ஶ்ரீமாத்ருகா சக்ர விவேகம்

 

“ஜாக்³ரத்-ஸுஷுப்திக்ருʼத்-த³க்ஷிண-வாம-பா⁴கா³ம் .
ஸ்வஜ-ஸ்வபா⁴வ-பரிக்ல்ருʼப்த-ஜக⁴ன்ய-பா⁴கா³ம். துர்யாதிதுர்ய-க⁴டிதானன-ஹ்ருʼத்ப்ரதே³ஶாம்
ப்ராணேஶ்வரீ பரஶிவஸ்ய பராம்ருʼஶாம”

— ஶ்ரீஸ்வாதந்த்ரநாதர் எனும் மஹாஸித்தர் இயற்றிய “ஶ்ரீமாத்ருகா சக்ர விவேகம்” — 1

“ஜாக்ரத், ஸுஷுப்தி எனும் ஆழ்ந்த நித்திரை ஆகிய அவஸ்தைகளை வலது மற்றும் இடது பாகமாய்க் கொண்டவளும், ஸ்வப்னாவஸ்தையையே தனது கர்ப்ப்பையாகக் கொண்டவளும், துரீயாவஸ்தையை தனது முகமாய்க் கொண்டவளும், துரீயாதீதம் எனும் நிலையை தனது ஹ்ருதயமாய்க் கொண்டவளுமான பரமஶிவனின் ப்ராணனாக விளங்கக்கூடியவளான ஶ்ரீத்ரிபுரஸுந்தரியையே சரணமடைவோம்!!”

“ஸ்வாதந்த்ரநாதர் எனும் மஹாயோகி ஶ்ரீஆதிநாத மஹாகுருவால் கட்டளையிடப்பட்டவராய், ஐம்பத்தோரு மாத்ருகாக்ஷரங்களை யோக மார்க்க ஸம்பந்தத்துடன் விளக்கும் முயற்சியோடு, பரமஶிவனாரின் உடுக்கையினின்று தோன்றிய மாஹேஶ்வர ஸூத்ரத்தினால் அக்ஷரமாத்ருகா யோக ஸம்பந்தத்தை அறிய முயன்றார்.

அவ்விஷயத்தில் தோல்வி அடைந்தவராய், கங்காலாசலம் எனும் மலையின் குஹையில் அமர்ந்து ஶ்ரீபரமேச்வரனைக் குறித்து த்யானத்தில் ஆழ்ந்தார். அவரின் த்யான பலனாலே ஶ்ரீசாம்ப பரமேஶ்வரரின் ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டு, ஶ்ரீபரமேஶ்வரரால் ஆகாச பரவெளியில் தோற்றுவிக்கபட்ட ஶ்ரீசக்ர மஹாயந்த்ரத்தைக் கண்டார். அந்த ஶ்ரீசக்ர யந்த்ரத்தை கண்டு பரமஶிவனால் மாத்ருகாக்ஷரங்களுக்கும், ஶ்ரீசக்ரத்திற்கும், ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரிக்கும், யோகமார்க்கத்திற்குமுள்ள ஒற்றுமையை உணர்ந்து, குருமூர்த்தியான ஶ்ரீபரமேச்வரானுக்ரஹத்தாலே “ஶ்ரீமாத்ருகா சக்ர விவேகம்” எனும் க்ரந்தத்தை இயற்றினார்.

மேற்கண்ட ஶ்லோகத்தில், ஶ்ரீபரமேச்வரனுக்கு ப்ராணனாய் விளங்கும் ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரி ஸமஸ்த ஜீவராசிகளின் ஐந்து நிலைகளின் வடிவில் விளங்குவதை விளக்குகிறார்.

1) கர்மங்களின் செயல்பாடுகள் மிகுந்த “முழிப்பு” எனும் “ஜாக்ரத்” பரதேவதையின் வலது பாகமாய் கூறப்பட்டது.

2) செயல்பாடுகளற்ற ஆழ்ந்த நித்திரை எனும் ஸுஷுப்தி ஸாக்ஷாத் ஶ்ரீபரதேவதையின் இடது பாகமாய் கூறப்பட்டது.

3) நினைவுகள் மட்டும் மிகுந்த (ப்ரத்யக்ஷ செயல்பாடுகளற்ற நினைவுகள் மட்டும் பிறக்கும்) ஸ்வப்னம் எனும் கனவு நிலை பரதேவதையின் கரப்ப ஸ்தானமாய் சொல்லப்பட்டது.

4) மேறெசொன்ன மூன்று நிலைகளையும் விழுங்கும் அதாவது தனக்குள் ஒடுக்கிக்கொள்ளும் துரீயம் எனும் நான்காவது நிலை பராஶக்தியின் முகமாய்ச் சொல்லப்பட்டது.

5) துரீயத்தையும் தாண்டிய துரீயாதீத மஹாஸ்திதி (மற்ற நான்கு நிலைகளையும் ஒடுக்கிக்கொள்ளும் நிலை) அம்பாளின் ஹ்ருதய ஸ்தானமாய் சொல்லப்பட்டது.

நான்காவதற்கும் ஐந்தாவதற்கும் சற்றே தான் வித்யாஸம்.

இவ்வைந்து நிலையும் பராஶக்தியான ஶ்ரீத்ரிபுரையின் அங்கங்களாக உருவகம் செய்யப்பட்டது.

நிர்குணையான ஶ்ரீபரமேச்வரி, பரமஶிவனுக்கு ப்ராணனாக விளங்குபவள். “காமேச்வர ப்ராணநாடி” என பரமேஶ்வரன் ஶிவனாக விளங்குவதற்கு காரணமாகிறாள்.

ப்ரகாஶ நிலையில் விளங்கும் த்ரிபுரை, விம்ரஶமாகிற காமேஶ்வரனுக்கு ஆதாரமாக விளங்குகிறாள். ஆதலால் “ப்ராணேஶ்வரி பரஶிவஸ்ய” என்று கூறப்பட்டது.

அத்தகைய ஶ்ரீத்ரிபுரா பகவதிக்கு அஞ்சலி செய்குவாம் என்கிறார் ஸ்வாதந்த்ரநாதர்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்– மயிலாடுதுறை ராகவன்Categories: Upanyasam

4 replies

 1. Great to start this. Is this going to be a series or just on off post?

  • Namaskaram Anna..

   Thought of Posting it as an off Post.. But I will try to Post it an Series Anna…

   Kamakshi Sharanam
   🙏🙏

 2. Where is this Grantham available? “ஶ்ரீமாத்ருகா சக்ர விவேகம்

  • You can find the Grantham in Exotic India Website Ji.. Both English As well as DevanagarI Scripts Available

   Kamakshi Sharanam

Leave a Reply

%d bloggers like this: