ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்

ஶ்ரீபரஶுராமருக்கு ஶ்ரீதத்தாத்ரேயர் உபதேசித்த ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மஹிமை:

Greatness of ShrI LalithA ParabhattarikA As Explained by DattatreyA to ParashurAmA :

1) ஶ்ரீவித்யோபாஸ்தியின் ஆதிகுரு மூர்த்தியான ஶ்ரீதத்தாத்ரேயர்.

2) ஶ்ரீலலிதோபாஸனையின் மஹிமையை ஶ்ரீபரசுராமருக்கு ஶ்ரீதத்தர் உபதேசித்தல்.

3) பஞ்சப்ரஹ்மங்களும் ஶ்ரீலலிதேஶ்வரியின் பாத தலத்தின் அருகே சேவா நிமித்தம் ஶ்ரீபராம்பாளை ஸேவித்திருப்பதைக் கூறுதல்.

4) சந்த்ரனில் சந்த்ரிகை போலும், ஸுர்யனில் உஷ்ணம் போலும், ஸமுத்ரத்தில் ஜலம் போலும், ஆகாஶத்தில் ஶூன்யம் போலும், சித்ஶக்தி ஶிவனிடம் விளங்குவதைக் கூறி, பரமஶிவனுக்கு ஆதாரமாக விளங்கும் அம்பாளின் ப்ரபாவத்தைக் கூறுதல்.

5) ஸம்வித்வடிவான ஶ்ரீபராம்பாள் கார்யம், கர்த்ரு எனும் காரணம் என இரண்டாக விளங்கி, கார்ய வடிவான காமேச்வரனாகவும், அதற்கு கர்த்தாவாக ஶ்ரீகாமேச்வரியாக விளங்குவதையும், அனாதி மிதுனமான காமகாமேஶ்வராள் வடிவில் ஶ்ரீமஹாத்ரிபுரை விளங்குவதைக் கூறல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: