ஶ்ரீமூகாச்சார்யாள் ஶ்ரீமூகபஞ்சசதியில் காமாக்ஷி அம்பாளின் பதினைந்து ரூபங்களை ஆர்யா சதகத்தின் இறுதி பதினைந்து ஸ்லோகங்களிலே ஆஸ்சர்யமாகக் கூறியுள்ளார். அந்தந்த தேவியரை உபாஸிக்கும் ஸமயம் ஆஞ்ஞா சக்ரத்தில் தோன்றும் ஒளி நிறமும், அநாஹதத்தில் எழும் த்வனியும் பின்வருவமாறு.
மூகாச்சார்யாள் கூறியுள்ள காமாக்ஷி பராபட்டாரிகையின் ரூபபேதம், ஒளியின் நிறம், சப்தம் ஆகியவை!!
1) சபரீ(வேடுவச்சி) — கருநீலம் கலந்த பச்சை — புல்லாங்குழல் நாதம்
2) ராஜமாதங்கி — பச்சை — பச்சைக்கிளி குரல்
3) மஹா துர்க்கா — ஊதா நீலம் — தும்பி
4) சாமுண்டா — கருப்பு — பேரீ நாதம்
5) அன்னபூர்ணா — சிவப்பு கலந்த மஞ்சள் — யாழ் ஓசை
6) வாராஹீ — தங்கம் கலந்த கறுப்பு — உடுக்கை
7) ஸ்வயம்வராம்பா — தங்க மஞ்சள் — கொட்டும் அருவியின் ஓசை
8 ) ஸரஸ்வதி — ஸ்படிக வெண்மை — ம்ருதங்கம்
9) பத்ரகாளி — எஃகு கறுப்பு — அக்னி அலையோசை
10) த்ரிபுரபைரவீ — ரத்தச்சிவப்பு — தேனீ
11) காமகலாம்பா — அடர் பச்சை — பல ஓசைகள்
12) குலகுண்டலினி — பலவண்ணங்கள் — ஹம்ஸஸ்ஸோஹம்
13) ஹம்ஸினி — உதிக்கும் சூரியனின் சிகப்பு — ஹ ஸ நாதம்
14) பிந்து — அருணச்சிவப்பு அல்லது பச்சை — அம் எனும் ஸப்தம்
15) சித்வ்யோமம் — வெண்மை — நிஸப்தம்
ஶ்ரீமத் பஞ்சதசாக்ஷரத்தின் பதினைந்து எழுத்துக்களுக்கும் காமாக்ஷி மஹாத்ரிபுரஸுந்தரியின் இப்பதினைந்து வடிவங்களே தேவதைகள். பதினாறவதான கலை “அமா” என்பது. பதினைந்தான வெண்மையைக் கடந்த துல்யசிகப்பு நிறம் கொண்டது. அந்த சிகப்பில் வெண்மையும் ஒடுங்கும். மிகவும் மெல்லிய வடிவுள்ளது. மின்னல் போன்ற ஜ்யோதியுடன் கூடியது. அந்த “அமா” எனும் நிலையே ஶ்ரீமத்காமாக்ஷி லலிதா த்ரிபுரஸுந்தரி மஹாபராபட்டாரிகையின் வாஸ்தவமான ஸ்வரூபமாம்.
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Upanyasam
Leave a Reply