash

  சென்னையில் வசித்த சுப்பிரமணியன், காஞ்சிப்பெரியவரின் மீது தீவிரபக்தி கொண்டவர். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் சுவாமிகளைச் சந்திக்கத் தவறியதில்லை. 1983 பிப்ரவரியில் மஹாகாவ்ம் முகாமிற்குச் சென்று தரிசனம் செய்தார். அப்போது அவர் சுவாமிகளிடம் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். “”பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கனைத் தரிசிக்க எண்ணுகிறேன். ஆனால், எனக்கு நாளையோடு லீவு முடிந்துவிடுகிறது. நாளை மறுநாள் அலுவலகத்திற்கு அவசியம்… Read More ›

 • Om Nama Sivaya

  காஞ்சிப்பெரியவரைச் சந்திக்க ஒரு தனவணிகர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவரது குடும்பம் நல்ல செல்வச்செழிப்புடன் இருந்தது. வணிகரின் முன்னோர் தானதர்மம் செய்து வாழ்ந்தவர்கள். தங்கள் ஊரில் சிவன்கோயில் ஒன்றைக்கட்டி நித்யபூஜைக்காக நிலபுலன்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால், வணிகரோ இஷ்டம் போல ஆடம்பரமாய் வாழ்ந்து சொத்துக்களை விற்றுத் தீர்த்துவிட்டார். அவருடைய உடல்நிலையும் பாதிப்புக்குள்ளானது. அவரது மகனுக்கு குழந்தையும்… Read More ›

 • Sri Bodendra Swamigal

  லக்ஷ்மிநாராயணனின் பெரியப்பா நடேசய்யரும் பெரியவாளும் திண்டிவனம் அமெரிக்க மிஷன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பெரியவர் விழுப்புரம் வரும்போதெல்லாம், நகர எல்லையில் உள்ள பாப்பான்குளத்தில் இருக்கும் பாபுராவ் சத்திரத்தில்தான் தங்குவார். பெரியவரை லக்ஷ்மி நாராயணனின் தந்தைதான் பூரணகும்பம் கொடுத்து வரவேற்று, சத்திரத்துக்கு அழைத்துச் செல்வார். மடத்தின் பரிவாரத்தில் யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. சத்திரத்தில் அவற்றையெல்லாம் கட்டிப்… Read More ›

 • Aanma Sakthi

  பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்: ”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா. ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது…. Read More ›

 • Sri Jayendra Saraswathi Swamigal talks about His Guru

 • Paramacharya Sapthaham

  Avataara Kaandam Vijaya Yaatra Kaandam Adbutha Kaandam Anugraha Kaandam Upadesa Kaandam Sarvagnya Kaandam Smarana Kaandam You can click on this and it will play these files using your machine’s default mp3 player. Or you can right-click and “save target as”… Read More ›

 • Chicago Maharudram

  ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர என்றால் நமக்கு உடனே காஞ்சிபுரம் சங்கர மடம் தான் நினைவுக்கு வரும். இந்த வருடம் காஞ்சி மடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 75 வது ஜெயந்தியை படு விமர்சையாக  இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு அமெரிக்காவில் பல இடங்களில் வேத நிகழ்ச்சிகள் நடந்து… Read More ›

 • Snanams

  காஞ்சி மகாபெரியவர் சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான்…. Read More ›

 • Maharudram 2009 Invitation