“மூலசக்திர் ப்ரஹ்மவித்யா ஆதிலக்ஷ்மீரிதி ச்ருதா
ஆத்மசக்திர் ஜகத்தாத்ரி ராஜீவ ஸத்ருசப்ரபா”
ஆத்மசக்தி — ஶ்ரீலலிதையான காமாக்ஷித் தாயார் கேவலாத்மஸ்வரூபிணியாக ஜ்வலிப்பவள். ப்ரஹ்மாவிலிருந்து புழு பர்யந்தம் விளங்கக்கூடிய ஸமஸ்த ப்ராணிகளுடைய ஹ்ருந் மத்யத்திலேயும் ஆத்மஸ்வரூபத்துடன் பொலியும் ஆனந்த ரூபி இவளே. பஞ்சகோசங்களுக்குள்ளே ஆனந்தகோசத்தின் மத்தியிலே அங்குஷ்ட மாத்ர அளவில் விளங்கும் ஆத்மா ஸாக்ஷாத் பரதேவதையின் வடிவே. தத்வமஸி, ப்ரஹ்மைவாஹஸ்மி முதலிய வேத வாக்யங்கள் வடிவாய் விளங்குபவள் ஸாக்ஷாத் ஶ்ரீபராம்பாளே என்பதை பஹ்வ்ருச உபநிஷத் கூறும். பாவனோபதிஷத் இதையே “ஸ்வயமேவ ஆத்மா லலிதா” என்கிறது. காமகோஷ்டத்தில் ஸ்தூலமாக பாசாங்குசங்களுடனும், கரும்புவில் புஷ்பபாணங்களுடனும் விளங்கும் ஶ்ரீபரதேவதா காமாக்ஷியே ஆத்மஸ்வரூபிணியாக ஆத்மசக்தியாக விளங்குகின்றாள்.
ஜகத்தாத்ரி — ஸம்ஸ்த ப்ரபஞ்சங்களையும் தாங்கும் தாயார். ஸகல ப்ரஹ்மாண்டங்களும் எந்த பராசக்தியின் மணிவயிற்றில் விளங்குகின்றதோ அவளே ஸாக்ஷாத் காமாக்ஷி. ஶ்ரீரஹஸ்யநாம ஸாஹஸ்ரம் தாயாராகிய இவளையே “ஶ்ரீமாதா”, “ஜனனி”, “விதாத்ரி”, “ப்ரஸவித்ரி”, “அம்பா”, “அம்பிகா”, மாதா”, “அயி”, “லலிதாம்பிகா” எனும் பதங்களால் குறிக்கிறது. ஸமஸ்த கோடி ப்ரஹ்மாண்டங்களுக்கும் ஏக தாயாராக விளங்குபவள் ஸாக்ஷாத் காமாக்ஷி. ஜகத்தாத்ரியாக ஜகத்தை பரிபாலம் பண்ணுபவள். தாயாராக உலகை போஷிப்பவள். ரக்ஷிக்கும் கருணாகரியானவள். ஆகையால் ஜகத்தாத்ரி. அல்லது “ஜகத்தாத்ரி சண்டிகா” எனும் துர்கா பரமேச்வரியின் ஒரு ஸ்வரூப பேத வடிவில் விளங்குவதாலும் இவள் ஜகத்தாத்ரி.
ராஜீவ ஸத்ருச ப்ரபா — தாமரைப்பூவைப் போல அழகிய மேனி நிறம் கொண்டவள். செந்தாமரைப்பூ சிவந்து விளங்குவது போல் சிவந்த திருமேனியைக் கொண்டவள் பரதேவதை. பொதுவாக உதித்து வரும் கோடி ஸூர்யர்களைப் போலும், செம்பருத்தி போலும் சிவந்து விளங்குபவள் ஶ்ரீலலிதை என்பதை அனேக தேவீ த்யானங்கள் கூறுகின்றது. போலே, தாமரையினுடைய காம்பீர்யம், ஜாஜ்வல்யம் முதலியவற்றைப் போன்ற ஸ்வரூபத்தைக் கொண்டவள் என்று ஶ்ரீதேவியின் த்யானம் அம்பாளைக் கூறுகின்றது. ஸஹஸ்ரதளமான ப்ரஹ்மரந்த்ரத்தின் மத்தியில் விளங்குபவள் என்றும் இந்த நாமா ஸூசிப்பதாகவும் அர்த்தம் கொள்ளலாம்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Very nice explanation
Mahapetryava kadaksham paripooranam.
Excellent post as always !! The way you write makes all the ppl surrender to Her lotus Feet for ever !!
Ambaal Sharanam !