ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 14:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 6:

ShrI BhavanI SahasranAmA Vaibhavam 14:

ShrI BhavanI SahasranAmA 6:

ஶ்ரீஶுபாயை நம:

1) மங்களமே வடிவானவள். ஸகல ஸௌபாக்யங்களையும் வழங்குபவள்.

2) ஸௌபாக்யத்தின் எல்லையான கைவல்ய மோக்ஷத்தையும் வழங்கும் பரமகருணா மூர்த்தி.

3) கைவல்ய மோக்ஷத்தின் மேல் இச்சையில்லாதோருக்குக் கூட தர்மார்த்தகாமங்களை அளித்து, இறுதியில் கைவல்ய மோக்ஷத்தையும் அளிக்கும் மஹாகாமகோடி எனும் பீடத்தில் விளங்கும் காமாக்ஷி

4) ஆத்மஸ்வரூபத்தை உணர்வதை விட பரமஶுபம் கிடையாது. அத்தகைய பரமஶுபத்தை அனுக்ரஹிக்கும் கருணாமூர்த்தியே பவாநீ.

5) “ஸ்வயமேவ ஆத்மா லலிதா” என்று லலிதையின் வடிவாகவே ஆத்மஸ்வரூபம் விளங்குவதை உணர்த்துபவள்

6) பவாநித்வம் எனும் தன்னுடைய நிஜஸாயுஜ்யமான பரமஶுபத்தை அளிப்பவள்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam

Tags: ,

1 reply

  1. Namaskaram…where can I get Bhavani Sahasranamam in Sanskrit in book from please?

Leave a Reply

%d