ஶ்ரீராஜராஜேஶ்வரி ஶ்ரீதுளஜா பவாநீ மஹிமை

ஶ்ரீசித்பராஶக்தி வைபவம்:

ஶ்ரீதுளஜா பவாநீ ஸ்துதி :

ஶ்ரீராமச்சந்த்ர க்ருத ஶ்ரீதுளஜாம்பா ஸ்துதி

நமாமி த்வரிதாம் தேவீம் ஸுந்த³ராம்ʼ ஸுப⁴கா³ம்ʼ ஸுகா²ம் .
நானாரூப த⁴ராமாத்³யாம்ʼ ஸர்வப்ராணிஹிதேரதாம்ʼ

ஷட்சக்ர புத்ர நிலயாம்ʼ ஸஹஸ்ரா ராலயாம்ʼ பராம் .
நாக³ரூபாம்ʼ குண்ட³லினீமம்பா³தே³வீம்ʼ நமாம்யஹம்

ஸோஹம்ʼ மந்த்ரமயீம்ʼ தீ⁴ராமஜபாஜபரூபிணீம் .
ஸர்வபீ³ஜமயீம்ʼ ஶக்திமம்பா³தே³வீம்ʼ நமாம்யஹம்

ஐம்ʼ பீ³ஜாம்ʼ வாக்³ப⁴வாம்ʼ வாணீம்ʼ வாக்³ கோ³சர மண்ட³லாம்
க்லீம்ʼ காமபீ³ஜசலனாம்ʼ சாதுர்வர்ண்யக்ருʼதாலயாம்

ஸௌ꞉ ஸர்வஸித்³தி⁴ஜனனீம்ʼ ஸகலாக³மஸேவிதாம்
நவாக்ஷர பராம்ʼ ஶாந்தாம்ʼ ஷோட³ஶாக்ஷரமீரிதாம்

கல்பதீதாம்ʼ விஷ்ணுமாயாம்ʼ பி³ந்து³த்ரயக்ரதாலயாம்
சக்ரராஜமயீம்ʼ மந்த்ராம்ʼ ஸர்வசக்ராணிஸேவிதாம்

— ஸ்காந்த புராணே ஸஹ்யாத்ரி கண்டே ஶ்ரீதுரஜா மாஹாத்ம்யே

ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தி உபாஸித்த ஶ்ரீதுளஜா ஸ்துதி

“தாயே!! த்வரிதா எனும் துளஜா பகவதி நமஸ்காரங்கள்!! அழகிய வடிவம் தாங்கியவளே!! ஸுகத்தை அளிப்பவளே!! அனேக வடிவங்கள் தாங்கியவளே!! ஸகல ப்ராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவளே!!

ஆறு ஆதார கமலங்களில் விளங்குபவளே!! ஸஹஸ்ரார சக்ரத்தை தன் வாசஸ்தானமாய்க் கொண்டவளே!! பரையே!! குண்டலினீ எனும் மஹாஸர்ப்பத்தின் வடிவம் தாங்கியவளே!! நமஸ்காரங்கள்!!

ஸோஹம் எனும் மந்த்ர வடிவானவளே!! தீரம் மிகுந்தவளே!! அஜபா எனும் ஜப வடிவானவளே!! ஸர்வ பீஜாக்ஷரங்களின் வடிவில் விளங்குபவளே!! பராஶக்தியே!! அம்மையே!! தாயே!! நமஸ்காரங்கள்!!

ஐம் எனும் வாக்பவ பீஜாக்ஷரத்தின் வடிவினளே!! ஸரஸ்வதியே!! வாக் மண்டலத்தில் விளங்குபவளே!! க்லீம் எனும் காமராஜ பீஜாக்ஷரத்தில் பொலிபவளே!! நான்கு வர்ணத்தவர்களாலும் வழிபடப்பெற்றவளே!!

ஸௌ எனும் பராபீஜத்தின் வடிவினளே!! ஸகல ஸித்திகளையும் உண்டாக்கியவளே!! ஸகல ஆகமங்களாலும் வழிபடப்பெற்றவளே!! யோகபாலா பரமேஶ்வரிநன எனும் ஒன்பது அக்ஷர வடிவான நவாக்ஷரி மந்த்ர வடிவினளே!! சண்டி நவாக்ஷரி வடிவில் விளங்குபவளே!! பரம ஶாந்தையே!! ஶ்ரீமஹாஷோடஸி எனும் மஹாமந்த்ரத்தால் உபாஸிக்கப்படுபவளே!!

கல்பாதீதையே!! வைஷ்ணவீ மாயா ஸ்வரூபிணியே!! த்ரிபிந்துக்களின் வடிவான ஸாக்ஷாத் ஶ்ரீமஹாகாமகலேஶவரியே!! ஶ்ரீசக்ரத்தின் வடிவில் விளங்குபவளே!! மந்த்ர மயமான தேஹத்தைக் கொண்டவளே!! ஸர்வ சக்ரங்களாலும் ஸேவிக்கப்பட்டவளே!! நமஸ்காரங்கள்!!

— ஸ்காந்த புராணம் ஸஹ்யாத்ரி கண்டம் ஶ்ரீதுரஜா மாஹாத்ம்யம்

மஹாராஷ்ட்ரத்தின் முக்ய ஶக்தி பீடமான ஶ்ரீதுரஜா பவாநியை ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்தி ஶ்ரீவித்யா பரமான ஶ்ரீவித்யா மஹாமந்த்ர ஸம்புடித துளஜா ஸ்தோத்ரத்திரால், ஶ்ரீதுளஜா பவாநீயை ஸாக்ஷாத் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையாக ஸ்துதித்துள்ளார்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Leave a Reply

%d bloggers like this: