ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 12

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 12:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 4:

ஶிவப்ரியாயை நம:

1) பரமஶிவனிடத்தில் மிகுந்த ப்ரியம் உள்ளவள். பரமஶிவனாருக்கு மிகவும் ப்ரியமானவள்.

2) சொல்லும் பொருளும் ஒன்றே விட்டு ஒன்று பிரியாதது போல் ஸ்வாமியும் அம்பாளும் சேர்ந்தே விளங்குகின்றனர்.

3) ஶ்ரீசக்ரத்திலும் ஶக்தி த்ரிகோணங்கள் ஐந்தும், ஶிவத்ரிகோணங்கள் நான்கும் சேர்ந்து விளங்குகின்றது.

4) த்ரிகோண வடிவான ஶக்தியும், பிந்து வடிவான ஶிவனும் சேர்ந்தே விளங்க, பிந்துவிற்கு மேல் அகண்ட ஸச்சிதாநந்த ரூபிணியாக ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி ஶிவஶக்த்யைக்ய ஸ்வரூபத்தில் ஜ்வலிக்கிறாள்

5) அம்பிகை மஹாபதிவ்ரதை ஆதலால், ஶிவ த்வேஷத்தை பொறுப்பதில்லை. ஶிவத்வேஷம் செய்த தக்ஷயாகத்தை நிர்மூலம் செய்தாள் ஸதி தாக்ஷாயணி.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

%d