ஶ்ரீகாமாக்ஷி லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் 4:

ஶ்ரீவித்யா காமாக்ஷி த்யான விமர்சம்

“காயத்ர்யோங்கார கோணே ஸா காமாக்ஷி வர்த்ததே ஸதா

ஆதிசக்தி ஸ்வயம்வ்யக்தா ஸர்வ விச்வஸ்ய காரணம்”

“இருபத்துநான்கு அக்ஷரங்களுடன் விளங்குவதான காயத்ரி மஹாமண்டபத்தில் ஶ்ரீபரதேவதையுடைய ஸ்தானம் காஞ்சிமா நகரில் விளங்குகின்றது. ஶ்ரீபுர தேவியான ஶ்ரீராஜராஜேச்வரி தனக்குரிய பஞ்சபூத ஸ்தலங்களில் முக்யமான சாக்த ஆகாச ஸ்தலமான காஞ்சியில்(மற்றவை அயோத்யா, மதுரா, மாயா, காசி) ச்ருஷ்டியின் ஆரம்பத்திலேயே மஹாபிலாகாச ரூபிணியாக ஆவிர்பவித்து விளங்கி வருகின்றனள்.

தேவ்யுபாஸனையில் கடாகாசத்திலோ அன்றி ஹ்ருதாகாசத்திலோ பராம்பிகையை ஶ்ரீசக்ர மத்யத்தில் உபாஸிக்கும் முறையே அந்தர்முக ஆராதனை. இதையே ஸஹஸ்ரநாமாவும் “அந்தர்முக ஸமாராத்யா” என்று கூறும்!!

கடாகாசத்தில் தேகத்திற்கு வெளியே ஶ்ரீசக்ரத்தையும் ஆவரண தேவதைகளையும் கல்பனை செய்து பூஜிப்பது அந்தர்முகாராதனையில் ஒரு வகை. ஹ்ருதாகாசத்திலே ஶ்ரீபராம்பாளை ஆவரண தேவதா ஸஹிதமாக உபாஸிப்பது மற்றொரு வகை. ஶ்ரீசங்கராச்சார்ய பகவத்பாதர் உபாஸித்தது இரண்டாவது வகையேயாம்!!

இரண்டு க்ரமமுமே, கைவல்ய மோக்ஷத்தை உண்டுபண்ணும்படியான அற்புதமான க்ரமங்கள்.

காஞ்சி மண்டலத்திலோ ஶ்ரீபரதேவதையான ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் ஸ்வயம் ஆகாச வடிவினளாகவே பொலிகிறாள். கடாகாசத்தில் ஶ்ரீசக்ரத்தை கல்பிக்க வேண்டிய அவச்யமின்றி காஞ்சி மண்டலத்தில் விளங்கும் பிலாகாசம் முழுவதுமே ஶ்ரீசக்ர மண்டலமாகவே விளங்குகின்றது.

ஆதலால், உபாஸகர்களின் ஶ்ரீசக்ரோபாஸனை, முக்யமாக ஸமயிகளின் உபாஸனை சீக்ரமாக ஸித்தியடையும்படியான ஒரு மஹத்தான க்ஷேத்ரம் பூஶ்ரீபுரமான காஞ்சிபுரம். கடாகாசத்தில் அம்பாளை பூஜித்த பிறகு பக்குவமடைந்த பின்னர் ஹ்ருதாகாசத்தில் ஶ்ரீசக்ர மண்டலத்தை பூஜிக்கும் வல்லமையை காமாக்ஷி அளிப்பாள். பின் அதன் பலனாக தன் ஸுஸ்வரூபத்தை உணர்த்தி கைவல்யத்தையும் அளிப்பாள்.

எனில், பரம ஶ்ரீவித்யோபாஸகர்களான ஸமயிகள் அம்பாளை ஆகாசரூபத்தில் உணரும் யோக்யதை பெற்றவர்கள். பஞ்சப்ரஹ்மங்களாலும் உணர இயலாத காமாக்ஷியை உணரும் யோக்யதையயை ஸாமான்யாளும் பெறும் வழி!!?

அதற்கெனவே அம்பிகை ரூபம் கொள்ள தீர்மாணித்தாள். ஸாவித்ரி கல்பத்தில் பந்தகன் எனும் அஸுரனை பதினெட்டுக்கர மஹாபைரவி வடிவில் வதைத்து, த்ரிமூர்த்திகட்கும் மற்றும் தேவர்களுக்கும் பாலாம்பிகையாய் தர்சனமளித்துப் பின் விச்வகர்மாவை ஆலயம் அமைக்கும் படியாகச் செய்தாள்.

சதுராம்னாய வடிவான சதுர்வேதங்களும் நான்கு சுவர்களாய் அமைய, ப்ரகட காயத்ரியின் இருபத்துநான்கு அக்ஷரங்கள் ஜ்யோதிஸ்தம்பங்களாய் அமைய, அதன் மத்தியில் ஓங்காரமான ப்ரணவம் பீடமாய் அமைய, அதன் மேலே பஞ்சப்ரஹ்மங்களும் கால்களாகவும், ஆஸனப் பலகையாகவும் அமைய, அதன் மத்தியில் ஶ்ரீபராம்பாள் பாலை வடிவத்தில் அளித்த தர்சனத்தைக் கண்டு அது போல் சிலாவிக்ரஹம் அமைத்தார் விச்வகர்மா.

பின் அன்றைய பொழுது முழுதும் மூம்மூர்த்திகளுடன் ஸமஸ்த தேவ ஸமூஹங்களும் ஶ்ரீவித்யா ஜபத்தில் ஈடுபட்டுப் பின் மறுநாள் காலை கர்ப்பக்ருஹத்தைத் திறந்து பார்க்க ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான ஶ்ரீராஜராஜேச்வரி ஆகாச ரூபத்தை விட்டு, பாலா வடிவையும் விட்டு, பரம ஸுமங்கலியாக, பரம ஸுவாஸினியாக காமேச்வர வல்லபையான ஶ்ரீகாமாக்ஷி அம்பிகையாக காக்ஷியளித்தாள்.

ஞானாகாச வடிவில் விளங்கும் தன்னை பரம ஶ்ரீவித்யோபாஸகரேயன்றி மற்றோர் உணர்வது கடினம் என்று, தன்னை பாமரரும் உணர வேண்டி பாசம், அங்குசம், கரும்புவில், பூவாளி தாங்கி ஶ்ரீசக்ர ஸிம்ஹாஸனேச்வரியாக தர்சனமளித்து நிலைபெற்றாள். அந்த திவ்யமங்கள விக்ரஹத்தையே இன்றும் காண்கிறோம்!!

“காயத்ரி மண்டபத்தில் ஓங்கார கோணத்தில் விளங்குபவள்!! காமாக்ஷி என பெயர் பெற்றவள்!! ஆதிசக்தி!! தானே தோன்றியவள்!! பிறப்பிறப்பில்லாத பூரண ப்ரஹ்மம்!! ஸகல புவனங்களுக்கும் ஈச்வரி!!”

இத்தகைய காமாக்ஷித் தாயையே சரணாகதி செய்வோம்!!

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Upanyasam

Tags: ,

1 reply

  1. i have TWO requests:
    (1) GEBERAL: There are some sanskrit words used but written in Tamil. கடாகாசம் , பிலாகாசம், ஹ்ருதாகாசம், பாலை வடிவம். Since TAmil doesn’t have vargam, a notayion could be used or sanskrit words given in paranethesis. Unless some one is already nowledgeable in sanskrit words, it is difficult to grasp the full import of what author conveys. Of course there aremany sanskrit words in the commentary written in Tamil.
    (2) SPECIFIC: Request author to explain the term பிலாகாசம் – what it represents in different contexts. This word is used in Mooka Pancha Sati also apart from other composition on AMBA.

Leave a Reply

%d bloggers like this: