ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 4

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 4:

சிவ!! சிவ!! மஹேச்வரி!! பரமனிட ஈச்வரி!! சிரோண்மணி மனோன்மனியும் நீ

ஜகன்மாதாவான ஶ்ரீகாமாக்ஷியின் தத்வம் தேவர்களுக்கும், மும்மூர்த்திகளுக்கும் புலப்படாதது. ஶ்ரீசக்ர மஹாபிலத்துள் விளங்கும் அம்பாள் பரம நிர்குணை. குணக்கலப்பில்லாதவள். ஸ்த்ரி, புருஷன், அலி எனும் லிங்கங்களைக் கடந்த தத்வ வடிவம்.

மும்மூர்த்திகளின் ப்ரார்த்தனைக்கிணங்க அந்த ப்ரப்ரஹ்மம் ஶ்ரீமாதாவாக, ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக தர்சனமளித்தது. தேவியின் சைதன்ய பராஸம்வித் வடிவை உணர இயலாத மும்மூர்த்திகளுக்காக, ஸதாசிவனின் ப்ரார்த்தனையால் ஏகமான ப்ரஹ்மம் இரண்டாகப் பிரிந்தது.

பராஸம்வித்தான ஶ்ரீகாமாக்ஷி லலிதேஶ்வரி, ஶிவகாமேச்வரனாக, மஹாகாமேச்வரியாக லீலையாகத் இண்டாகத் தோன்றி விளங்கினாள். வாஸ்தவத்தில் ஒன்றானது, லீலையாக இரண்டானது.

ஶிவகாமேஶ்வரர் மடியில் மஹாகாமேஶ்வரி விளங்கும் தத்வம் இதுவே. மஹாப்ரளயத்தில் ஶிவகாமேஶ்வரர் மஹாகாமேஶ்வரியுள் ஒடுங்க, எஞ்சியிருப்பது மஹாகாமேஶ்வரியே.

ஹ்ரீங்காரத்தின் பிந்துவின் ஒன்பதாவது ஸ்தானமான மனோன்மனியாக விளங்குவதையும் ஶாக்த ஸாஸ்த்ரங்கள் கூறுகிறது.

இப்படி ஸர்வத்தையும் கடந்த மஹாஸம்வித் வடிவான ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகையை ஶரணமடைவோம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

3 replies

  1. Feeling blessed to read through your explanations sir. Kamakshi Saranam.

  2. We are certainly enjoying the bakthi bhaavam that runs through all episodes. However, almost all episodes carry tough words that I find it difficult to comprehend. Though i can’t talk on behalf of others. If meaning could allso be comprehended, it will be double delight to read, Just one example: What is the meaning of “ஶ்ரீசக்ர மஹாபிலத்துள்”. Can the NOn COMMON TAMIL WORDS be annotated please?

  3. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: