ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 12:
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்தென்னை ஆள்வாய் :
“ஸச்சிதாநந்த வடிவான பரப்ரஹ்மஸ்வரூபிணியாய் இருந்தாலும், நீயே என்னைப் பெற்ற தாயார் என்றும், உன்னையே பரம் என்று உன்னைத் தவிர வேறு கதி இல்லாமல் நம்பும் என்னை பெற்ற தாயாராய் பரிந்து வந்து காப்பாய் அம்மா!!”
பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்து நான் பேரான ஸ்தலமும் அறியேன்:
அம்பாளின் மஹாபீடங்கள் ஸித்தி பீடங்கள், ஶக்தி பீடங்கள், அக்ஷர பீடங்கள் என்று பல்வகைகள் உள்ளது
ஸித்தி பீடங்கள் : ருஷிகள், ஸித்தர்கள், மஹான்கள் முதலியோரால் ப்ரதிஷ்ட்டிக்கப்பட்டு ஸித்தியை வழங்கும் மஹாபீடங்கள்
ஶக்தி பீடங்கள் : பராஶக்தியின் அங்கங்கள் விழுந்த மஹாபீடங்கள் மற்றும் உப பீடங்கள்
அக்ஷர பீடங்கள் : ஐம்பத்தோரு அக்ஷர மாத்ருகைகள் வடிவாக அம்பாள் விளங்கும் பீடங்கள்.
காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி அம்மை ஆலயம் ஶக்திபீடமாகவும், ஸித்த பீடமாகவும், அக்ஷரபீடமாகவும் சேர்ந்து விளங்குவது மிகச்சிறப்பு
இத்தகைய மஹாபீடத்தின் மஹத்வத்தை உணரவேண்டியது அவசியம்
பெரியோர்கள் தரிசனம் ஒரு நாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன் :
அம்பாளின் ஸாக்ஷாத்காரத்தை அடைந்த பெரியோர்களையே தர்சித்து, அவர்களைப் பணிந்து, பரதேவதையின் மஹத்வத்தை அறிந்து அம்பிகையை உணர்தல் அவசியம்
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
💐🙏💐🙏💐🙏