ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 11:
“மதிபோல ஒளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே”
நிலவு போல் ஒளி பொருந்திய அழகிய மஹாகணபதிக்கு தாயாராக விளங்குபவள் காமாக்ஷி. அகண்ட ஸச்சிதாநந்தமயியான ஶ்ரீபரதேவதை காமேச்வரன் முகத்தைப் பார்க்க ஶ்ரீகாமேச்வரன் சைதன்யம் ஶ்ரீலலிதா தேவியின் முகத்தில் ப்ரதிபிம்பிக்க, லலிதா காமேச்வரர்கள் சைதன்யம் கலந்த ஶிவஶக்தியைக்ய ஸ்வரூபமாய் வல்லபா தேவி ஸஹிதமாய் மஹாகணபதி ஆவிர்பவித்தார்.
அத்தகைய மஹாகணேசரின் தாயார் ஶ்ரீலலிதாம்பாள்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
🙏💐🙏💐🙏💐