Harivaracharanam Kambangudi Sri Kulathu Iyer

Thanks to FB share on this info. For non-Tamil readers – The person who composed the song “Harivarachanam..” in Sabarimala, hails from Kallidaikurichi in T’N’Veli district. Thanks to Sudhan for sharing the correct photo.

சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்குப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும். இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி ஸ்ரீ குளத்து ஐயர். இவர் 1920 – ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார்.

இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர். கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது ஹரிவராசனம் கீர்த்தனம்.

இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார். ஒவ்வொரு வரிகளும் ஐயப்ப சாமியே அருளியது போல இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டப்பட்டாலும், இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோருக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.

அப்போது ஐயப்பசாமி, தாயின் தலைவலி போக்கப் புலிப்பாலை எடுக்க அந்த வழியாக வந்துள்ளார். அப்போது மிகவும் களைப்புடன் இருந்த ஐயப்பன் அந்த குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்டு வந்து உணவு கேட்டுள்ளார். உணவு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த கம்பு தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர். அதனாலதான் அவர்களது குடும்பம் கம்பங்குடி என அழைக்கப்பட்டது.

அந்த பூர்விகமான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஹரிவராசனம் பாடலை இயற்றிய கம்பங்குடி
ஸ்ரீ குளத்து ஐயர்.

இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமேலையில் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேணி நம்பூதிரி புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது.

1950 – களில் சபரிமலை ஐயப்பன் கோவில் தீக்கிரையாகி பின் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு சபரிமலை கோவிலை மீண்டும் 1951 புனரமைத்தனர்.

அப்போது கோவில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி ஹரிவராசனம் கீர்த்தனம் இரவு அத்தாழப் பூஜையில் ஐயப்பசாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். இது ஐயப்பசாமியை உறங்கவைக்கும் பாடல்போல உள்ளதாகக் கருதி, அத்தாழ பூஜை (இரவு பூஜை) முடிந்து நடை சாத்தும் பாடலாக மாற்றினார்.

மேல் சாந்தியாக இருந்த ஈஸ்வரன் மற்றும் கோவில் ஊழியர்களும் ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது.

கே.ஜே. யேசுதாஸ் 1975 – ஆம் ஆண்டு தமிழ், மலையாளம் மொழிகளில் வெளிவந்த ‘சுவாமி ஐயப்பன் ‘ திரைப்படத்தில் முதன் முறையாக இந்தப் பாடலை பாடினார். அதற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்தார். அந்த மெட்டில் அமைந்த ஹரிவராசனம் பாடல்தான் இன்றுவரை சபரிமேலையில் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கிறது.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

 



Categories: Announcements

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading