துறவுடை இறைவன் திருவடி

ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களின் விஜய யாத்திரைக் குறிப்புகளில் அதிசயிக்கத் தக்க விஷயங்கள் அனேகம் இருப்பதைக்
காணலாம்.

அவற்றை வாசிக்கும்பொழுது காலயந்த்ரத்தில் ஏறிக்கொண்டு பழைய காலத்திற்கே சென்றது போன்ற உணர்வு ஏற்படுவது பலரின் அனுபவம்.

1947ஆம் ஆண்டு அக்டோபர் -நவம்பர் மாதங்களில் பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்க ள்கும்பகோணத்திற்குக் கிழக்கில் சுமார் 15 மைல் தொலைவில் உள்ள குத்தாலத்திற்கு எழுந்தருளியிருந்தார்கள்.

அப்போது ஐப்பசி மாதமாக இருந்தபடியால், மாதம் முழுவதும் மாயூரம் ரிஷப தீர்த்த கட்டத்தில் .. காவிரியில் நீராடுவது விசேஷம் என்பதால் மயிலாடுதுறை துலாகட்டத்தில் புனிதநீராடி வரத் தீர்மானிக்கப்பட்டது.

குத்தாலத்திலிருந்து அங்கு சென்று திரும்பும் தூரம் சுமார் 32 கிமீ..

ஐப்பசி மாதம் முதல் நாள்

குத்தாலத்திற்கு விஜயமாகியிருந்த பூஜ்யஸ்ரீ ஆசார்யர்கள் அவர்கள் அதிகாலையில் கிளம்பி விடிவதற்குள்ளாக மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு எழுந்தருளி ஸ்நானம் முடிந்து உடனே காலை வேளையில் குத்தாலம் ஸ்ரீமடம் முகாமிற்குத் திரும்பினார்கள்..

ஜகத்குருநாதர்களுடன் துலாஸ்நாநம் செய்யும் பேறு கிட்டியதில் அடியவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

அடுத்த நாளும் அதிகாலையில் கிளம்பிய பூஜ்யஸ்ரீ பெரியவாள் மயிலாடுதுறைக்கே மீண்டும் சென்று ஸ்நாநம் செய்து திரும்பி விட்டார்கள்..

இப்படி தொடர்ந்து ஐப்பசி மாதம் முழுதும் அடைமழைக் காலத்தில் அதிகாலை கிளம்பி சுமார் 16கி.மீ தூரம் கடந்து மயிலாடுதுறைக்கு வந்து ஸூர்யோதயத்திற்கு முன்னர் ஸ்நாநாதிகளை முடித்துக்கொண்டு, காலையில் மீண்டும் 16 கிமீ குத்தாலத்திற்கு விரைவாகத் திரும்பி விடுவார்கள்.

ஐப்பசி அடைமழைக் காலத்திலும் கூட மெய்வருத்தம் பாராது.. அன்றாடம் 32 கி.மீ பாத யாத்திரையாக…உலகோர் வழக்கப்படித் தாமும்

துலா காவேரி ஸ்நாநத்திற்காக வெகு தொலைவு சென்று வந்ததான விபரம் எல்லாம் அவர்களின் திவ்ய சரித்திரத்தில் ஒரு துளிதான்…

எனினும், இவற்றைப் படிக்கும் அடியவர்கள் துறவுடை இறைவன் தமது திருவடிகள் நோக இவ்வண்ணம் நாடெங்கும் நடந்து நல்லோரைக் காத்ததை நினைக்கும்போது அவர்கள் விழிநீர் வெள்ளமாய்ப் பெருகாமலிராது.

நன்றி: ஸமரவிஜயகோடி

Source: FB Post by Sri GanapathisubramanianCategories: Uncategorized

5 replies

  1. 💐🙏💐🙏💐🙏

  2. Aaum Sri Maha Periyava Saranam

  3. Hara Hara Sankara Jaya Jaya Sankara

  4. மஹாபெரியவாளின் “ஜெகத்குரு திவ்ய சரித்திரம் ” 1957-ல் வந்தது பின் அதன் இரண்டாம் பாகமும் சேர்த்து (700) பக்கம் ..படிக்க படிக்க பிரமிப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும். பெரியவாளுக்கு 90 வயசில் இருந்த பக்குவம் 20- வயசிலேயே இருந்தது ..எப்படி சாத்தியம்? தெய்வத்திற்கு எல்லாமே சாத்தியம். புரிந்துகொள்ள நமக்குத்தான் புத்தி [போதாது.

  5. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: