ஶ்ரீவஸந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி நவராத்ரி மஹிமை

ஶ்ரீவஸந்த நவராத்ரோத்ஸவம் எனும் ஶ்ரீலலிதா நவராத்ரோத்ஸவ சிறப்புப் பதிவு:

ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகா வைபவம் :

“யத³க்ஷரைகமாத்ரே(அ)பி ஸம்ʼஸித்³தே⁴ ஸ்பர்த்³த⁴தே நர꞉ .
ரவிதாக்ஷ்யேந்து³கந்த³ர்பை꞉ ஶங்கரானலவிஷ்ணுபி⁴:”

— ஸர்வ ஸித்திகரி ஸ்தவம் 3

“ஶ்ரீவித்யோபஸனையில் விளங்கும் ஐம்பத்தோரு மாத்ருகாக்ஷரங்களில் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ அன்றி பாலா மந்த்ரத்தின் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ அல்லது ஸங்கேத ஸார வித்யா எனும் ஶுத்த வித்யையின் ஏதாவது ஒரு அக்ஷரத்தையோ (மேற் குறிப்பிட்டவைகளில் ஏதாவது ஒரேயொரு அக்ஷரத்தை மட்டும்” எவன் உபாஸித்து உன் அருட்கடாக்ஷத்தால் ஸித்தி செய்து விடுகிறானோ, அவன் ஸூர்யன், சந்த்ரன், மன்மதன், சங்கரர், அக்னி, விஷ்ணு ஆகியோருடன் ஏக காலத்தில் போட்டி போடக்கூடிய அளவிற்கு பலம் மிகுந்தவனாக ஆகின்றான்”.

ஶ்ரீவித்யோபாஸனைக்கு மேலாக வேறொன்றுமில்லை. ஸகல உபாஸனா க்ரமங்களிலும் மேம்பட்டு விளங்குவது. ஶ்ரீவித்யோபாஸகனுக்கு கிடைக்காதது ஒன்றுமில்லை. கைவல்ய மோக்ஷமே அவன் கையில் விளங்குகின்றது. தஶமஹாவித்யைகளும் ஶ்ரீமஹாஷோடஸி மஹாமந்த்ரத்தின் அங்க தேவதைகளாகி விடுவதால், மஹாவித்யைகள் அத்தனை பேரையும் உபாஸித்த பலன் ஶ்ரீவித்யோபாஸகனுக்கு கிடைத்து விடுகிறது.

மூலாதாரத்தில் உக்ரதாரா பகவதியையும், ஸ்வாதிஷ்டானத்தில் புவனேஶ்வரியையும், மணிபூரகத்தில் தக்ஷிணகாலிகையையும், அனாஹதத்தில் குப்ஜகாளிகையையும், விஶுத்தியில் குஹ்யகாலிகையையும், ஆஞ்ஞையில் ஶ்ரீலகுஷோடஸி த்ரிபுரஸுந்தரியையும், ஸஹஸ்ராரத்தில் ஶ்ரீமஹாஷோடஸியையும் பாவித்து அந்தந்த ஸ்தானங்களில் அந்தத்த மூர்த்தத்தை பாவித்து உபாஸிக்கும் ஸாதகன் ஸாக்ஷாத் ஶ்ரீமஹாஷோடஸி பராபட்டாரிகையான ஶ்ரீலலிதேஶ்வரியாகவே ஆகிவிடுகிறான் என்பதை மஹாநிர்வாண தந்த்ரம் கூறுகிறது.

மூகபஞ்சஶதியில் சரியாக நாற்பத்து மூன்றாவது ஶ்லோகம்

“ஶர்வாதி³பரமஸாத⁴ககு³ர்வானீதாய காமபீட²ஜுஷே .
ஸர்வாக்ருʼதயே ஶோணிமக³ர்வாயாஸ்மை ஸமர்ப்யதே ஹ்ருʼத³யம்”

— ஆர்யா ஶதகம் 43

ஶ்ரீயந்த்ரத்தின் நாற்பத்து மூன்றாவது கோணம் த்ரிகோணம். அதற்கு மேல் பிந்து. அந்த த்ரிகோணத்திற்கே காமபீடம் என்று பெயர். அதுவே மஹாகாமகோஷ்டமான காஞ்சிபுரம். த்ரிகோணாகாரமான கர்ப்பக்ருஹத்தின் பைந்தவ ஸ்தானத்தில் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகையான ஶ்ரீலலிதை வீற்றிருக்கின்றாள். அவளை ஶ்ரீசர்யாநந்தநாதர் எனும் ஶ்ரீபரமேஶ்வரர் விஷேஷமாக உபாஸிக்கிறார். இதனை ஶ்ரீமூகாச்சார்யாள் ஆர்யா ஶதகத்தில் கூறுகிறார்.

“ஶ்ரீஶர்வன் எனும் ஶ்ரீபரமேஶ்வரர் முதற்கொண்ட பரமஸாதக குருபரம்பரா கூட்டங்களால் உபாஸிக்கப்பட்டு, காமபீடம் எனும் ஶ்ரீகாமகோடி மஹாபீடத்தில் அமர்ந்தவளும், உலகின் வடிவானவளும், பராஹந்தையின் வடிவாக விளங்குபவளுமான ஶ்ரீகாமாக்ஷியின் பாதாரவிந்தங்களுக்கே இந்த ஹ்ருதயம் ஸமர்ப்பணமாக்கப்படுகிறது”.

ஸூசகமாக ஹ்ருந் மத்யத்தில் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி லலிதா பராபட்டாரிகையை தனது ஆத்மனாகவே உணர்ந்து, ஶ்ரீஅம்பாளாகவே ஆகிவிடுவதை இங்கு ஶ்ரீமூகாச்சார்யாள் குறிப்பிடுகிறார்.

ஶ்ரீயந்த்ரத்தின் மத்ய பிந்துவில் விளங்கும் ஶ்ரீராஜராஜேஶ்வரியை உபாஸிக்க அனேக ஆம்னாய மந்த்ரங்களும், ஆம்னாய தேவதைகளும் விளங்குகின்றார்கள். குறிப்பிட்ட ஆம்னாய மந்த்ரங்களை மட்டும் உபாஸித்து கைவல்ய முக்தியைய அடைந்த மஹான்களும் உண்டு. பராபூஜா ப்ரகாஶம் எனும் க்ரந்தத்தின் படி ஆம்னாய தேவதைகள்.

பூர்வாம்னாயம் — ஶ்ரீபுவனேஶ்வரி
தக்ஷிணாம்னாயம் — ஶ்ரீதக்ஷிணகாலிகை
பஸ்சிமாம்னாயம் — ஶ்ரீகுப்ஜிகா பரமேஶ்வரி
உத்தராம்னாயம் — ஶ்ரீகுஹ்யகாலிகா
ஊர்த்வாம்னாயம் — ஶ்ரீமஹாஷோடஸி

ஆம்னாய தேவதைகள் ஒவ்வொரு தந்த்ரங்களின் படியும், உபாஸனா க்ரமங்களின்படியும் மாறுபடும். இத்தகைய ஆம்னாய தேவதைகளோடு அம்பாளை உபாஸிக்க வேண்டியதான முக்யமான காலம் இந்த வஸந்த நவராத்ரி புண்ய காலம்.

ஶ்ரீவித்யா பரமேஶ்வரியான அம்பாளின் ஜப, ஹோம, புரஶ்சரணாதிகளை செய்வதற்கு முக்யமான புண்யகாலம் இந்த நவராத்ரி புண்யகாலம். உபாஸகர்களில் தேவீ பக்ஷம் முழுவதும் விஷேஷமான நவாவரண பூஜாதிகளையும், ஶ்ரீவித்யா ஜப தர்ப்பண ஹோமாதிகளையும் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான ஶ்ரீமாதாவின் ப்ரீதிக்காகச் செய்வர்.

உபாஸகர் இல்லாதோரும் ஶ்ரீபராம்பாளை தங்களால் இயன்ற ஸ்தோத்ர பாராயணாதிகளாலே ப்ரீதி செய்து, இஷ்ட காம்யார்த்தங்களையும், ஶ்ரீபரதேவதா ஸாயுஜ்யத்தையும் அடைய இயலும்.

பூர்ண ப்ரஹ்மமாகவும், பராஹந்தையாகவும், பராஸம்வித்தாகவும் விளங்கும் ஶ்ரீமஹாகாமகலேஶ்வரியை, ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையின் கருணா கடாக்ஷம் எல்லோருக்கும் கிடைக்க அம்பாளை ப்ரார்த்திப்போம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: , ,

2 replies

  1. Very nice explanation.
    Namasthe

Leave a Reply to Mayiladuthurai RaghavanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading