ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாம பாஷ்யம் பூர்வ பாகம் 1:

 

 

ஶ்ரீமாத்ரே நம:

அனைவருக்கும் நமஸ்காரம்,

ஶ்ரீராஜராஜேஶ்வரியான பராபகவதியின் பரம மங்களமான ஸ்வரூபம் ஶ்ரீதுர்கா பரமேஶ்வரி. தஶமஹாவித்யைகளும் ஶ்ரீதுர்கா பரமேஶ்வரியின் தேஹத்திலிருந்து தோன்றிய விஷயத்தை ஶ்ரீமத் தேவீ பாகவதம் கூறும்.

அத்தகைய மஹாதுர்கையின் ஆலயங்கள் கன்யாகுமரி முதல் காஷ்மீரம் வரை, த்வாரகா முதல் காமரூபம் வரை அனேகம். பாரதமே மேலே விரிந்து, கீழே குறுகி ஶ்ரீபராஶக்தியின் யந்த்ர வடிவில் தானே விளங்குகின்றது.

மஹாதுர்கையின் ஸஹஸ்ரநாமங்கள் அனேகம் எனினும், மிக உயர்வானது தந்த்ரராஜம் எனும் மஹாதந்த்ரத்தில் விளங்கும் ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாமம்.

ஶ்ரீபரமஶிவ பட்டராகர் அன்னை ஶ்ரீபார்வதி தேவிக்கு, அவளின் மூல ஸ்வரூபமான ஶ்ரீதுர்கா பகவதியின் ஸஹஸ்ரநாமத்தைச் சொல்வதாக ஶ்ரீதந்த்ரராஜ தந்த்ரம் கூறுகிறது.

அத்தகைய ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாமத்தின் பூர்வ உத்தர பாகங்களுடன் ஆயிரம் நாமங்களுடைய விளக்கமும் இன்று முதல் “குருவடி” எனும் யூட்யூப் சேனலில் தினமும் ஒளிபரப்பாகிறது.

அனைவரும் ஶ்ரீதுர்கா ஸஹஸ்ரநாமத்தின் விளக்கத்தைக் கேட்டு ஶ்ரீபராஶக்தி மஹாதுர்கையின் அருளுக்கு பாத்திரர்களாகப் ப்ரார்த்திக்கிறோம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Audio Content, Upanyasam

3 replies

  1. தாத்தா!

    உன் ஆஶீர்வாதத்ல ஶுபலக்ஷ்மீ குரல் மூலமாக விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பட்டி தொட்டி எல்லாம் நன்னா பரவினது! ஃபல ச்ருதியோட!

    ஸ்த்ரீகள் புண்யத்ல வெள்ளிக்கிழமை பௌர்ணமீ நவராத்ரி சமயங்களில் லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் நடக்கறது! ஃபல ச்ருதி இல்லாம!

    ரத்னத்ரயம்! ஶிவன்- அம்பா- விஷ்ணு.
    நீதான் சொல்லி இருக்கே!

    திருவெண்காடு பரமஶிவ இந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் வேதத்லேந்து 1000 நாமாக்களை வேதஸார ஸஹஸ்ரம்னு தொகுத்து அதிஷ்டானத்லயே frame பண்ணி … என்ன ப்ரயோஜனம்!?

    இந்த ஶிவனுக்கு மட்டும் ஸஹஸ்ரநாமம் ஏன் பாராயணம் பண்ணலை! ருத்ர த்ரிஶதீயோட நிறுத்திக்கறாளே இந்த ஜனங்கள்! இதை ஏன்னு கேக்க மாட்டியா!?

  2. 🙏💐🙏💐🙏💐

  3. JAYA JAYA SANKARA, HARA HARA SANKARA

Leave a Reply

%d bloggers like this: