Author Archives

 • Experience of Sri Maha Periyava – Sri Gurumoorthy Renowned Journalist

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – A brisk 5 min. speech by Sri Gurumoorthy on Sri Periyava emphasizing the importance of reading Deivathin Kural and following it. Enjoy! Ram Ram.  

 • Periyava Golden Quotes-65

  பக்தியே இல்லாது வெறும் கர்மாக்களை மாத்திரம் செய்பவனிடமும், வேலை ஒன்றும் செய்யாது வெறுமே பகவானை மாத்திரம் ஸ்தோத்திரம் செய்பவனிடமும் ஆண்டவன் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஸ்தோத்திரங்கள், பகவானின் மகிழ்ச்சிக்காக சொல்லப்படுவதில்லை. நாம் அவற்றைச் சொல்வதால் நம் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் அவனை நினைக்கிறோம். அவனது அருளையும் பெறுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Bhagawan is… Read More ›

 • Periyava Golden Quotes-64

  மாயை என்றால் என்ன? விஷ்ணுவைப் பாருங்கள். அவரோ கருநீலம். அவர் படுத்திருக்கும் பாம்பணையோ, பாற்கடலோ சுத்த சத்துவமான ஒரே வெளுப்பு. அவர் தொழிலோ ஜகத்தை எல்லாம் ரக்ஷிப்பது. அவர் இருக்கும் நிலையோ ஒரே தூக்கம். இவை ஒன்றுகொன்று நேர் விரோதமாக இருக்கின்றன. இது தான் ஈஸ்வர சக்தி. இதற்குத்தான் மாயை என்று பெயர். மாயை என்றால்… Read More ›

 • Periyava Golden Quotes-63

  மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும், யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும். செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்… Read More ›

 • Maha Periyavaa Vaibhavam by Shri. Anand Dayanidhi

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Shri. Anand Dayanidhi has delivered a master class on Maha Periyava. A real good sathsangam for little more than an hour and be immersed in Periyava Smaranam. If anyone has more of Swami’s upanyasams… Read More ›

 • Periyava Golden Quotes-62

  அன்புடைமை, அருளுடைமை போன்றவற்றை தான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது…. Read More ›

 • Important Message-TN Floods Prayaschittam

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – An important 3 min message from Sri Pradosha Mama’s Gruham on the reason and parigaram to be done for the recent TN floods. Please listen and do the needful.  This atonement has been done… Read More ›

 • Periyava Golden Quotes-61

  நமக்கு தோன்றும் வஸ்துக்களுடைய ஸ்வரூபங்களெல்லாம் நம்முடைய கண்ணைப் பொறுத்து இருக்கின்றன. கண்ணில் உள்ள ‘லென்ஸ்’ என்னும் ஒரு கருவியால் பார்க்கிறோம்; நமக்கு ஒரு வஸ்து ஒரு சாணுள்ளதாக தோன்றுகிறது. நம்முடைய கண்களிலுள்ள ‘லென்ஸ்’ வேறு விதமாக இருந்தால் அதே ஒரு முழமாகவும் தோன்றலாம். ஆகையால் நாம் பார்ப்பது நிஜப் பார்வை என்று எண்ண முடியவில்லை. இதைத்தான்… Read More ›

 • Sri Kanchi Madam – Flood Relief Appeal Info.

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – In response to the recent Chennai Floods post, few devotees asked on contribution details for relief activities. Please find the Sri Madam official Face Book link below for the latest relief activities. We… Read More ›

 • Periyava Golden Quotes-60

  அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’… Read More ›

 • Pradosham Special-Few more Sri Periyava Collections

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Glad to share a few more collections of Sri Periyava. Fantastic Sirpams that are very real, Periyava read books, and rare old pictures are in this 3 min. video clip. Ram Ram. Location… Read More ›

 • Periyava Golden Quotes-59

  நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்தத் துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty. – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா If I… Read More ›

 • Periyava Golden Quotes-58

  ‘ஈசுவர அநுக்கிரகம் வேண்டும், வேண்டும்’ என்றால் அது எப்படி வரும்? பரோபகாரமான, ஜீவகாருண்யமுள்ள நல்ல காரியங்களைச் செய்து செய்து மனசு பக்குவப்பட்டால்தான், சித்த சுத்தி உண்டாகி, அந்த சுத்தமான சித்தத்தில் ஈசுவரனின் உருவத்தைப் பார்க்க முடியும். கலக்கின ஜலத்தில் பிம்பம் தெரியாததுபோல், நாம் மனசைக் கலக்கிக் கொண்டு ஈஸ்வரஸ்வரூபம் தெரியாதபடி செய்துகொண்டிருக்கிறோம். பகவத் பக்தியோடு பரோபகாரமும்… Read More ›

 • Periyava Golden Quotes-57

  வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை மஹான்கள்தான் என்றில்லை. ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும். இம்மாதிரியான இடங்களைப் போய்ப் பார்த்தால் நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக்… Read More ›

 • Kanchi Sri Madam Helping Chennai!

  Jaya Jaya Shankara Hara Hara Shankara, Saw the following message, pictures in FB and wanted to share with you all. Let us all do our bit during this tumultuous times! Ram Ram Our Sri Matam staff in Kanchi went to… Read More ›

 • Periyava Golden Quotes-56

  சப்த த்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதீக மதம் முன் போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு… Read More ›

 • Experience with Maha Periyava-Rameswaram Cyclone 1964

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Thanks to Maha Periyava Puranam blog for this timely post. Sharing it below. Ram Ram. As we all continue to pray to Periyava to save people in Chennai from the disastrous flood situation,… Read More ›

 • Periyava Golden Quotes-55

  இந்து மதத்தில் தோன்றிய மஹான்கள் தங்களுடைய உபதேசங்களால் மக்களை உயர் நிலைக்குக் கொண்டு வருவதாகவோ அல்லது அவர்களை உ ய்விப்பதாகவோ சொல்லிக் கொள்ளவில்லை. அவர்களுடைய பரிசுத்தமும், கொள்கையும் அதன்படி அவர்கள் நடத்திய வாழ்கையும் அவரை அண்டியவர்களுக்கு ஆன்மீகக் கல்வியாக அமைந்தது. தான் பரிசுத்தமாக இல்லாத ஒருவர் மற்றவர்கள் அவ்வாறு இருக்க வேண்டுமென்று உபதேசம் செய்ய முடியாது. –… Read More ›

 • Periyava Golden Quotes-54

  கோயிலில் அவரவர்களும் இரைச்சல் போட்டுக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டிருப்பதற்கு லைசென்ஸ் தந்ததாக அர்த்தமில்லை. சாஸ்த்ரோக்தமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓசைகளான மணி அடிப்பது, வேத கோஷம், தேவராம், பஜனை, மேளம், புறப்பாட்டில் வெடி- போற்றவற்றுக்கே, மௌன த்யானத்தில் ஒருவனை ஈடுபடுத்தும் அபூர்வ சக்தி உண்டு. இம்மாதிரி சப்தங்களுக்கு நடுவில், ஸந்திதானத்தில் எதிரே ஜபம் பண்ண உட்கார்ந்துவிட்டால், சட்டென்று ஒரு… Read More ›

 • Periyava Golden Quotes-53

  அவனவனும் தன் உடலையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம் தான். துர் பழக்கங்களால் ஒருவன் வியாதியை சம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்பறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ணமடியும்? அது மட்டுமல்ல. அவனது நோய் மற்றவர்களுக்கும் பரவக் கூடும். துர் பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால்… Read More ›