Ratha Sapthami – Significance and Procedure: Feb 7 and 8′ 22

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Received a good article explaining Ratha Sapthami. In Bharatham  Sapthami starts around 4.30 PM today (Feb. 7) and Sapthami Thithi is there till after sun rise tomorrow  (Feb 8) morning. Rama Rama


ஸப்தமியில் சிறந்தது ரதஸப்தமி

ஓம் நமோ ஸ்ரீமந் நாராயணாய

குபேரனாக்கும் ரத ஸப்தமி விரதம்

சூர்ய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத ஸப்தமி’ ஆகும். இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

பொங்கல், ரதசப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூர்ய உதயத்துக்கு முன்னதாக ஸ்நானம் செய்த பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.

சூர்ய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத ஸப்தமி’ ஆகும். இது ‘சூர்ய ஜெயந்தி’ என்றும் அழைக்கப்படுகிறது.

தை மாதத்தில் வரும் ஸப்தமியையே ‘ரத ஸப்தமி’ என்கிறோம்.

‘ஸப்தம்’ என்றால் ‘ஏழு’ என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் ஸப்தமி திதியாகும். உத்ராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே ‘ரத ஸப்தமி’ என்று போற்றப்படுகிறது.

அன்றைய தினம் சூர்யன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.

இந்த நாளில் சூர்ய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும்.

அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும்.

பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும்.

இவ்வாறு வைத்துக் ெகாண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

ரத ஸப்தமி அன்று சுத்தமான இடத்தில் பசுவின் சாணம் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத் துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதி களைச் சொல்லி வழிபட வேண்டும்.

கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

வாசலில் சூர்ய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.

இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.

ஒருநாள் பிரமோற்சவம் திருப்பதியில் ரதஸப்தமி தினத்தன்று, ஒருநாள் பிரமோற்சவம் நடை பெறும்.

அன்றைய தினம் திருமலை யில், ஸ்ரீதேவி- பூதேவி ஸமேத மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் பவனி வருவார். இந்த ஒரு நாள் பிரமோற் சவத்தை ‘சிறிய பிரமோற்சவம்’ என்றும் அழைப்பார்கள்.

ரத ஸப்தமி அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் மலையப்ப சுவாமி வீதி உலா வருவார்.

பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். தொடர்ந்து மாலை 4 மணிக்கு கற்பக விருஷ வாகனத்திலும், மாலை 6 மணிக்கு ஸர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார். அதோடு பிரேமாற்சவ நிகழ்ச்சி நிறைவு பெறும்.

பொங்கல், ரதஸப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சூரிய உதயத்துக்கு முன்னதாக நீராடிய பிறகு, இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும்.

இந்த வருடம் 07/2/2021 திங்கள் கிழமை மற்றும் செவ்வாய் கிழமை காலை வரை ரதசப்தமி வருகிறது. இதன் தாத்பர்யம் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டு உத்தராய புண்ணிய காலத்தில் உயிர் பிரிய வேண்டும் என்று காத்திருந்தார். ஆனால் அப்புண்ணிய காலம் வந்தும் அவர் உயிர் பிரியவில்லை. தான் விரும்பியது போல் ஏன் இன்னும் மரணம் ஏற்படவில்லை, நான் என்ன பாவம் செய்தேன் என்று ஸ்ரீவேத வியாசரிடம் கேட்டார்.

அதற்கு வேதவ்யாசர் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்கு அநீதி செய்வது மட்டும் பாவமில்லை அதர்மம் செய்பவர்களை கண்டும் கண்டிக்காமல் இருப்பதும் பாவம்.

துரியோதனன் சபையில் பாஞ்சாலி துகில் உரியப்பட்டபோது, அவள் காப்பாற்றுங்கள் என்று கதறியபோதும் உன் அங்கங்கள் சும்மா இருந்தன என்றார். செயல்படாத தர்மம் அதர்மத்தை விட மோசமானது. அந்த பாவத்தினால் தான் நீ விரும்பியபடி மரணம் ஏற்படவில்லை என்று கூறினார். நான் செய்திருக்கும் மாபெரும் பாவத்துக்கு என்ன பிராயச்சித்தம் என்று பீஷ்மர் கேட்டார். அதற்கு வேதவ்யாசர் யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அவரை விட்டு அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது.

