ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 10

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 10:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 3:

மஹாலக்ஷ்ம்யை நம:

1) ஸர்வஸ்யாத்யா மஹாலக்ஷ்மி என ஸகல புவனங்களுக்கும் மூல காரணமான ஶ்ரீஆதி மஹாலக்ஷ்மியே ஸாக்ஷாத் பவாநீ

2) மஹிஷாஸுரனை ஸம்ஹரிக்க ஸகல தேவ ஶரீரங்களிலிருந்தும் தேஜோமயமாகத் தோன்றிய ஶ்ரீசண்டிகா மஹாலக்ஷ்மி இவளே.

3) காமாக்ஷி விலாஸத்தில் கூறியபடி ஶ்ரீசக்ர மத்யத்தில் உறையும் ஸாக்ஷாத் ஶ்ரீகாமாக்ஷி மஹாத்ரிபுரஸுந்தரியே ஆதிமஹாலக்ஷ்மி.

4) லலிதோபாக்யானத்தில் கூறியபடி ஶ்ரீயந்த்ர மத்தியில் உறையும் ஶ்ரீலலிதைக்கே மஹாலக்ஷ்மி என்று திருநாமம்.

5) ஶ்ரீமந் நாராயண வல்லபையான ஶ்ரீமஹாலக்ஷ்மி தாயாரே மூலப்ரஹ்மஸ்வரூபிணி. ஶ்ரீலக்ஷ்மீ குலம் எனும் ஶ்ரீலக்ஷ்மி உபாஸனையில் அவளே பரப்ரஹ்மம். அத்தகைய மஹாலக்ஷ்மியும் ஸாக்ஷாத் பவானியே

இந்த நாமத்தின் விளக்கம் அடுத்த ப்ரவசனத்திலும் தொடரும்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: