120.13. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

Jaya Jaya Sankara Hara Hara Sankara – “Determining the time period of Acharya based on the uncertain time periods of other people is like sending one blind man to act as guide to another blind man!”. The above quote from Sri Periyava pretty much summarizes this chapter

Many Jaya Jaya Sankara to Smt. Sowmya for the creative drawing representing the Buddha and Jain lineage & audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
_____________________________________________________________________

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

பூர்வகால புத்தர்களும்ஜினர்களும்

இப்போது ஆசார்யாள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்றால் புத்தரும் ஆசார்யாளும் ஸமகாலத்தவராகி விடுவார்களே என்ற ஆக்ஷேபணைக்குப் பதிலாக இன்னொரு காரணமும் கிடைக்கிறது. (அது என்னவென்றால்) புத்த மதத்தைக்கூட கௌதம புத்தர் என்பவர்தான் தோற்றுவித்தாரென்றால் அது தப்புத்தான் என்று அந்த மதஸ்தர்களே சொல்கிறார்கள். “சுத்தோதனரின் பிள்ளையாகிய கௌதம புத்தர் 24-வது புத்தர்தான். அவருக்கு முந்தி 23 புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அதனால் எங்கள் மதமும், நீங்கள் வேதத்தைச் சொல்லிக் கொள்கிற மாதிரி, அநாதிதான்” — என்று பௌத்தர்கள் சொல்வார்கள். இதற்கு ஆதரவாக நம்முடைய இராமாயணத்திலும் சான்று இருக்கிறது.

பரதன் காட்டுக்குப்போய் ராமரைத் திருப்பி அழைத்துக்கொண்டுவர முயற்சி செய்கிறானல்லவா? அவனோடு போனவர்களில் ஜாபாலி மஹர்ஷியும் ஒருத்தர். அவர் எதையாவது சொல்லி ராமரைப் பித்ரு வாக்ய பரிபாலனத்தை விடும்படிப் பண்ணி, அயோத்திக்குத் திரும்பும்படிப் பண்ணணும் என்பதற்காக – (அல்லது) ராமருடைய வைதிக அபிமானத்தை லோகத்துக்கு வெளிப்படுத்தணும் என்பதற்காக – ஒரே அவைதிகமாகவும் நாஸ்திகமாகவும் ஆர்க்யூ பண்ணுகிறார். ராமருக்கு மஹா கோபம் வருகிறது. அப்போது அவர் ஜாபாலியின் அவைதிக வாதத்தைக் கண்டிக்கும்போது அதை புத்தரின் கொள்கை என்றும், அப்பட்டமான நாஸ்திகமாகிய சார்வாகம் மாதிரிதான் அதுவும் ஒன்று என்றும் சொல்லி, ‘இப்படிப்பட்ட கொள்கைக்காரர்களின் மூஞ்சியிலேயே முழிக்கப்படாது; திருடனை தண்டிப்பதுபோல இவர்களையும் தண்டிக்க வேண்டும்’ என்கிறார்1. இங்கே புத்தர் என்ற பெயரோடு, புத்தருக்கு அந்த மதத்தில் வழங்குகிற இன்னொரு பெயரான ‘ததாகதர்’ என்பதையும் ராமர் சொல்கிறார். இதனால் அப்போதே பௌத்தம் இருந்திருப்பது தெரிகிறது. ஆனால் கௌதம புத்தர் சொன்ன நல்லொழுக்கங்கள், புலனடக்கம், உசந்த த்யானம் ஆகிய எதுவுமில்லாமல் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்ற கொள்கை போலிருந்திருக்கிறதென்றும், அதுதான் மாறி மாறிச் சார்வாகத்திற்கு ரொம்பவும் மாறுபட்ட ரூபத்தில் கௌதம புத்தரால் ப்ரசாரம் செய்யப்பட்டிருக்கிறதென்றும் தெரிகிறது.

