120.10.2. Sri Sankara Charitham by Maha Periyava – Determining the period of Sri Sankara’s life

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava continue to pour in firm evidences in determining the time period of Bhagawadpadhal and in the process says he is no expert in history 🙂

Many Jaya Jaya Sankara for Smt. Sowmya for another classy drawing and audio and Shri ST Ravi kumar for the great translation. Rama Rama
__________________________________________________________________

ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம்

மையக் கேள்வி : மெகஸ்தனிஸ் சொல்லும் ‘ ஸன்ட்ர கோட்டஸ் ‘ யார் ?

‘குப்த வம்சத்து சந்திரகுப்த விக்ரமாதித்யன் காலத்தில் ஃபா-ஹியன் என்ற சீன யாத்ரிகர் வந்து எழுதி வைத்திருக்கிறாரே, அதனால் அவன் கி.பி. 4-5 நூற்றாண்டுக்காரனாகத்தானே இருக்கணும்? அவனை எப்படிக் கி.மு. வுக்கு கொண்டுபோவது?’ என்று கேட்கலாம். வேடிக்கை என்னவென்றால்: அந்தக் கி.பி. ‘பீரிய’டில் அவர் (ஃபா – ஹியன்) இங்கே வந்து முழுசாக ஆறு வருஷம் பௌத்த ஸ்தலங்களுக்கு யாத்திரை பண்ணிக் கொண்டு, அந்த மத நூல்களைக் சேகரித்துக் கொண்டு, அப்படியே ப்ரயாண விவரங்களை எழுதி வைத்திருப்பது வாஸ்தவந்தான். ஆனால் அவர் அப்போது இங்கே இருந்த எந்த ராஜாவைப் பற்றியும் எதுவுமே சொல்லவில்லை! சந்த்ரகுப்தன் என்ற பெயரோ, வேறெந்த ராஜாப் பெயரோ அவருடைய நோட்ஸில் காணப்படவில்லை! பௌத்த விஷயங்களில்தான் அவருக்கு ‘இன்டரஸ்ட்.’ அதைப் பற்றியே முக்யமாகச் சொல்லும் போது இங்கேயிருந்த ஸமூஹ வாழ்க்கை பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். ஆகையால் அவர் வந்த ‘பீரிய’டை வைத்துத்தான் அப்போது தாங்கள் ஏற்கனவே காலநிர்ணயம் பண்ணியிருந்தபடி குப்தவம்ச சந்த்ரகுப்தன் இருந்ததாக ஹிஸ்டரிக்காரர்கள் சொல்லுகிறார்களே தவிர, மெகஸ்தனிஸ் ஒரு ராஜாவின் பெயராகச் சொன்னதைக் கொண்டே அந்த ராஜாவுக்குக் கால நிர்ணயம் பண்ணிய மாதிரி இங்கே இல்லை. ஃபா-ஹியன் வந்தபோது குப்தவம்ச சந்த்ரகுப்தன் தான் இருந்தான் என்று அடித்துக் சொல்வதற்கு ஆதாரமில்லை.

இந்த விஷயத்தில் நான் முழுசாக ஆராய்ச்சிப் பண்ணி விடவில்லை. ‘ஹிஸ்டரி’ விஷயமாக அப்படிப் பண்ண க்வாலிஃபிகேஷனும் இல்லை. அதனால் ஹிஸ்டரி ஸ்காலர்களாக இருப்பவர்கள் இதை நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். பெஜவாடாவைச் சேர்ந்த கோடா வேங்கடாசலம் என்பவர் இதில் சற்று ஆழமாகப் பார்த்து ஸன்ட்ரகோட்டஸ் குப்த ராஜாதான், மௌர்யன் இல்லை என்று முடிவு செய்திருக்கிறார். (பிற்பாடு அவர் ஒரு அத்வைத மடத்தில் ஸந்நியாஸியாக ஆனவர்.) மைலாப்பூர் ஆயுர்வேத காலேஜைச் சேர்ந்த கே.ஜி. நடேச சாஸ்த்ரி என்பவரும் ஆராய்ந்து பார்த்து இதே முடிவுக்கு வந்திருக்கிறார்.

இன்னும் சில பேரும் ஸன்ட்ரகோட்டஸ் விஷயமாக இல்லாவிட்டாலும், வேறு புராணங்கள், ராஜதரங்கிணி, நேபாளி வம்சாவளி போன்றவற்றை ஆராய்ந்து, இப்போது சரித்ர புஸ்தகங்களில் சொல்லியிருப்பதற்கு அநேக நூற்றாண்டு, ஆயிரமாண்டுக்கு முன்னேயே நம்முடைய ஆதிகால ஸம்பவங்கள் நடந்தன என்று விவரம் தருகிறார்கள்.

குப்தர்களில் முதல் சந்த்ரகுப்தனுக்குப் பிள்ளையாகவும் இரண்டாம் சந்த்ரகுப்தனுக்குத் தகப்பனாராகவும் இருந்த ஸமுத்ரகுப்தன் தான் ஸன்ட்ரகோட்டஸாக இருக்குமோ என்று எனக்கு (அநுமானம்) ! ‘சந்த்ரகுப்தன்’ என்பதில் முதல் எழுத்து ச (cha). மெகஸ்தனிஸ் சொல்லும் ‘ஸன்ட்ரகோட்ட’ஸில் முதல் எழுத்து ஸ (sa). ஸமுத்ர குப்தன் என்பதுதான் ‘ஸ’வில் ஆரம்பிக்கிறது. க்ரீக் முதலிய மேல்நாட்டு பாஷைகளில் ச-ஸ வித்யாஸம் நன்றாகத் தெரிகிற ஒன்று. ஒரு பெயரில் முதல் எழுத்தாக வருவதையே மெகஸ்தனிஸ் தப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பாரோ?

“அலெக்ஸாண்டர் காலத்து க்ரீஸ் தேசக்காரர்கள் அப்போது Xandrames என்பவன் பாடலிபுரத்தில் ராஜவாயிருந்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். அது யார் என்று நிச்சயம் பண்ண முடியாவிட்டாலும் இங்கே ‘Xandra’ என்பது (‘Sandra’ இல்லை; ‘Xandra’) ‘சந்த்ர’ என்பதைத்தான் என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மெகஸ்தனிஸோ ‘Sandra’ என்கிறார்!”

மெகஸ்தனிஸ் நம்முடைய புஸ்தகங்களைப் பார்க்காமல், ஜனங்களின் பேச்சில் வார்த்தைகளைக் கேட்டுத்தான் எழுதியவர். வார்த்தையில் நடுவில் வரும் உயிர் மெய்யெழுத்துக்களைப் பேசிக்கொண்டு போகும் அவஸரத்தில் மெய்யெழுத்துக்களாகவே குறுக்கி விடுவது ஸஹஜம். அதிலும் நம் பெயர்களை வெள்ளைக்காரர்கள் சொல்லும் போது கேட்கவே வேண்டாம்–திருவல்லிக்கேணி ‘ட்ரிப்ளிகேன்’ என்று வரும்போது ‘வல்லி’ என்பது ‘ப்ளி’ யாகவும் ‘கேணி’ என்பது ‘கேன்’ என்றும் ஆகி விடுகிறதல்லவா? இப்படி, ‘ஸமுத்ர’ என்பது நம்முடைய ஜனங்களின் பேச்சு மொழியிலேயே ‘ஸம்த்ர’ மாதிரிதான் ஒலித்திருக்கும். ‘ம்த்’ என்பதைவிட ‘ந்த்’ என்று வருவதே நம்முடைய பாஷைகளின் இயல்பு. ஸம்ஸ்க்ருதத்தில் ‘மந்த’, ‘நந்த’, ‘ஸுந்தர’ போன்ற வார்த்தை அதிகம். நம்முடைய ‘ந்த்’ வெள்ளைக்காரர்களிடம் ‘ன்ட்’ ஆகிவிடும். And, hand, sand என்பதுபோல ‘ன்ட்’ வரும் வார்த்தைகள் மேல்நாட்டு பாஷைகளில் நிறையவுண்டு. அப்படித்தான் ‘ஸமுத்ர’ என்பது நம் ஜனங்களில் பேச்சிலேயே ஸம்த்ர-ஸந்த்ர என்றாகி மெகஸ்தனிஸ் காதில் ‘ஸன்ட்ர’ என்று விழுந்து, அப்படியே அவர் ‘ஸன்ட்ர கோட்டஸ்’ என்று எழுதியிருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது!

மொத்தத்தில் இப்படி ஆயிரம் வருஷம் போல எல்லாம் முன்னே பேனால் அப்போது ஆசார்யாள் அவதாரம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் என்பது மட்டும் எப்படி ஸரியாயிருக்கும்? அதுவும் ஆயிரம் வருஷம் முன்னே போய்விடும். புத்தர் காலமும் அவர்கள் (மேல் நாட்டினர்) சொல்லும் கி.மு. ஆறாம்-ஐந்தாம் நூற்றாண்டுக்கு ஆயிரம் வருஷம் முற்பட்டுபோய்விடும். அதாவது ஆசார்யாள் கி.மு. 6-5 நூற்றாண்டிலிருந்தாலும்கூட புத்தரின் ஸமகாலத்தவரில்லை என்றும், புத்த மதம் நன்றாக வேர் பிடித்துப் பல நூற்றாண்டுகள் தேசத்தில் இருந்த பிறகுதான் அவர் அவதரித்து அதை நிராகரணம் பண்ணினார் என்றும் ஏற்பட்டுவிடும்.

முன்னே நாம் புராணக் காலக் கணக்குப்படி மௌரிய வம்சம் கி.மு. 1500-ல் ஆரம்பித்ததல்லவா? அதற்கு ஸுமார் முன்னூறு வருஷம் முன்னாடி பிம்பிஸாரன் இருந்ததாக மத்ஸ்ய புராணத்திலிந்து தெரிகிறது. பிம்பிஸாரன் அவன் பிள்ளை அஜாதசத்ரு, அப்புறம் ஆட்சிக்கு வந்த மூன்று நாலு ராஜாக்கள், அதற்கப்புறம் மஹா பத்மநந்தன், அவனை அடுத்து மௌர்ய வம்சம் என்று அதில் ஒவ்வொருவருக்கும் ஆட்சிக்காலம் இவ்வளவென்று கொடுத்திருப்பதில் பிம்பிஸாரன் சந்த்ரகுப்த மௌர்யனுக்கு முன்னூறு வருஷம் முற்பட்டவன் என்று ஏற்படுகிறது. அதாவது அவன் கி.மு. 1800-1700க்குள் இருந்தவன். புத்தர் அவன் காலத்தவராகையால் அவரும் அப்போதிருந்தவரே. நம்முடைய தேசத்தை சேர்ந்த மற்ற source-களிலிருந்தும் இதை கோடா வேங்கடாசலம் போன்றவர்கள் confirm செய்திருக்கிறார்கள். ஆகையால் புத்தருக்கு பஹுகாலம் கழித்தே கி.மு. 509-ல் ஆசார்யாள் அவதாரம் என்று ஆகும்.

இது ஒரு பக்கட்டும் இருக்கட்டும். (அதாவது குப்த சந்த்ர குப்தர்களில் ஒருத்தனோ, அவர்களுக்கு நடுவில் வந்த ஸமுத்ர குப்தனோதான் கி.மு. நாலாம் நூற்றாண்டில் மெகஸ்தனிஸுக்கு ஸமகாலத்தவனாக இருந்தது என்ற விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.) ஆசார்யாள் காலம் கி.பி. 788-820 என்னும் கட்சிப்படி, அவர் அந்தக் கட்சிக்காரர்களின் அபிப்ராயப்படி மேலே சொன்ன குப்த ராஜாக்களின் காலமான கி.பி. நாலாம்-ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு 350-400 வருஷம் பின்னால் வந்தவர். இந்த இடைக்காலத்திற்குள் குப்த ஸாம்ராஜ்யம் எடுபட்டுப்போய் இன்னம் அநேகம் நடந்து ஹர்ஷவர்தனின் ஆட்சியும் முடிந்து நூறு வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஹர்ஷனைப் பற்றி, மஹாகவியான பாணர் பெரிசாகவே ‘ஹர்ஷ சரித்ரம்’ என்று காவ்யம் பண்ணி வைத்திருப்பதால் அவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து நாற்பது வருஷத்திற்கு மேல் ஆட்சி நடத்தியவன் என்று தெரிகிறது. நம்மூர்க்காரரான பாணர் சொல்வதைக் கொண்டு கால நிர்ணயம் பண்ணப் பிடிக்காவிட்டாலும், ஹர்ஷனின் காலத்தில் இங்கே வந்து பதினாறு வருஷம் புத்த ஸ்தலங்களுக்கெல்லாம் யாத்ரை பண்ணிய ஹுவான்-த்ஸாங் என்ற சீனாக்காரர் எழுதி வைத்திருக்கும் குறிப்புகள் இருக்கவே இருக்கின்றன! அதனால் ஹர்ஷன் காலம் அதுதான் (கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதிதான்) என்று ஊர்ஜிதமாகிறது. அதற்கப்புறம் நடந்த ஸமாசாரங்களை ஆயிரம் வருஷம் முந்திக்கொண்டுபோக நியாயமில்லை என்று சொல்லலாம். ‘குப்தர் காலம் வரை வேண்டுமானால் ஆயிரம் வருஷம் முந்திக் கொண்டு போங்கள். எங்கள் கணக்குப்படி அதன்போதே, அதாவது கி.பி. நாலாம் நூற்றாண்டிலேயே ஃபா-ஹியன் என்று சீன யாத்ரிகர் வந்து குறிப்புக்கள் எழுதி வைத்திருக்கிறார். ஆனாலும் அவர் பௌத்த மத விஷயத்திலேயேதான் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் காலத்தில் இருந்த பெரிய பெரிய ராஜாக்களின் பெயரைக்கூடச் சொல்லாமல், ‘தேசமும் அமைதியாயிருக்கிறது; ஜனங்களும் ரொம்ப அமைதியாயிருக்கிறார்கள். பெரிய குற்றங்களே நடப்பதில்லை. பயமில்லாமல் ஒரு கோடிக்கு மறு கோடி ஸஞ்சாரம் பண்ண முடிகிறது. பௌத்த மதம், ஹிந்து மதம் இரண்டுமே அநுஷ்டானத்தில் இருக்கின்றன’ என்று ஜெனரலாகத்தான் கொஞ்சம் சொல்லி முடித்திருக்கிறார். ஆகையால் குப்த ராஜவம்ச கால நிர்ணயத்தில் அவரை ஸம்பந்தப்படுத்தாமல் வேண்டுமானாலும் விட்டுவிடுகிறோம். ஆனால் அப்புறம் ஹர்ஷர், ஹுவான்-த்ஸாங் காலங்கள் நாங்கள் சொல்கிறதுபோல கி.பி. ஏழாம் நூற்றாண்டுதான் என்பது ஸர்வ நிச்சயமான fact. அதை முற்காலத்துக்குக் கொண்டு போவதற்கேயில்லை. இதற்கும் 150 வருஷத்துக்கப்புறம் நாங்கள் ஆசார்யாள் காலத்தைச் சொல்வதால் அதில் கை வைப்பதற்கே இடமில்லை’ என்று சொல்லலாம். ஆனபடியால் அவர்கள் 788-820 என்று ஆசார்யாளின் கால நிர்ணயம் செய்திருப்பதற்கு அநேக காரணங்கள் காட்டுவதாகச் சொன்னேனே, அவற்றையேதான் ஒவ்வொன்றாய் எடுத்துக் கொண்டு ஸரியா தப்பா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

___________________________________________________________________

Determining the period of Sri Sankara’s life

The main question: Who is the Sandracottus referred to by Megasthenes?

It could be asked, ‘During the period of Chandragupta Vikramaditya a Chinese traveler by name Fahien had come [to India] and had written about our country; So his [Chandragupta Vikramaditya’s] period has to be 4-5 AD isn’t it? How can he belong to BC period?’  The funny thing is this: It is true that he (Fahien) came here during that AD period for a full six years, undertook travel to various Buddhist centres, gathered books of that religion and also recorded his travelogues.  However, he has not mentioned anything about any of the kings of that period!  Neither the name of Chandragupta, nor the name of any other king is found in his notes!  His interest was only in matters of Buddhism.  While talking exclusively about that [religion], he has also made a mention about the society and their lifestyle. Thus, considering the period of his visit, historians say that he came during the reign of Chandragupta of Gupta dynasty; this is based on the calculations made by them; it is nothing similar to the case where Megasthenes made a mention of a king’s name and the period of that king was determined.  There is no evidence to conclusively say that Chandragupta of Gupta dynasty was ruling when Fahien visited.

I have not done any extensive research in this matter.  I also do not possess the qualification to do any research in ‘history’.  Therefore, people who are scholars of history, should study and analyse it well.  One Goda Venkatachalam belonging to Bezawada (Vijayawada) has studied this matter in detail and has concluded that Sandracottus was indeed a Gupta king and not a Mauryan.  (He later become an Advaita Sanyasi).  K. G. Natesa Sastry of Mylapore Ayurveda College has also done research and come to the same conclusion.

Some others have also studied the Puranas, Rajatarangini, Nepal Chronicle etc. – not regarding the issue of Sandracottus, but regarding other issues –  have analysed these texts, and are of the opinion that our ancient events have indeed happened several hundred, thousand years before what is stated in our history books.

I feel (I have a doubt) that Sandracottus could be Samudragupta – son of the first Chandragupta and father of the second Chandragupta!  The first letter in ‘Chandragupta’ is Cha.  In the name Sandracottus, mentioned by Megasthenes, the first letter is Sa.  Samudragupta starts with Sa.  The difference in Cha-Sa is quite apparent in the languages of the west, and in Greek.  Would Megasthenes have made a mistake in the very first letter of the name?

“People of the Greek country who lived during the days of Alexander have stated that one Xandrames was the king of Pataliputra during that time. Although it is not possible to conclude who it was, researchers say that the ‘Xandra’ mentioned here (‘Xandra’; not ‘Sandra’) is ‘Chandra’.  Whereas Megasthenes says ‘Sandra’!”

Megasthenes had not read our books but had written based on the words spoken during interactions with people. Due to the fast pace of speech during conversations, it is common to shorten the conjoint letter coming in the middle of words, to a consonant.  Especially, the way Whites pronounce our names is very unique – When Tiruvallikeni becomes Triplicane, doesn’t the ‘valli’ in Tiruvallikeni become ‘pli’ and keni become ‘cane’?   In this way, ‘Samudra’ must have sounded in the spoken language of our people as ‘Samdra’.  The natural trend in our languages that ‘nd’ is more common than ‘md’.  In Sanskrit, words like ‘Manda’ [मन्द], ‘Nanda’ [नन्द] and ‘Sundara’ [सुन्दर] are many.  Our ‘nth’ will become ‘nd’, for the Whites.  Words like and, hand, sand, which have ‘nd’ are many in the western languages.  This is what makes us think whether that ‘Samudra’ in the conversations of our people had become Samtra-Santhra; Megasthenes could have heard it as ‘Sandra’ and might have written it as ‘Sandracottus’!

All said, if it is thus possible to advance everything by about thousand years, how can the view that Acharya’s incarnation was in the eighth century alone be true?  That also will get advanced by a thousand years.  The period of Buddha will also get advanced by a thousand years from what they (westerners) say as sixth-fifth centuries BC.  That is, it could be established that Acharya, even if belonging to 6-5 BC, was not a contemporary of Buddha but had incarnated several centuries later, long after Buddhism had got deeply entrenched in our country, and had condemned it.

Earlier, as per the calculations of our Puranas, did not Maurya dynasty start from 1500 BC?  It is learnt from Matsya Purana that Bimbisara lived about three hundred years before that.  In having determined the period of reign of each king starting with Bimbisara, his son Ajatasatru, three or four kings who came to the throne after him, Mahapadmanandan who came later and the Maurya dynasty which came after him etc., it works out that Bimbisara ruled three hundred years before Chandragupta Maurya.  That is, he had lived between 1800-1700 BC.  Since Buddha was his contemporary, he had also lived during that time.  This has also been confirmed by people like Goda Venkatachalam from other sources in our country.  Therefore, it can be said that Acharya’s incarnation was in 509 BC, long time after Buddha.

Let this be on one side.  (that is, let the matter that either of the Chandraguptas of the Gupta dynasty, or Samudragupta who was there in between them, was a contemporary of Megasthenes can rest on one side).  As per the group which says Acharya’s period is 788-820 AD and as per the opinion of the members of this group, he had lived 350-400 years later to the period of Guptas which they consider as fourth-fifth AD.  In the intervening period, the empire of Guptas had been dislodged; many other events happened and more than hundred years had elapsed after Harshavardhan’s rule had ended.  Since the great poet BaaNa [बाणः] has composed a grand literary work on Harsha called ‘Harsha Charitram’, it is obvious that he [Harsha] reigned for more than forty years from the beginning of seventh century AD.  Even if what BaaNa, our own countryman, says, is not acceptable in determining [Harsha’s] time period, the notes written down by Huan-Tsang, a Chinese traveller who visited this place during Harsha’s time and travelled to Buddhist pilgrim centres for sixteen years, are always there!  Hence, it is confirmed that the first half of 7thcentury AD is the life period of Harsha.  Events which happened after this cannot be pushed back by a thousand years. Therefore they can claim thus: ‘You may push the period of Guptas by a thousand years.  As per our calculations, then itself, that is, in the fourth century AD itself, Fahien, a Chinese traveler had visited and written his notes.  But, he had paid attention only to matters relating to Buddhism.  Without even mentioning the names of the renowned kings who were there at that time, he has made only some general observations saying ‘the country is peaceful; people are peace loving; there are no major crimes; it is possible to move from one corner [of the country] to the other without any fear; Both Buddhism as well as Hinduism are being practiced’.  Therefore, we will exclude him from the matter of determining the period of Gupta dynasty.  But it is a fact that the period of Harsha and Huang-Tsang is indeed seventh century AD, as asserted by us.  That can never be advanced to an earlier period.  Since our claim is that Acharya’s period is 150 years later to this, it cannot be questioned at all’.  Thus the various reasons quoted by them – cited by me earlier- by which they have determined Acharya’s time period as 788-820 AD, should be taken up one by one and analysed to see whether each of them is right or wrong.

__________________________________________________________________
Audio

 



Categories: Uncategorized

1 reply

  1. After a very very long time, i have started receiving through e-mail. Thanks.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading