ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 6:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 6:

பத்துவிரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகம் தண்டை கொலுசும்

“ஶ்ரீமஹாவிஷ்ணுவின் தஶாவதாரங்களும் பராசக்தி ஶ்ரீகாமாக்ஷியின் பத்து விரல் நக நுனியிலிருந்து தோன்றின விஷயத்தை ஶ்ரீலலிதோபாக்யானம் போன்ற நூல்கள் கூறுகின்றன. ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரும் “கராங்குலி நகோதய விஷ்ணு தசாவதாரே” என்பார். அத்தகைய ப்ரகாசம் பொருந்திய விரல்கள் கொண்டவள் ஶ்ரீகாமாக்ஷி.

மேலும் பரப்ரஹ்ம ப்ரகாஶ ஸ்வரூபமாக ஶ்ரீமாதா விளங்குவதையும் இந்த வரி குறிக்கிறது”.

பச்சை வைடூரியம் இச்சையால் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒலியும்

“மரகதமும் வைடுரியமும் இழைத்து ஜ்வலிக்கும் சிலம்பொலியால் ஶ்ரீநகர த்வாரத்தில் விளங்கும் நூற்றெட்டு கணபதிகள் தொடங்கி ஶ்ரீகாமேஶ்வர பட்டாரகர் முடிய ஐம்பத்தோரு கலஹம்ஸர்களுக்கு தன்னுடைய தத்வத்தை போதிக்கும் குருமண்டல ரூபிணி ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி”.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: