நவராத்ரி நாயகியர் 3:
கல்லேகுள்ளங்கரா ஏமூர் ஶ்ரீஹேமாம்பிகா:
NavaratrI Nayakiyar 3:
KallekullankarA Emoor ShrI HemAmbikA :
1) இரண்டு கரங்களின் வடிவத்திலேயே ஶ்ரீபராஶக்தி ஜ்வலிக்கும் அற்புத க்ஷேத்ரம்
2) பரஶுராமர் ஸ்தாபித்த 108 துர்காலயங்களில் முக்யமான சதுர்துர்காலயங்களில் ஒன்றான ஏமூர் ஶ்ரீஹேமாம்பாள் ஆலயம்
3) அடந்த வனமத்யத்திலிருந்த துர்கா பரமேஶ்வரியை உபாஸிக்க வன மத்திக்கு நித்யம் செல்லும் குரூர் மற்றும் கைமூக்கு நம்பூத்ரிமார்கள். அவர்களால் அவ்வளவு தூரம் வரமுடியாத போது, பாதி வழியிலேயே ஸ்வர்ணாம்பிகையாக தர்ஶனமளித்த ஶ்ரீஹேமாம்பாளின் காருண்யம்
4) தள்ளாமையினால் வீட்டை விட்டு நகர முடியாத குரூர் நம்பூத்ரி ஸ்வப்னத்தில் தர்சனமளித்த ஶ்ரீஹேமாம்பிகை, அவர்களில்லத்துக் குளத்திலேயே ஆவிர்பவிப்பதாக அனுக்ரஹித்தல்.
5) மறுநாள் காலை ஶ்ரீதேவியின் இருகைகள் குளத்தின் மத்தியில் தோன்றுவதும், குரூர் நம்பூத்ரி அம்பிகையைக் கண்ட ஆனந்தத்தில் அந்த இரு கைகளையும் குளத்தில் நீந்தி சென்று பிடித்தவுடன், இரு கைகளும் ஶிலா விக்ரஹமாக ஆகிவிடுதல்.
6) ஶ்ரீஶங்கர பகவத்பாதாள் விஷேஷமாக ஶ்ரீஹேமாம்பாளுக்கு பூஜா பத்ததிகளை நியமித்தல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Great upanyasam as always, very grateful!
🙏💐🙏💐🙏💐