இருந்தாலும் அநீதியை எதிர்க்காத உன் கண்கள், காதுகள், வாய், தோள்கள், கைகள், கால்கள் அனைத்திற்கும் மேலாக தர்மத்தை சிந்தனை செய்யாத உன் தலை என அங்கங்கள் அனைத்தும் தண்டனை பெற்றே ஆகவேண்டும் என்றார்.

அதற்கு பீஷ்மர் என் அங்கங்களை பொசுக்க சாதாரண அக்னி போதாது சூரிய பகவானின் வெப்பத்தை பிழித்து என் அங்கங்களை பொசுக்க உதவுங்கள் என்றார். அப்போது தான் என் பாவம் தொலையும் என்று வேண்டினார். உடனே வேத வியாசர் சூர்யனின் முழு சக்தியும் உள்ள எருக்க இலைகளால் பீஷ்மரின் அங்கங்களை மூடினார். இந்த எருக்க இலைகள் சூரிய சக்தியை உன் உடலில் பாய்ச்சும், நீ புனிதம் அடைவாய் என்றார். பின் பீஷ்மர் தியானத்தில் அமர்ந்து அந்நிலையிலேயே முக்தி அடைந்தார். அந்தப் புனித நாளே ரதஸப்தமி. பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே அவருக்கு யார் பித்ரு கடன் செய்வது என்று தருமர் வருந்தினார். அதற்கு வியாசர், ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும் பரிபூர்ண தூய்மை உள்ள துறவிக்கும் நீத்தார் கடன் என்பது அவசியமே இல்லை, அவர்கள் நற்கதியையே அடைவார்கள் என்று கூறினார். வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர் கடன் அளிக்கும் என்றும் கூறினார்.

ரத ஸப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்து நீராடுபவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவர், பீஷ்மருக்கு நீர் கடன் அளித்ததால் மஹா புண்ணியமும் அடைவர் என்று கூறினார். எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற் கொண்டு 7 எருக்கன் இலைகளை அட்சதை சேர்த்து தலை, கண்கள், தோள்பட்டைகள், கால்களில் வைத்துக் கொண்டு நீராடினால் பாவத்தில் இருந்து விடுபடலாம். அன்று சூரிய பகவானுக்கும் பீஷ்மருக்கும் தூய்மையான நீரினை உள்ளங்கையில் ஏந்தி அர்க்யம் சமர்ப்பிக்க வேண்டும்.

சூர்ய பகவானின் அஷ்டோத்ரத்தில் வரும் சில முக்கியமான நாமாவளி

ஓம் சூர்யாய நம: செயலை தூண்டுபவனுக்கு வணக்கம்
ஓம் அர்க்கய நம: போற்றுதலுக்குரியவனுக்கு வணக்கம்
ஓம் ஆதித்யாய நம: தேவர்க்கெல்லாம் தேவனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் அம்ருதாய நம: அமிழ்தமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜகதேக சக்ஷüஷே நம: உலகின் கண்ணாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜகதாத்மனே நம: உலகுக்கு உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் மித்ராய நம: நண்பனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் தபனாய நம: காய்ச்சுபவனாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் காலகாரணாய நம: காலத்தை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் தீவாகராய நம: பகலை உருவாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் பாஸ்கராய நம: ஒளியை உண்டாக்குபவனுக்கு வணக்கம்
ஓம் ககாய நம: வானத்தில் சஞ்சரிப்பவனுக்கு வணக்கம்
ஓம் ரவயே நம: மாறுதலைச் செய்பவனுக்கு வணக்கம்
ஓம் ஹம்ஸாய நம: பரமாத்மனுக்கு வணக்கம்
ஓம் பூஷ்ணே நம: அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஜ்யோதிஷே நம: வெளிச்சமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஹரண்யகர்பாய நம: அனைத்தையும் தன்னுள் அடக்கியவனுக்கு வணக்கம்
ஓம் விச்வ ஜீவனாய நம: உலகம் முழுமைக்கும் உயிராக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் ஸஹஸ்ரபானவே நம: அளப்பரிய ஒளியுடையவனுக்கு வணக்கம்
ஓம் மரீசயே நம: கதிரையுடையவனுக்கு வணக்கம்
ஒம் ஸவித்ரே நம: உண்டுபண்ணுபவனுக்கு வணக்கம்
ஓம் பிரத்யக்ஷதேவாய நம: கண்கண்ட தெய்வமாக இருப்பவனுக்கு வணக்கம்
ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம: பத்துத்திக்குகளிலும் ஒளிவீசுபவனுக்கு வணக்கம்
ஓம் கர்மசாக்ஷிணே நம: செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு வணக்கம்
ஓம் அம்சமாலினே நம: கதிர்மாலையை உடையவனுக்கு வணக்கம்
ஓம் ப்ரபாகராய நம: பிரபையை உண்டு பண்ணுகிறவனுக்கு வணக்கம்
ஓம் சூர்ய நாராயணாய நம: செயலை தூண்டும் இறைவனுக்கு வணக்கம்

சூர்ய நமஸ்கார மந்திரம்

சூர்ய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூர்யனையும் வழிபடுவதையேக் குறிக்கும்.

அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) தரித்து கிழக்கு திசை நோக்கி நின்று சூர்யனை தரிசனம் செய்வதால் அளவில்லாத பலனை அள்ளி கொடுப்பார் சூர்ய பகவான்.

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சூர்ய பகவானின் காயத்ரி மந்திரம் (108 முறை)

ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹித் யுதிகராய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்

ஜெய் ஸ்ரீராம்

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.



Categories: Announcements

4 replies

  1. Part of the translation;
    Best of the Saptami’s is Rathasapthami.

    Om Namô Srîman Nârayânâya.
    Of all the Viratha worships ascribed to Soorya Bhagavân, even to Kubêran, ‘Ratha Saptami’ is the most important.

    The benefits of Donations and Dharmic acts done on this day of fasting will be multiplied many times over.

    The practitioner reciting this mantra (Om Namô Srîman Nârayânâya) after bathing before sunrise, on Pongal or Rathasapthami or every Sunday, will become healthier.

    The most important of the fasts to worship the Soorya Bhagavân is ‘Ratha Saptami’. It is also known as ‘Sûrya Jayanti’.

    Saptami which falls in the month of Thai (January) is called ‘Ratha Saptami’.
    ‘Saptham’ means ‘seven’. Saptami Tithi is the 7th day after the new moon. Saptami Tithi, which falls in the waxing month of Thai (January), the beginning of the Uttarâyana festival, is when ‘Ratha Saptami’ is celebrated.

    The seven horses that drag the chariot where Soorya Bhagavân is seated, turn and begin a (apparent) Northward journey.

    On this day, waking up at sunrise and bathing in the holy theerthams (holy rivers) is an added bonus. Those who are unable to do so should at least take a bath at home in a place where the sun light falls.

    Women should bathe using 7 Eruku (Calotropis) leaves, turmeric, and Akshathâ, while men and children with 7 Eruku (Calotropis) leaves and Akshathâ. The placement of the 7 Eruku (Calotropis) leaves is as follows: Two on feet, two on the hands, two on the shoulders and one on the head. (It is not mentioned which type of the two Eruku (Calotropis) leaves to use.)

    Bathing in this way will bring wealth and health.
    Fatherless men, and women who have lost their husbands are prescribed to use 7 Eruku (Calotropis) erukam leaves with Pacchai-arisi and black sesame seeds, to be placed on their heads while bathing. Purânâs say that if a widow observes this fast, she will not have a widowed condition in the next birth.

    On Rata Saptami, select a clean spot. Cow dung should be smeared on the clean spot, then draw sun chariot on that place. Also Draw the sun-moon on it and imagine that they are seated on the chariot. It should be adorned with sandalwood, turmeric, saffron and red fragrant flowers and worshiped by chanting the praises of Sûrya Nârâyana.

    Giving chapatti made from wheat and cooked rice to the cow, on this day is also very beneficial.
    You can also draw a chariot at the entrance to the house, where sunlight falls, and then rice, lentils, jaggery etc., are to be offered to the Sun God at the drawing.
    Rest to be posted tomorrow.
    Namasthê.

  2. Sreevani – I realize that you are unable to read this article. We feel sorry for that. Unfortunately, the origin of this article was in Tamil only and doing translation for this is going to be hard for us to do this. I suggest that you can request any of your tamil friends to help you with the translation. Hope this helps. Our apologies again.

  3. Can you please please translate in English please

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading