ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 9:

 

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 9:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 2:

ஜகன்மாத்ரே நம:

1) ஸகல புவனங்களுக்கும் ஒரே தாயாராக விளங்குபவள்.

2) ப்ரஹ்மா முதல் புழு வரை விளங்கும் ஸகல ஜீவராசிகட்கும் அன்னையாய் விளங்குபவள்.

3) “அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்றும் “முன்னம் அவனை ஈன்றவளே” என்றும் அபிராமி, அபயாம்பா பட்டர்களால் காண்பிக்கப்பட்டபடி பரமஶிவனாருக்கும் தாயாராய் விளங்குபவள்

4) மந்தான பைரவ தந்த்ரத்தில் பார்வதி கல்யாண உத்ஸவத்தின் பின் ஶக்திலிங்க வடிவில் தேவி விளங்கும் போது ஶ்ரீபரமேஶ்வரன் ஶ்ரீபார்வதி அம்பாளை வணங்கி, குப்ஜிகா தேவியின் மஹிமையை தாயார் ஸ்தானத்தில் விளங்கி உபதேஶிக்க வேணும் என்று ப்ரார்த்திப்பது இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம்.

5) ஶைவஸித்தாந்தக் கொள்கையின்படியும் இமவான் மகளுக்கு கேள்வன், மகன், தகப்பனாக ஶ்ரீஸ்வாமி விளங்குவதும் நோக்கத்தக்கது.

6) “ஆப்ரஹ்ம ஸ்தம்ப ஶில்ப கல்பனயா” எனும் மூகபஞ்சஶதி கூற்றுப்படி ப்ரஹ்மா முதல் புழு வரை ஜீவராஶிகளை ஶில்பி ஶில்பம் செதுக்குவது போலே செதுக்குபவள்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Audio Content, Upanyasam

Tags: ,

2 replies

  1. அபயம்* அளிக்கும்* அன்னை பவானி !!

  2. புழு பூச்சி முதல் அகில ஜீவராசிகளுக்கும் அன்னை அவள் அல்லவா? அதான் பவானி த்வம் தாஸே என்று விளிக்கும் முன் பவானி தவம் என்ற மாத்திரத்தில் ஓடோடி வந்து அபாயம் அழிப்பவள் அன்னை !!
    ஸர்வம் அம்பாள் அர்ப்பணம்!

Leave a Reply

%d bloggers like this: