120.11. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatest chronicler of all time digs deep in into the timelines of the great poet Shri Kalidasan and their contemporaries.

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for another judicious sketch and audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

காளிதாஸன் விஷயம்

அவர்கள் சொல்கிற ஒரு பாயின்ட் காளிதாஸனை ஆசார்யாளின் கால மூத்தவரான குமாரிலபட்டர் மேற்கொள் காட்டியிருக்கிறாரென்பது. காளிதாஸன் கி.மு. ஆறாம் நூற்றண்டு இல்லை என்கிறார்கள். ரொம்ப முந்தி அவருடைய காலத்தைக் கொண்டு போனால் கூட புஷ்யமித்ர சுங்கனின் பிள்ளையான அக்னிமித்ரனின் ஸமகாலத்தவராகத்தான் அவர் இருந்திருக்க முடியும்; ஏனென்றால் அவருடைய “மாளவிகாக்னிமித்ர”த்தில் கதாநாயகனே இந்த அக்னிமித்ரன்தான் என்கிறார்கள். ‘புஷ்யமித்ரன் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுதான். அதனால் காளிதாஸனை கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குக் கொண்டுபோக இடமில்லை’ என்கிறார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லும் இந்த கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக் கணக்கும் மெகஸ்தனிஸை மையமாக வைத்து மௌர்ய காலத்தை நிர்ணயம் பண்ணி, மௌயர்களில் கடைசியாயிருந்த ராஜாவின் ஸேநாதிபதியாயிருந்த புஷ்யமித்ரனே அப்புறம் அதிகாரத்தைக் கைப்பற்றினான் என்பதில்தான் அநுமானிக்கப்பட்டிருக்கிறது. மௌர்யகால ‘பேஸி’ஸே (அடிப்படையே) தப்பாயிருக்கக்கூடும் என்றுதான் பார்த்தோமே! அதையொட்டி அவர்கள் தங்களுடைய கி.பி. நாலாம் நூற்றாண்டு நிர்ணயம் வரையில் நமக்கு விட்டுக் கொடுக்க ந்யாயமிருக்கிறது என்றும் பார்த்தோமே! இதுவும் (கி.மு. இரண்டாம் நூற்றாண்டு) அந்த காலகட்டத்துக்குள்ளேயே வந்துவிடுவதால், “இப்படித்தான்” என்று அவர்கள் அடித்துச் சொல்வதற்கில்லை.

நம் புராணாதிகளின் கணக்குப்படி கி.மு. 1500-ல் ஆரம்பித்த மௌர்ய வம்சம் அப்புறம் முன்னூறு வருஷத்துக்கு மேல அரசாண்ட பிறகு சுங்க வம்ச ஆட்சியைப் புஷ்யமித்ரன் ஏற்படுத்தியிருக்கிறான். எனவே அது கி.மு. 1200-ஐ ஒட்டியிருக்கும். காளிதாஸன் அவனுடைய ‘காண்டெம்பரரி’ என்றால் அவர் காலமும் அவ்வளவு முற்பட்டுப் போய்விடும். ஆசார்யாள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்ற நம் நம்பிக்கைப்படியே காளிதாஸன் அதற்கும் ஆறு நூற்றாண்டு முந்தியவர் என்றாகிவிடும்.

ஆனால் சுங்கர்களைப்பற்றி அவர் எழுதியிருப்பதால் அவரே அந்தக் காலத்தவர்தான் என்று சொல்லலாமா? இன்றைக்குங்கூட யாராவது புது ராமாயண காவியம் எழுதலாம். அதனால் இவர் ராமருடைய ஸமகாலத்தவர் என்பதா? சுங்கர் காலமே காளிதாஸன் காலத்துக்கு upper limit என்றுதான் சொல்ல முடியும்; அதற்கு முந்தி அவர் காலம் இருக்க முடியாது என்றே அர்த்தம். பிந்தி இருக்கலாம். அதைப்பற்றி ஏதாவது தெரிகிறதா?

