Shri BhavanI SahasranAmA Vaibhavam 18:
ShrI BhavanI SahasranAmA 10 :
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 18:
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 10
ஓம் க்ஷமாயை நம:
1) பொறுமை மிகுந்தவள்
2) தன் குழந்தைகள் செய்த தவறை மன்னித்து அருளக்கூடிய கருணா மூர்த்தி
3) பூமியின் வடிவத்தில் விளங்குபவள்
4) ப்ரஹ்மா முதல் புழு வரையுள்ள ஸகல ஜீவராசிகளுக்கும் தாயாதலால், இயல்பாகவே கருணா ஸாகரமாக, பொறுமை மிகுந்தவளாக ஶ்ரீமாதா பவாநீ விளங்குகின்றாள்.
ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 11
ஓம் காந்த்யை நம:
1) காந்தி வடிவானவள்.
2) தேவியின் ஸ்வரூப காந்தியில், அணுவளவு காந்தியே சந்த்ர, ஸூர்ய அக்னிகளாக விளங்குகின்றது.
3) கேனோபநிஷத்தில் ப்ரதிபாலிக்கப்பட்ட ப்ரஹ்மஸ்வரூபிணியான உமா ஹைமவதி
4) திருநெல்வேலி க்ஷேத்ரத்தில் ப்ரகாஶிக்கும் ஶ்ரீவித்யா ஸ்வரூபிணியான ஶ்ரீமத் காந்திமதீஶ்வரி
தொடரும்..
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Leave a Reply