ஶ்ரீஜ்வாலாமுகி அம்பாள் :
ஹிமாசல ப்ரதேசத்தில் காங்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள “ஶ்ரீஜ்வாலாமுகி” எனும் அம்பாளின் ஆலயம் ஶ்ரீலலிதா பரமேச்வரி வீற்றிருக்கும் ஆலயங்களில் ப்ராசீனமான ஆலயம். தெய்வம் இருக்கிறதா!? எனும் சிலர் கேள்விகளுக்கு “இதோ இருக்கிறேன்” என்று ஸாக்ஷாத் ஶ்ரீபராம்பாள் கூறும்படியாக விளங்கும் மஹாத்புதமான க்ஷேத்ரம் ஜ்வாலாமுகி.
ஒன்பது அக்னி பிழம்புகள் எவ்வண்ணம் தோன்றுகிறது, எப்போதிருந்து தோன்றுகிறது என்று கண்டறிய முடியாத ஒரு புதிராகவே, அனாதி காலமாக அந்த ஆதிமஹாபராஶக்தி வீற்றிருக்கிறாள் அந்த ஆலயத்தில்!!
“உத்³யச்சந்த்³ரமரீசிஸன்னிப⁴முகீ²மேகாத³ஶாராப்³ஜகா³ம்ʼ
பாஶாம்போ⁴ஜவராப⁴யான் கரதலை꞉ ஸம்பி³ப்⁴ரதீம்ʼ ஸாத³ராத் .
அக்³னீந்த்³வர்கவிலோசனாம்ʼ ஶஶிகலாசூடா³ம்ʼ த்ரிவர்கோ³ஜ்ஜ்வலாம்ʼ
ப்ரேதஸ்தா²ம்ʼ ஜ்வலத³க்³னிமண்ட³லஶிகா²ம்ʼ ஜ்வாலாமுகீ²ம்ʼ நௌம்யஹம்”
— ஶ்ரீஜ்வாலாமுகி ஸஹஸ்ரநாமம் தஶவித்யா ரஹஸ்யம் ருத்ரயாமளம்
“உதயசந்த்ரனின் ஒளி போல் ஶீதளமான ப்ரகாசிக்கும் முகத்தைக் கொண்டவளும், பாஶம், தாமரை, வரம், அபயம் ஆகியவற்றை நான்கு கரங்களில் ஏந்தியவளும், சந்த்ர ஸூர்ய அக்னிகளை மூன்று நேத்ரங்களாய்க் கொண்டவளும், ப்ரேதத்தின் மீது வீற்றிருப்பவளும், சந்த்ரகலையை சூடியவளும், ஜ்வலிக்கும் அக்னிமண்டலமான ஶிகையை உடையவளும், ஜ்வலிக்கும் அக்னி போல் முகமுடைய ஶ்ரீஜ்வாலாமுகித் தாயாரையே ஸதா பஜிப்பாம்!!”
பகவதி ஶ்ரீஜ்வாலாமுகி அம்பாளின் த்யானத்தை ருத்ரயாமள தந்த்ரம் மேற்கண்டவாறு கூறுகிறது. ஆனால் ஆலயத்திலோ அம்பாளுக்கு எவ்வித உருவமும் இல்லை. பிண்டி அல்லது லிங்கம் போன்ற மூர்த்தங்களும் இல்லை. லிங்க மூர்த்தமானது பரஶிவனாருக்கு மட்டுமில்லை. அம்பாளுக்கும் உண்டு.
லிங்க மூர்த்தமாக அம்பாளை வழிபடும் முறையை ஶக்தி லிங்கம் என்று கூறுவர். பொதுவிலே நமது தேசத்திலே சுத்தமாக வழக்கில் இல்லாத, உபாஸகாளுக்கு மட்டும் தெரிந்த “பகவதி ஶ்ரீகுப்ஜிகா” எனும் குப்ஜாம்பாளை லிங்காகாரமான மூர்த்தத்திலேயே வழிபடும் வழக்கம் நமது தேசத்திலேயே இருந்திருக்கிறது.
ஆனால், இந்த ஜ்வாலாம்பாள் க்ஷேத்ரத்திலே நெருப்பே அம்பாள்!! ஏதோ செயற்கையான நெருப்போ, அல்லது தீப ஒளியோ அல்ல!! காலங்காலமாக, யுகயுகாதிகளாக ஶ்ரீபராஶக்தியான ஜ்வாலாமுகி அக்னிபிழம்பாக ஜ்வலித்துக்கொண்டிருக்கிறாள்.
நவஶக்திகளி வடிவில் நவஜ்யோதிகள் அங்கே ப்ரகாசித்துக்கொண்டிருக்கிறது. “மஹாகாளி”, “மஹாலக்ஷ்மி”, “மஹாஸரஸ்வதி”, “சண்டிகா”, “அன்னபூர்ணா”, “ஹிங்க்லாஜ் மாதா”, “விந்த்யவாஸினி” ,”அம்பிகா”, “அஞ்சனா” எனும் நவமஹாஶக்திகள் ஸ்வயம் ஜோதியாக ஜ்வலித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒன்பது ஜ்யோதிகள் எப்படி!? ஏதேனும் “Natural Gas” எனும் இயற்கை எரிவாயு அங்கே தோன்றுகிறதா!? அன்றி வேறேதேனும் “Combustible Materials” அங்கே விளங்குகிறது என்று அனேக “Scientists ” பரிசோதித்துப் பார்த்தாயிற்று. ஜவஹர்லால் நேரு தலைமையில் கூட நிறைய ஆராய்ச்சியாளர்களை வைத்துக்கொண்டு பரிசோதனைகளை செய்தாயிற்று. ஆனால் அவ்வண்ணம் எந்தவிதமான இயற்கை எரிவாயு அல்லது எரியூட்டக்கூடிய வஸ்து எதுவேமே இல்லை என்பதே அனைவருக்கும் கிடைத்த பதில்!!
அனாதி காலமாக ஜ்யோதி வடிவிலே ஸாக்ஷாத் ஶ்ரீமஹாபராஶக்தி ப்ரகாசித்துக்கொண்டே விளங்குகிறாள். ஶ்ரீதுர்கா ஸூக்தம் கூட “தாமக்னி வர்ணாம்” என்றும் “ஜாதவேதோ துர்கா”வின் ஸ்வரூபத்தை ஸூக்ஷ்மமாய்க் கூறுகின்றதே!!
அங்கே இயற்கை எரிவாயு தான் உள்ளது என்று கருதி அரசாங்கம் கூட அவற்றை எடுக்க நிறுவனங்களை நியமித்து முயற்சி எடுத்த போதும் கூட அவ்வண்ணம் அத்தகைய எரிவாயுக்களை கண்டறியமுடியவில்லை என்பது பெரும்புதிர் அல்லவா!!.
எந்தவிதமான தோற்றுவாயும் இல்லாமல் ஜ்யோதிஸ்வரூபங்கள் அனாதி காலமாகவே விளங்கும் பெரும் புதிருக்கு விளக்கம் கூற யாராலேயும் இயலவில்லை.
“இதோ இருக்கிறேன்!!” என்று ஆத்மஸ்வரூபத்தின் ப்ரதிபிம்பமாக ஜ்யோதி மூர்த்தமாக ஶ்ரீலலிதாம்பாள் நவவடிவில் விளங்கும் மஹாதிஶயமே இது!!
நவஜ்யோதிகளும் நீல நிறத்தில் விளங்குகிறது. தொட்டாலும் சுடுவதில்லை. அந்த ஜ்யோதிகளை நாம் ஸ்பர்சிக்கலாம்!! நிவேதனம் செய்யலாம்!!
காலத்தைக் கடந்து விளங்கும் அத்புதம்!! காலத்தையே பக்ஷிக்கும் காலஸங்கர்ஷிணி அல்லவா அவள்!!
முகலாய மன்னனான அக்பர் அந்த ஜ்யோதியை அனைத்து விட அனைத்து முயற்சிகளையும் செய்தான். தண்ணீர் வெள்ளத்தைப் பாய்ச்சி, இரும்பால் அவற்றை மூடி என அவற்றை அனைக்க அவன் செய்யாத முயற்சி இல்லை.
அவையெல்லவாற்றையும் தாண்டி அந்த ஜ்யோதிகள் எரிந்துகொண்டிருந்தது. இன்றும் ஶ்ரீமஹாசண்டி ஜ்யோதி எரிந்துகொண்டு விளங்குகிறாள்.
அம்பாள் ப்ரத்யக்ஷமாக விளங்கும் முக்யமான க்ஷேத்ரம்.
இந்த நவஜ்யோதிகள் எப்படி தோன்றுகிறது. எப்போது தோன்றியது!? இதன் தோற்றுவாய் என்ன!? எனும் கேள்விகளுக்கான பதில்களை காலத்தைத் தவிர யாரால் கூறவியலும்!?
தொடர்ந்து ஶ்ரீஜ்வாலாமுகி அம்பாளின் மஹிமையை சிந்தனை செய்வோம்!!
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Namaskaram sir
Hearing about this sthalam for the first time…Your narration about Ambal increases bhakthi in one manifold..
thank you
Thanks a lot Sir
Kamakshi Sharanam
Sir have you been there? How to reach there, say from Simla ?
Buses are Available From Shimla to KangrA I think.. 170 Km from ShimlA to kAngrA.
Kamakshi Sharanam