‘காளிதாஸன் விக்ரமாதித்யனின் காலம், அவர் அவனுடைய ஸபையிலிருந்த நவரத்னங்களில் ஒருத்தர்’ என்று நம் தேசத்திலேயே வெகு காலமாக நம்பிக்கை இருக்கிறது. விக்ரம சகாப்தம் கி.மு. 57-ல் ஆரம்பித்ததாகவே சாஸ்திரஜ்ஞர்களும் சொல்கிறார்கள். இப்படியிருக்க அவரை எப்படி கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்குக் கொண்டு போவது?’ என்று கேட்கலாம்.

கி.மு. 57-லிருந்த விக்ரமாதித்யனுக்கு வேறாக இன்னொரு விக்ரமாதித்யன் கலியுகத்தின் 2500-வது வருஷத்தையொட்டி, அதாவது, கி.மு. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தானென்றும், இவனைத்தான் ‘ராஜ தரங்கிணி’யில் சொல்லியிருக்கிறதென்றும் ஒரு அபிப்ராயமிருக்கிறது. காளிதாஸன் அவனுடைய காலத்தவர்தான் என்றும் சொல்கிறார்கள். நம் நம்பிக்கைப்படி ஆசார்யாள் அந்த நூற்றாண்டு முடியும் ஸமயத்தில் (509-ல்) அவதரித்திருக்கிறார். குமாரிலபட்டர் அந்த நூற்றாண்டு மத்தியில் பிறந்திருப்பார்.

நம் தேச நம்பிக்கையே இருந்தாலும் ஸரி, சாஸ்த்ரஜ்ஞர்களின் அபிப்ராயமிருந்தாலும் ஸரி, விக்ரமாதித்தன் என்பவனைப் பற்றி ஒன்றும் நிச்சயப்படுத்திச் சொல்லத் தெரியவில்லை என்றுதான் நடுநிலையிலிருந்து கொண்டு பார்த்தால் ஒப்புக் கொள்ள வேண்டிவரும். அவனைப் பற்றி சொல்லும் ‘ப்ருஹத்கதை,’ ‘காதா ஸப்தசதி’ முதலியவை நாவல்கள் மாதிரியான கதைகளாகவே இருப்பவை. புராணங்கள், ராஜதரங்கிணி முதலியவற்றின் ப்ராமாண்யம் (மெய்ம்மையுறுதி) இவற்றுக்கில்லை. வீர ஸாஹஸங்கள் செய்த ஒருவனுடைய ஆச்சர்யங்கள் நிறைந்த கதைகள் எந்த தேசத்து ஜனங்களுக்கும் வேண்டியிருக்கிற ஒன்று. அப்படி விக்ரமாதித்யன், மதனகாமராஜன் போன்றவர்களுடைய கதைகள் மிகுந்த ப்ரஸித்தி பெற்றுவிட்டன. இவர்களை சரித்ர புருஷர்களாக வைத்துக் கால நிர்ணயம் செய்யப் புறப்பட்டால் குழப்பமாகத்தானிருக்கிறது. ஒரு ஸமயத்தில் ஜனங்களை ரொம்பவும் வசீகரம் செய்யும் ஒருவன் தோன்றினால் அவன்மீது நிறையக் கதைகளை ஏற்றிவிடுவது வழக்கம். அப்படித்தான் உஜ்ஜயினியிலிருந்து ஆட்சி செய்த ஒரு விக்ரமாதித்யன், தாரா நகரத்திலிருந்து ஆட்சி செய்த போஜன் முதலியவர்களைப் பற்றி நடந்திருக்கிறது. போஜனின் காலத்தவனே காளிதாஸன் என்றும் நம் தேச நம்பிக்கையே இருக்கிறது. இப்படி நம் ஊரிலேயே இரண்டு வித நம்பிக்கை இருக்கும்போது ஒன்று தப்பாகத்தானே இருக்க வேண்டும்? நம் ஊர் நம்பிக்கை என்பதாலேயே நிஜம்தான் என்று சாதிக்க முடியாதல்லவா? இதையெல்லாம் பார்த்துத்தான் சிலர் இரண்டு காளிதாஸர்கள் இருந்ததாக அபிப்ராயம் சொல்கிறார்கள். விக்ரமாதித்ய ஸபையிலிருந்த நவரத்னங்கள் தன்வந்திரி, க்ஷபணகர், அமரஸிம்ஹன், சங்கு, வேதாளபட்டர், கடகர்ப்பரர், காளிதாஸர், வராஹமிஹிரர், வரருசி ஆகிய ஒன்பது பேர் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் எல்லாரும் ஸம காலத்தவர்கள் இல்லை என்று வேறு source-களிலிருந்து தெரிகிறது. இப்படியிருக்கும்போது எந்த விக்ரமாதித்யனை வைத்து எந்தக் காளிதாஸருக்கு எப்படிக் காலம் கணிப்பது? வல்லாளர் என்பவரின் “போஜ ப்ரபந்த”த்திலோ காளிதாஸரை போஜ ஸபையின் நவரத்னங்களில் ஒருவராகச் சொல்லியிருப்பதோடு, அவர்கூட இருந்த மற்ற ரத்னங்களில் பவபூதி, பாணர், தண்டி, ஸ்ரீஹர்ஷர் முதலிய எல்லாப் பெரிய கவிகளையும் சேர்த்திருக்கிறது! வேறு ஆதாரங்களிலிருந்து இவர்கள் நிச்சயமாக ஸமகாலத்தவரல்ல என்று தெரிகிறது!

சரித்ர புருஷனான சந்த்ரகுப்த விக்ரமாதித்யன் காலத்தில் காளிதாஸன் இருந்திருக்கலாம் என்பதுபோலச் சொல்லும் பல அபிப்ராயங்களும் ‘அநுமானம்’ என்று சொல்லக் கூடியவையாகத்தான் இருக்கின்றன; ‘ப்ரமாணம்’ என்றல்ல.

புஷ்யமித்ர சுங்கனுக்கு முன்காலத்தில் காளிதாஸன் இருந்திருக்க முடியாது என்று upper limit சொன்னாற்போல கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு அவர் காலம் இருக்க முடியாது என்று lower limit கட்டுவதற்கதிகமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முன்பாதியில் ஹர்ஷரின் ஆஸ்தான கவியாயிருந்த பாணர் “ஹர்ஷ சரித்ர” ஆரம்பத்தில் காளிதாஸனைப் பேர் சொல்லிப் புகழ்ந்திருக்கிறார். அதே காலத்தியதாக உள்ள ஒரு ராஜ சாஸனத்திலேயே காளிதாஸனின் பெயர் ஒரு ச்லோகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இரண்டாம் புலகேசியின் சாஸனம். ஐஹோளெ என்ற சில்ப முக்யக்வம் வாய்ந்த ஊரைச் சேர்ந்த சாஸனம். சக வருஷம் 556, அதாவது கி.பி. 634 என்று திருத்தமாகத் தேதி குறிப்பிட்டுள்ள சாஸனம். இதில் “ரவி-கீர்த்தி….பாரவி கீர்த்தி” என்று வார்த்தை விளையாட்டுச் செய்திருக்கிறது. கவிதையால் ஆச்ரயிக்கப்பட்ட காளிதாஸர் போலவும் பாரவி போலவும் கீர்த்தியுடன் ரவி கீர்த்தி என்பவர் விளங்குவதாக அந்த சாஸன ச்லோகம் தெரிவிக்கிறது:

விஜயதாம் ரவிகீர்த்தி:
கவிதாச்ரித காளிதாஸ பாரவி கீர்த்தி:

ஆகையால் காளிதாஸன் கி.பி. 634க்கு முன்னாடி என்று மட்டுமே தெரிகிறது. எவ்வளவு முன்னாடி? தெரியவில்லை!

நிச்சயமாகத் தெரியாத ஒன்றை வைத்து இன்னொன்றை எப்படி நிச்சயப்படுத்துவது? காளிதாஸர் காலத்தைக் கொண்டு குமாரிலபட்டர், ஆசார்யாள் ஆகியோருடைய காலத்தை கணிக்கப் பார்ப்பது இப்படித்தான்!

கோலாப்பூரில் அப்பா சாஸ்த்ரி என்று வித்யா வாசஸ்பதி பட்டம் வாங்கிய ஒருவர் இருந்தார். அவர் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே ஆரம்பத்தில் காளிதாஸர், மத்தியில் குமாரிலபட்டர், முடிகிற ஸமயத்தில் சங்கரர் என்று மூன்று பேரும் இருந்தார்கள் என்று அநேகப் புஸ்தகங்களைப் பார்த்து முடிவு பண்ணியிருக்கிறார். நம்முடைய புராணம், சமய இலக்கியம் ஆகியவற்றை மட்டுமின்றி ஜைனப் புஸ்தகங்களையும் பார்த்திருக்கிறார். மதம் என்று வரும்போது இரண்டுக்கும் ஒரே சண்டையாயிருந்துகூட, கால நிர்ணயங்களில் அவை எப்படி வித்யாஸமேயில்லாமல் ஒத்துப் போகின்றன என்பதை நாம் கவனிக்கும்போது, இப்படி opposite source-களிலிருந்து கிடைக்கிற ஒன்றேயான அபிப்ராயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்களாகவே இருக்கிறோம்.
______________________________________________________________

Determining the period of Sri Sankara’s life

Matter relating to Kalidasa

One of points they make (in support of their claim) is that Kumarila Bhatta[ [कुमारिल भट्टः], a senior to the times of Acharya, has quoted Kalidasa.  They say that Kalidasa does not belong to 6 BC; Even if we assumed that he belonged to an early period, he should have been only a contemporary of Agnimitra, the son of Pushyamitra Sunga; this is because the very hero of his ‘Malavikagnimitra’ (मालविकाग्निमित्रम्) is this Agnimitra. ‘The time period of Pushyamitra is 2nd century BC. Thus it is not possible to take Kalidasa’s period to 6 BC’ is their claim.

But this calculation of 2 BC arrived at by them is also based on the period of Mauryas, which they have arrived at by keeping Megasthenes as the centre point and the assumption that Pushyamitra who was the commander to the last king of the Mauryas had later taken over the reins.  However, we have already seen that the basis on which the period of Mauryas is determined could itself be wrong!  We have also seen that by the same assumption, it is possible that they could agree with us up to 4th century AD!  Since this (2nd century BC) also comes within that time period, they cannot emphatically state that their claim is true.

According to the calculations in our Puranas, the Maurya dynasty started in 1500 BC and ruled for over three hundred years and thereafter Pushyamitra established the reign of Sunga dynasty.  Therefore, it must have been closer to 1200 BC. If Kalidasa was his contemporary, his life period would also get advanced to that period. If, as per our belief, Acharya belonged to 6 BC, it would then mean that Kalidasa’s period was six centuries even prior to that.

However, can we say that he belonged to the same period of Sungas just because he had written about them?  Even today, anyone can write a new treatise of the epic Ramayana.  Can it then be said that the writer belongs to the period of Rama?  We can say that the period of Sunga is the upper limit for Kalidasa’s period; It only means that his [Kalidasa’s] period could not have been earlier than that.  It could only be later.  Is anything known about that?

There can be a question: “There is a belief since very long in our own country that Kalidasa was of the same period as that of Vikramaditya and that he was one of the nine gems in Vikramaditya’s royal court.  People well versed with the Sastras (Sastrajnas-शास्त्रज्ञ) also say that Vikramaditya’s era started in 57 BC.  That being the case, how can his period be considered as 6 BC?”

There is also a school of thought that different from the Vikramaditya of 57 BC, there was another Vikramaditya around the 2500 th year of Kali, that is, in the beginning of 6 BC and that he is the one referred to in Raja Tarangini.  They also say that Kalidasa belonged to this [the other Vikramaditya’s] period.  As per our belief, Acharya had incarnated towards the end of that century (in 509 BC).  Kumarilabhatta might have been born in the middle of that century.

Whether it is the belief of our own countrymen or the opinion of the people well versed with the Sastras (Sastrajnas), if we take a balanced view, we may have to accept that it is not possible to say with certainty anything about Vikramaditya. Books like ‘Bruhatkatha’ (बृहत्कथा), ‘Gaata Saptasati’ (गाथासप्तशती) etc. which talk about him are more of stories like in novels.  They do not have the legitimacy that the Puranas, Rajatarangini, etc. have.

Citizens of any nation do need to hear stories of astonishing, brave feats of heroes like him.  In that manner, stories of Vikramaditya, Madanakamaraja, etc. have become very popular.  It is confusing if we reckon them as historical characters and try to determine their time periods.  At any point of time, if there is a person who impresses people much, it is natural that many stories are attributed to him. The same has happened with Vikramaditya who ruled from Ujjain, Bhoja [भोज] who ruled from the city of Dhara [धारा] etc. There is also a belief in our country that Kalidasa was a contemporary of Bhoja.  Since there are two opinions within our own country, one of them should certainly be wrong; isn’t it?  Just because it is a belief in our country, we cannot insist that it is true.  After observing all these, some people opine that there were two Kalidasas.  It is said that the nine gems in the court of Vikramaditya were Dhanvantri, Kshapanaka, Amarasimha, Sanku, Vetalabhatta, Gatagarbha, Kalidasa, Varahamihira, and Vararuchi. It is understood from other sources that these people were not contemporaries.  In such a situation, the time period of which Kalidasa, taking into account which Vikramaditya can be determined?  Whereas in the “Bhoja Prabhanda” [भोज प्रबन्ध] of one Vallaala [वल्लालः], not only has Kalidasa been mentioned as one of the Navaratnas of the royal court of Bhoja, but the names of Bhavabhooti [भवभूतिः], Bana [बाणः] Dandi [दण्ड़ी], Sriharsha [श्रीहर्षः] etc. have also been added!  It is learnt from other evidences that these people were definitely not of the same time period!

Some estimates which say that Kalidasa could have lived during the time of the historic personality Chandragupta Vikramaditya is only an ‘assumption’ (अनुमानम्); they are not based on any ‘proof’ (प्रमाणम्).

Just as an upper limit was arrived that Kalidasa cannot be before the time of Pushyamitra Sungan, nothing is available to set a lower limit to show that his life could not have been beyond 7th century AD.  Bana, who was the royal poet of Harsha during the first half of the 7th century AD, has mentioned Kalidasa by name in his “Harsha Charitra”, and praised him.  In one of the royal edicts of the same period, the name of Kalidasa is mentioned in one of the verses.  It is an edict by Pulikesi II. The edict is in Aihole, a place well known for its sculptures.  The edict clearly mentions the year as Saka year 556, that is 634 AD.  In this edict, a play of words is seen; “Ravi Kirti….Bhaaravi Kirti” (रविकीर्ति….भारवि कीर्ति).  The verse conveys that one Ravi Kirti was great like Kalidasa and Bhaaravi who were famous for poetry.

‘sa vijayataam ravikeerti:
kavitaasrita kalidasa bhaaravi keerti:’

स विजयतां रविकीर्तिः
कविताश्रित कालिदास भारवि कीर्तिः

Thus it is clear that Kalidasa lived earlier to 634 AD.  How much earlier? This is not known!

How can an issue be determined based on something that is uncertain? Determining the life period of Kumarila Bhatta, Acharya etc. by basing it on the period of Kalidasa is like that!

There was a scholar, by name, Appa Sastry in Kolhapur who had earned the title ‘Vidya Vachaspati’ [विद्यावाचस्पति]. After referring many books, he has concluded that all the three persons lived during 6th century BC; Kalidasa in the beginning, Kumarila Bhatta in the middle and Sankara, towards the end [of the century].  He referred not only our Puranas and religious literature but also the books of Jainism.   We observe that there could be complete disagreements between these religions; nevertheless, they were in total agreement when it came to determination of time periods; hence, we have to necessarily accept the unified opinion obtained from such opposite sources.
__________________________________________________________________
Audio

 

 



Categories: Uncategorized

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading