ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 7:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 7:

ஶ்ரீஆத்யாஶக்தி பகவதி மஹாத்ரிபுரஸுந்தரி பவாநீ த்யானம் :

ஶ்ரீபகவதி பவாநீ மஹாத்ரிபுரஸுந்தரி பரதேவதையின் த்யானம் இரண்டு வகையாக ஸஹஸ்ரநாமாவில் ஶ்ரீபரமேஶ்வரர் கூறுகிறார்

1) உதித்து வரும் ஸூர்யனைப் போல் சிவந்தவள். பாஶம், அங்குஶம், தாமரைப்பூ, ரக்தம் நிரம்பிய கபாலம் இவற்றை ஏந்தியவள். தேவ ஸமூஹங்களால் ஸேவிக்கப்படுபவள். அமலை. பரமஶிவனின் இல்லாள். இத்தகைய பவாநியை ஸதா ஸ்மரிப்போம்

2) உதித்து வரும் கோடி ஸூர்யர்களைப் போல் சிவந்தவள். நான்கு கரத்தினள். முக்கண்ணி. அங்குஶம், பாஶம், கரும்புவில், மலர்க்கணைகள் ஆகியவற்றைத் தாங்கியவள். பரமஶிவை. இத்தகைய தாய் பவாநியை த்யானிப்போம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்.

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: