மாசி பூரம் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அவதார தினம்

 

மாசி பூரம்(18/02/2022) ஶ்ரீ காமாக்ஷி பராபட்டாரிகா ஆவிர்பாவம் :

ஶ்ரீகாமாக்ஷி பராமஹாபட்டாரிகா மஹிமை :

“கலாப்யந்த: ஶஶதர கலயாம் அங்கித மௌலிம் அமல சித் வலயாம்
அலயாம் ஆகமபீடி நிலயாம் வலயாங்க ஸுந்தரீம் அம்பாம்”

— ஆர்யா ஶதகம் 42

“கலா” எனும் பதத்தின் அர்த்தமானது

1) கலா — காமகலை, ஈகார மாத்ருகாக்ஷரம்

2) மஹாபத்மாடவிக்குள் சிந்தாமணி க்ருஹ ஆம்னாய வாசல்களில் ஸுதா பாத்ரத்தினுள் விளங்கும் ஸூர்ய சந்த்ர அக்னி கலைகள்

3) அதே அம்ருத பாத்ரத்தில் விளங்கும் ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர , ஈஶ்வர, ஸதாஶிவாதி கலைகள்

4) யோகத்தில் ஸவிகல்பமான “ஹகாரம்” மற்றும் நிர்விகல்பமான “ளகாரம் மற்றும் க்ஷகாரம்”

5) ஶ்ரீயந்த்ரத்தில் விளங்கும் தஶசக்ரேஶ்வரிகளான கலாஸ்வரூபிணிகள். (த்ரிவலயத்துள் “த்ரிபுரேஶினி” எனும் ஶக்தியை சேர்த்து தஶசக்ரேஶ்வரிகள்)

6) சந்த்ரகலா ஷோடஶ நித்யாஸ்வரூபிணிகள்

7) பதினேழாவதான பரமாகலா எனும் அதிஸூக்ஷ்ம கலா. பதினெட்டாவது கலையும் உண்டு என்று கூறுவதுண்டு. “மஹாஶப்ததஶீ நித்யா” என்று ஶிவகாமஸுந்தரி ஸஹஸ்ரநாமம் கூறும். த்ரிபுரா ரஹஸ்யத்தில் ப்ரதிபாதிக்கப்பட்ட மஹாத்ரிபுரஸுந்தரி ஸாக்ஷாத் மஹாஸப்ததஶி நித்யையே. இவ்விஷயம் ஶ்ரீசக்ர ஶ்ருஷ்ட்டியில் விபரமாய் உள்ளது.

8) கலா வாக்ரூபியான பரா, பஶ்யந்தி, மத்யமா, வைகரீ

9) ஐம்பத்தோரு மாத்ருகாக்ஷர கலைகள்.

இவையனைத்தின் வடிவாக விளங்குபவள் ஸாக்ஷாத் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை.

கலாப்யந்த ஶஶதர கலயாம் அங்கித மௌலீம் — பரமஶிவனாரின் ஸஹஸ்ராரத்தின் பிந்துவில் விளங்கும் ஸம்வித்ஸ்வரூபிணியாக பரஶிவனாராலே பாவிக்கப்பட்டவளும்

அமல சித் வலயாம் — நிர்மலமான சைதன்ய வடிவம் கொண்டவளும்

அலயாம் — அனுத்தரத்தமாம் “அ”காரத்தில் நிலை கொண்டவள். ஆறாவது ஆம்னாயமான “அனுத்தராம்னாயத்தில்” நிலை கொண்டவள். அழியாத மஹாநித்யையானவளும்

ஆகம பீடி நிலயாம் — மஹாஸம்வித் ஞான நிலையை அடைவிக்கும் “த்ரிபுரா வித்யா” பீடமான மஹாகாமகோடி ஸ்தானத்தில் நிலை பெற்றவளை

வலயாங்க ஸுந்தரீம் — வகாரத்தில் தொடங்கி அகாரத்தில் முடியும் பஞ்சாக்ஷரங்களான வம் லம் யம் அம் பீஜாக்ஷரங்களில் உறையும் சைதன்யமானவளும், குண்டலினி ஸ்வரூபத்தில், ஆறாதாரங்களில் ஸஞ்சரிக்கும் த்ரிபுரஸுந்தரியான காமாக்ஷியை, ஶிவசக்ர வலய பிந்துவிலே விளங்கும் சிதானந்த ரூபிணியை, பெற்றெடுத்தத் தாயாரான ஶ்ரீகாமாக்ஷியை சரணாகதி அடைகிறேன்.

ஶர்வாதி பரமஸாதக குர்வாநீதாய காமபீட ஜுஷே

— ஆர்யா ஶதகம் 43

“ஶர்வன் எனும் ஸாக்ஷாத் ஶ்ரீபரமேஶ்வரன் முதற்கொண்ட திவ்யௌக, ஸித்தௌக, மானவௌக குருத்ரய கூட்டங்களான பரமஸாதகர்களாலே, யோக வழியில் உபாஸிக்கப்பட்டு, அடையப்பட்டதான ப்ரஹ்ம ஸம்வித்தானது காமபீடம் எனும் காமகோடி மஹாபீடத்தில் விளங்கும் காமாக்ஷி மஹாபரா பட்டரிகையை சரணமடைவோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

#ப்ரஹ்ம_ஸம்வித்_காமாக்ஷி

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Leave a Reply

%d bloggers like this: