ஸ்ரீசித்பராசக்தி மஹிமை:
ஸ்ரீதாம்ரபரணி மாஹாத்ம்யத்தில் கூறப்பட்ட ஸ்ரீலலிதா பரமேச்வரியின் மஹிமை:
Greatness of ShrI Lalita ParameshwarI Explained as Per TamrabaranI Mahatmya:
1) சிவசக்த்யாத்மக நவகோணங்களுக்கு மத்தியில் உறையும் ஆதிசக்தியை ஸ்ரீஅகஸ்த்யர் தன் பத்னியான பகவதி ஸ்ரீலோபாமுத்ரையோடும், தன் புத்ரியான ஸ்ரீதாம்ரபரணியோடும் தர்சித்தல்.
2) சதுராம்னாயங்கள் தடாகங்களாய் விளங்க, குப்தச்ருங்கி மலைச்சிகரத்தில் அமைந்த ஸ்ரீபுரத்தில், பஞ்சப்ரேத மஞ்சத்தில், சிவகாமேச்வரர் மடியில் ஸ்ரீஆதிசக்தியான மஹாத்ரிபுரஸுந்தரி ப்ரகாசித்தல்
3) பரம ஸ்ரீவித்யா பீடங்களான த்ரிகூடம் எனும் திருக்குற்றாலம் தரணிபீட பராசக்தி, பாபநாசம் ஸ்ரீலோகநாயகி, கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீஅதுல்யஸுந்தரி, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதீச்வரி, ஸாலீவாடீச்வரம் எனும் திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதீச்வரி முதலிய ப்ரத்யக்ஷ ஆலயங்களும், பரம துர்கா பீடமான துர்கா தீர்த்தம் விளங்கும் அரியநாயகீபுரமும், மஹாஸூக்ஷ்மமான ஸ்ரீநகர மணித்வீபம் ரஹஸ்யமாய் விளங்கும் குப்தச்ருங்கி மலையும் ஸ்ரீவித்யையான ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி அனுக்ரஹத்தால் பெருகி வரும் தாம்ரபரணி நதி தீரத்திலேயே விளங்குதல்.
4) அகஸ்த்யர் ஸ்ரீலலிதா பரமேச்வரியான ஆதிசக்தியை, காமாக்ஷி த்ரிபுரஸுந்தரியை ஸ்ரீவித்யா மந்த்ராத்மகமான ஸ்துதிகளால் ஸ்துதித்தல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Pranams