வசந்த நவராத்ரி சிறப்பு ப்ரவசனம் 3:
கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் இரண்டாது ஶ்லோக விளக்கம்
Explanation for Second SlokA of Kalyana VrushtI Stavam
“ஏதாவதே³வ ஜனனி ஸ்ப்ருʼஹணீயமாஸ்தே
த்வத்³வந்த³னேன ஸலிலஸ்த²கி³தே ச நேத்ரே .
ஸாந்நித்⁴யமுத்³யத³ருணாயதலோசனஸ்ய
த்வத்³விக்³ரஹஸ்ய ஸுத⁴யா பரயாப்லுதஸ்ய”
— கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 2
1) பஞ்சதசியின் இரண்டாவது அக்ஷர ஸம்புடிதமாய் விளங்கும் ஶ்லோகம்
2) ஸுதாம்ருதத்தில் நனைந்தது போலும், அருணனின் ஸஹோதரத்வம் போல் சிவந்த திருமேனி கொண்டு விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி அம்மையின் விக்ரஹத்தைக் காண விடாமல் கண்களில் ஜலம் பெருகும்படி அம்பிகையை ஸ்மரிக்கும் ஸ்திதி எப்போதும் நிலைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்தல்.
3) பக்திக்கே வஶ்யமாகுபவள் ஶ்ரீபராசக்தி என்று கூறல்.
4) ஶ்ரீபரமேஶ்வரனாம் மஹாஶம்புநாதர் சிதக்னி குண்டத்தில் தோன்றிய ஶ்ரீலலிதா பரமேஶ்வரியைக் கண்டு, ஆனந்தம் பொங்கி ப்ரவஹிக்க, ஆயிரம் கண்களாலும் அம்பாளின் ஸ்வரூப தர்சனம் கண்டு , ஆயிரம் கண்களிலும் ஜலம் பொங்கி ப்ரவஹிக்க, ஶ்ரீகாரிகாஷ்டகம் எனும் ஸ்துதியால் ஶ்ரீலலிதா தேவியை ஆராதித்தல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
🙏💐🙏💐🙏💐