ஶ்ரீகாமாக்ஷி அம்மன் விருத்தம் 2:

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 2:

* சுக்ர வாரத்தில் உனை கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கி விடுவாய் :

காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை மாசி மாதம் பூர நக்ஷத்ரத்தில் பிலத்திலிருந்து வெளிப்பட்டு பந்தகாஸுரனை ஸம்ஹரித்துப் பின் தேவர்களுக்கும், த்ரிமூர்த்திகளுக்கும் முதலில் தர்ஶனமளித்தது வெள்ளிக்கிழமையிலேயே.

ஸாக்ஷாத் மஹாபுவனேஶ்வரியானவள் தேவர்களின் கர்வத்தை ஒழித்து, இந்த்ரன் தபஸிற்கு மிகிழ்ந்து, வெள்ளிக்கிழமை ஸூர்யன் உச்சியிலிருக்கும் ஸமயம் ஆவிர்பவித்து தன் ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உணர்த்தினாள்.

ஆதலால் சுக்ர வாரத்தில் அம்பாளை வழிபடுவது மிகச் சிறந்த பலனளிக்கும். போகம் மோக்ஷம் இரண்டையுமே அளிக்கும்.

* சிந்தைதனில் உன் பாதம் தன்னையே தொழுபவர் துயரத்தை மாற்றி விடுவாய்:

ஐ!! ஐ!! என்று பீஜாக்ஷரங்களைத் தவறாய் உச்சரித்த மூடனையே மஹாகவியாக்கி அனுக்ரஹித்த பராஶக்தியான காமாக்ஷியை உள்ளன்பொடு இதயத்தில் அம்பாள் பாதத்தைத் தொழ, அனைத்துத் துயரங்களும் பறந்து போகும்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Tags: , , ,

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: