ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி உறையும் த்வாதஶ மஹாஶக்தி பீடங்கள்

ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் ஶ்ரீஹரிதாயனர் நாரதருக்குக் கூறிய ஶ்ரீவித்யா த்வாதஶ க்ஷேத்ரங்கள் :

ஶ்ரீவித்யோபாஸ்தியே ஆஸேது ஹிமாசலம் ஸர்வவிடங்களிலும் வ்யாபித்து விளங்கியது என்பதும், அம்பாள் உபாஸனையே போக மோக்ஷங்களை வழங்க வல்லது என்பதும் முக்யமாக குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீஹரிதாயனர் த்வாதஶ ஶ்ரீவித்யா க்ஷேத்ரங்களைக் குறிப்பிடுகிறார். இந்த க்ஷேத்ரங்களை தர்ஶிப்பவர்கள் ஸாக்ஷாத் ஸ்வயம் ஶ்ரீலலிதா பரமேஶ்வரியாகவே ஆகி விடுகின்றனர். அஶக்தர்கள் இந்த த்வாதஶ க்ஷேத்ரங்களையும், தேவீ ஸ்வரூபங்களையும் ஸ்மரித்த மாத்ரத்திலேயே ஸகல பாபங்களிலிருந்தும் விடுபட்டு ஶ்ரீலலிதையின் பதாம்புஜத்தை அடைகின்றனர்.

அந்த க்ஷேத்ரங்களின் வைபவம் பின்வருமாறு

காஞ்சீபுரே து காமாக்ஷீ மலயே ப்⁴ராமரீ ததா²
கேரலே து குமாரீ ஸா அம்பா³(ஆ)நர்தேஷு ஸம்ʼஸ்தி²தா.

கரவீரே மஹாலக்ஷ்மீ: காலிகா மாலவே ததா
ப்ரயாகே³ லலிதா தே³வீ விந்த்⁴யே விந்த்⁴யநிவாஸினீ.

வாரணஸ்யாம்ʼ விஶாலாக்ஷீ க³யாயாம்ʼ மங்க³லாவதீ
வங்கே³ஷு ஸுந்த³ரீ தே³வீ நேபாலே கு³ஹ்யகேஶ்வரீ.

இதி த்³வாத³ஶரூபேண ஸம்ʼஸ்தி²தா பா⁴ரதே ஶிவா

— த்ரிபுரா ரஹஸ்யே மாஹாத்ம்ய காண்டம்

காஞ்சிபுரத்தில் ஶ்ரீகாமாக்ஷி

மலயமலையில் ஶ்ரீப்ரமராம்பிகா

கேரளத்தில்(கன்யாகுமரி) ஶ்ரீகன்யாகுமாரி

ஸௌராஷ்டரத்தில் ஶ்ரீஅம்பா தேவி

கரவீரமெனும் கோல்ஹாபுரத்தில் ஶ்ரீமஹாலக்ஷ்மி

மாளவத்தில் ஶ்ரீகாளிகா

ப்ரயாகையில் ஶ்ரீலலிதா பரமேஶ்வரி

விந்த்யாசலத்தில் ஶ்ரீவிந்த்யாசலவாஸினி

காசி க்ஷேத்ரத்தில் ஶ்ரீவிஶாலாக்ஷி

கயா க்ஷேத்ரத்தில் ஶ்ரீமங்கலாவதி

வங்காளத்தில் ஶ்ரீஸுந்தரி தேவி

நேபாளத்தில் ஶ்ரீகுஹ்யஸுந்தரி

இந்த த்வாதஶ மஹாபீடங்களை ஸ்மரித்த க்ஷணத்திலேயே ஒருவன் மஹாபாபங்களிலிருந்து விடுபட்டு ஶ்ரீபராஶக்தியின் கருணைக்கு பாத்திரமாகிறான்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Upanyasam

2 replies

  1. Dear Sir, good evening. Can I please have your contact number. I would like to have a word with you. I live in Mylapore, Chennai. Else if you feel comfortable you can call me at 9952967718. Namaskaram. Radhikaa Suresh.

Leave a Reply

%d