காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது.
மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை.
அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.
அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |
புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம் விநச்யதி |
வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே விநச்யதி |
கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |
என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை நம் புராணங்கள் போற்றுகின்றன.
ஓம் ஸ்ரீ காவேரித் தாயே போற்றி!
Source: Sri Pudhuperiyava FB Group
Categories: Upanyasam
sins committed in Kumbakonam washed away NOT by cauvery snana but once in 12 years māgha makha snanam
Rama Rama 🌺 Contents are contradicting to Mahaperiyava ‘s views. Vide தெய்வத்தின் volume 2, last line to be corrected as கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி. ( NOT காவேரி ஸ்நானே )
🙏💐🙏💐🙏💐