ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 10:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 10:

“கதியாக உந்தனைக் கொண்டாடி நினது முன் குறைகளைச் சொல்லி நின்றும்

கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ!?”

“உன் இரு பாதமே கதியென்று உன்னைக் கொண்டாடி சரணாகதி அடைந்து விளங்கும் என்னை மாயா விலாஸத்தில் மூழ்கும்படிச் செய்து விளையாடுகிறாயே!! ஏன் அம்மா!?

நீயோ ஶிவதத்வம் ஶக்தி தத்வம் ஆகியவற்றைக் கடந்த ஸம்வித் ரூபிணி. கேவல ஆனந்தமே வடிவானவள். ஞானாம்ருதத்தைப் பொழிபவள். ஆயினும் என் மீது கருணையைப் பொழியாமல், ஞானக்குறைவு எனும் தரித்ரத்தில் நான் மூழ்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறாயே தாயே!!
இது நியாயமா!?”

சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனை சதமாக நம்பினேனே

“பரா ஸம்வித் வடிவான ஞானாம்பிகையாயினும் நீ தான் மாயா விலாஸத்திற்கும் காரணமான மஹாமாயை என்பதை அறிந்தும் அறியாமல் உன்னை நம்பினேனே!! என் மீது இரக்கம் கொட்டு என் மாயையைக் களைந்து ஞானத்தைப் பொழிய உனக்கு மனமில்லையா தாயே!!?”

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

4 replies

  1. ஆஹா எப்படிப்பட்ட அடைக்கலம்! இது ஒன்று இருந்தால் போதுமே அம்பாள் ஓடோடி வருவாளே!
    அம்பாள் ஷரணம்.

  2. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: