ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 5:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 5:

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அநாதரக்ஷகியும் நீயே :

ஆகாஶகாமினியானவள், மஹாபிலாகாஶத்தில் உறைபவள், சிதாகாஶ அக்ஷராகாஶ வடிவினள், பஞ்சக்ருத்யங்களைச் செய்பவள், பரப்ரஹ்மமானவள், தீனர்களை ரக்ஷிக்கும் தாயானவள் ஶ்ரீகாமாக்ஷி

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே :

ஶர்வன் எனப்படும் ஶ்ரீபரமேச்வரர் (ஶ்ரீசர்யாநந்தநாத மஹாகாமேஶ்வரர்) முதற்கொண்ட குருபரம்பரா கூட்டங்களால் உபாஸிக்கப்ட்ட ஶ்ரீகாமகோடி எனும் மஹாபீடம் விளங்கும் ஶ்ரீகாஞ்சிபுர மஹாக்ஷேத்ரத்தில் புகழாக வாழ்ந்திடும் அகில புவன மாதாவான ஶ்ரீகாமாக்ஷி அம்மையையே சரணடைவோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

Tags: ,

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: