ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 8:
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும், செங்கையில் பொன் கங்கணம்
பராசக்தியான ஶ்ரீகாமாக்ஷியின் காதுகள் ஶுத்தமானது என்பது அம்பாள் மாயா விலாஸத்தைத் தாண்டிய ஶுத்த சைதன்ய மூர்த்தி என்பதைக் குறிக்கிறது. ஶ்ரீநாராயணரின் கர்ண மலங்களிலிருந்து மதுகைடபர்கள் உத்பத்தியான போது, பரதேவதையின் கடாக்ஷத்தால் ஶ்ரீமஹாவிஷ்ணு அவர்களை ஸம்ஹரித்த விஷயம் நினைவு கூறத்தக்கது. அம்பிகை மற்ற தேவர்களைப் போல மாயாதீனை அன்று. அம்பாள் மாயாதீதை. மாயைக்கு அப்பாற்பட்டவள். மாயையைத் தன் வசம் கொண்டவள்.
ஜகமெலாம் விலைபெற்ற முகமெலாம் ஒளியுற்ற சிறுகாது கொப்பினழகும்
காலத்தை பக்ஷிக்கும் காலஸங்கர்ஷிணி இவள் என்பதைக் காட்டவே ஸூர்ய சந்த்ரர்களை தாடங்கங்களாய்க் கொண்டு அம்பாள் விளங்குகின்றாள். அத்தகைய தாடங்க மஹிமையால் இவள் பதியான ஸாக்ஷாத் பரமேஶ்வரரையும் ஸ்திரமாய்ச் செய்தவள்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Arpudham.
💐🙏💐🙏💐🙏