ஜைனர்களும் தங்களுடைய கொள்கை ரொம்பப் புராதனமானது, தங்களுடைய இருபத்துநாலு தீர்த்தங்கரர்களில் கடைசியானவர்தான் இப்போது நாம் அந்த மத ஸ்தாபகராகச் சொல்லும் ஜினர் (மஹாவீரர்) என்கிறார்கள். புராணங்களிலேயே ஒரு அவதார புருஷராகச் சொல்லப்பட்ட ரிஷபர்தான் அவர்களுடைய முதல் தீர்த்தங்கரர். இதை ஒப்புக் கொள்ள யோசிக்கும் ஓரியண்டலிஸ்ட்கள்கூட மஹாவீரருக்கு முந்தியவராக, 23-வது தீர்த்தங்கரராகச் சொல்லப்படும் பார்ச்வநாதர் கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள்.

‘ப்ரஹ்மஸுத்ரத்தில் பௌத்த கண்டனம் வருகிறதே! க்ருஷ்ண பரமாத்மா கீதையில் அந்த ப்ரஹ்ம ஸுத்ரத்தை “ப்ரஹ்மஸுத்ர பதைச்சைவ ஹேதுமத்பிர் விநிச்சிதை:”2 என்கிறாரே! அதனால் ப்ரஹ்ம ஸூத்ரம், கீதை எல்லாமே புத்தருக்குப் பிற்பாடுதான்’ என்று வாதம் செய்கிறவர்கள் இந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்லும் கௌதம புத்தருக்கு முந்தியும் அநேக புத்தர்கள் இருந்திருக்கிறார்கள்; அவர்கள் சொன்ன பௌத்த மதமும் இருந்திருக்கிறது. ஆகையால் ப்ரஹ்ம ஸூத்ரம் பண்ணிய வ்யாஸரும், கீதை உபதேசித்த க்ருஷ்ணரும் கௌதம புத்தருக்குப் பிற்பட்டவர்கள் என்று கொண்டுவிட வேண்டிய அவச்யமேயில்லை.

இதில் கீதை விஷயமாக இன்னொரு ஸமாசாரம். ஆசார்யாள் (கீதா) பாஷ்யத்தில் “ப்ரஹ்மஸூத்ர” என்ற வார்த்தையை அந்தப் பெயர் கொண்டதும், அவரே ப்ரஸித்தமான பாஷ்யம் எழுதியதுமான புஸ்தகம் என்றே அர்த்தம் பண்ணவில்லை! “ப்ரஹ்மண: ஸூசகாநி வாசகாநி ப்ரஹ்மஸூத்ராணி” என்று, அதாவது “ப்ரஹ்மத்தை ஸூசனை செய்யும் வாசகங்களாக உள்ளவை” என்றே அர்த்தம் பண்ணியிருக்கிறார். இதிலிருந்து கீதோபதேசத்துக்குப் பிறகே வ்யாஸர் கலி ஆரம்பத்தில் சதுர் வேத விபாகம் பண்ணித் கொடுத்தபோதோ அதற்கும் அப்புறமோதான் ப்ரஹ்மஸூத்ரம் இயற்றினாரென்று ஊஹிக்கலாம். இதை உறுதிபடுத்துவதாக, ஸ்ம்ருதியாகிய கீதையின் கருத்துக்களையே சில இடங்களில் ப்ரஹ்மஸூத்ரத்திலும் சொல்லி, “ஸ்மர்யதே“: “ஸ்ம்ருதியில் இப்படிச் சொல்லியிருக்கிறது” என்றும் தெளிவாக, கீதை அதற்கு முற்பட்ட நூல் என்று, தெரிய வைத்திருக்கிறது.

சொல்ல வந்த விஷயம்: அநேக ஸித்தாந்தங்கள் இப்போதுள்ள புஸ்தகங்களைக் கொண்டு அவற்றுக்கு நாம் நிர்ணயம் செய்கிற காலத்திற்கு ரொம்ப முந்தியே ஏதோ ஒரு ரூபத்தில் இருந்து வந்திருக்கின்றன. இப்படி ஸெளத்ராந்திகம், வைபாஸிகம், சூன்யவாதம் ஆகிய பௌத்த ஸித்தாந்தங்களும் ஆசார்யாளின் காலத்திலேயே இருந்து அவற்றை அவர் கண்டித்திருக்கலாம். அவருக்கு அப்புறமே அஸங்கர், திங்நாகர், நாகார்ஜுனர் முதலியவர்கள் அவற்றுக்குப் புத்துயிர் தந்து விஸ்தாரம் செய்திருக்கலாம்.

இன்னொரு முக்யமான பாயின்டும் கவனிக்க வேண்டும்: இந்த மூன்று பேரைக் கிறிஸ்துவ சகாப்தத்தில் இன்னின்ன நூற்றாண்டு என்று அவர்கள் சொல்லியிருப்பதும் காளிதாஸன் ஸமாசாரம் மாதிரி நிச்சயமில்லாத அநுமானங்கள்தான்.

“மேகஸந்தேச காவ்ய”த்தில் காளிதாஸனே அஷ்டதிக் கஜங்களை ஒதுக்கிவிட்டு அந்த மேகம் மேலே போக வேண்டும் என்று சொல்லுமிடத்தில், ‘திக்-கஜம்’ என்பதை ‘திங்-நாக’ என்று சொல்லியிருப்பதைக்3 காட்டி, பௌத்தரான திங்நாகரை ஒதுக்க வேண்டுமென்பதைத்தான் சிலேடையாகக் கூறியிருக்கிறாரென்று ஒரு அபிப்ரயமிருக்கிறது! அப்படியானால் நமக்குக் காலம் தெரியாத, ஆனால் ஆசார்யாளுக்கு முந்தியவரான காளிதாஸரின் ஸமகாலத்தவராகவாவது திங்நாகர் இருந்திருக்க வேண்டும்.

நேபாள ராஜ வம்சாவளியின்படி நாகார்ஜுனரின் காலம் கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்கே போய் விடுவதாகவும் தெரிகிறது.

இப்படியெல்லாம், ‘இதுதான்’ என்று நிச்சயமாகச் சொல்ல முடியாதவர்களின் காலத்தைக் கொண்டு ஆசார்யாள் காலத்தை கணிக்கப் பார்ப்பது கண் தெரியாதவனுக்கு வழிகாட்டியாக இன்னொரு கண் தெரியாதவனை அனுப்பி வைப்பது போலத்தானிருக்கிறது!

______________________________________________________________________
1 வால்மீகி ராமாயணம், அயோத்யா காண்டம், 109-வது ஸர்கம் 34-வது ச்லோகம்.

2 XII. 4 உதாரணம் : ப்ரஹ்ம ஸுத்ரத்தின் II. 3. 45; IV.2.21.

3 ச்லோகம் 14

____________________________________________________________________

Determining the period of Sri Sankara’s life

Buddhists and Jains of early times

To the argument that if the period of Acharya is 6 BC, it would amount to Acharya and Buddha belonging to the same time period, a counter argument is available. (It is this): Though Gautama Buddha is believed to have founded Buddhism, people of that religion themselves say it is wrong. Buddhists claim “Gautama Buddha, the son of Suddhodana (शुद्धोदन) was only the 24th Buddha.  There were 23 Buddhas before him. Therefore, our religion is also very ancient – similar to what you say about your Vedas”. To support this, there is evidence in our Ramayana also.

Bharata went to the forest to try and bring back Rama, isn’t it?  One of the persons who accompanied him was Jaabaali (जाबालि) Maharishi.  With a view to convince Rama to give up his resolve to implement the command of his father (Pitru Vaakya Paripalana [पितृवाक्य परिपालन] and return to Ayodhya, – (or) to reveal to the world Rama’s respect for Vedic traditions – he [Jaabaali] puts forth arguments which are completely non-Vedic and atheistic.  Rama gets very furious.  While condemning Jaabaali’s non-Vedic arguments Rama says that it is the doctrine of Buddha and was similar to Chaarvaakam (चार्वाकम्‌) which is blatant atheism and says ‘one should not even look at such a person; such people should be punished in a manner how thieves are punished’. Here, along with the name Buddha, Rama also mentions the name ‘Tathāgata (तथागत)’, which is another name for Buddha prevalent in that religion. From this, it can be inferred that Buddhism existed even at that time.  However, it appears the religion did not have any of the values of moral conduct, control of senses, high level of meditation, etc. advocated by Gautama Buddha, but was a very casual one with no values, and that it gradually evolved and was preached by Buddha in a manner totally different from Chaarvaakam.

Jains also claim that their doctrines are very ancient and that the Jina (Mahaveera), who we consider as having founded that religion was only the last of their twenty four Tirthankars.  Their first Tirthankar was Rishabha, who is described as a divine incarnate in our Puranas.  Even the Orientalists who hesitate to accept this, say that Parsvanath, the twenty third Tirthankar prior to Mahaveera, could have lived during 9th century BC.

People argue saying “Condemnation of Buddhism is there in the Brahmasutra itself! Bhagavan Krishna has referred to the Brahmasutra in the Bhagavad Gita while stating “brahmasutra padaischaiva hetumadbhir vinischitaihi”2! (ब्रह्मसूत्र पदैश्चैव हेतुमद्भिर् विनिश्चितैः).  Therefore, people who argue that Brahmasutra, Gita are all only after Buddha” should note these things. There were several Buddhas even before the Gautama Buddha they are referring to, and the Buddhism they are talking about has also existed [since ages].  Therefore, it is not necessary to assume that Vyasa who had written the Brahmasutra or Krishna, who taught the Gita lived later to the period of Gautama Buddha.

In this context, there is another point with reference to the Gita. In the (Gita) Bhashyam of Acharya [Sri Adi Sankara], he has not taken the word “Brahmasutra” as denoting the book by that name for which he has also written a Bhashyam!  He has only meant it as “brahmana: soochakani vaachakani brahmasutrani”( ब्रह्मण​: सूचकानि वाचकानि ब्रह्मसूत्राणि ); that is, “they are words which subtly hint at Brahmam”. From this it can be inferred that Vyasa wrote the Brahmasutra only after the Gitopadesha (गीतोपदेश), either before he categorised the Vedas into four in the beginning of Kali, or maybe later. As a matter of confirmation of this, while quoting the teachings of the Gita in Brahmasutra, it is given as “smaryate” (स्मर्यते) to indicate that “it is mentioned in the Smritis like this” and  to clearly convey that Gita is a text that precedes Brahmasutra.

The matter I wanted to convey is this: Many philosophies have existed in some form or the other for a long time, prior to the period of estimates arrived at based on the texts we have.  Thus, it is possible that Buddhist philosophies like Sautraantika (सौत्रान्तिक​), Vaibhasika (वैभासिक​), Sunyavada (शून्यवाद), etc. existed during the time of Acharya and that he had refuted them. Also, probably people like Asanga, Dingnaga, and Nagarjuna gave a fresh lease of life to these philosophies and expanded them later.

Another important point also should be noted.  What they [the researchers] have said about their time period in the Christian era are also only assumptions as in the matter of Kalidasa.

In the epic “Meghasandesha” (मेघसन्देश:), Kalidasa says that the clouds should ignore the Ashtadiggajas and move forward! Here, he uses the word Ding-naga instead of the word ‘dik-gaja’; There is an opinion that Kalidasa has indirectly stated that the Buddhist Dingnaga should be ignored! If so, Dingnaga must have been a contemporary of Kalidasa – whose time period we do not know – but who lived earlier than Acharya [Sri Adi Sankara].

It is learnt that as per the Nepalese royal chronicles, the period of Nagarjuna is estimated to be to the beginning of 13the century BC itself.

Determining the time period of Acharya based on the uncertain time periods of other people is like sending one blind man to act as guide to another blind man!
______________________________________________________________________

1 Valmiki Ramayana, Ayodhya Kanda, 109th Sarga, 34th verse

2 XIII.5 example: II.3.45; IV.2.21 of Brahmasutra

3 Verse 14
_____________________________________________________________________
Audio



Categories: Uncategorized

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading