நாளை கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை

நாளை (10th Feb 2021) தை மாத கிருஷ்ண சதுர்தசி. ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் ஆராதனை தினம். நாம் எல்லோரும் ஸ்வாமிகளுக்கு ப்ரியமான நாராயணீயம், மூக பஞ்சசதீ, முகுந்த மாலை, ராமரக்ஷா ஸ்தோத்ரம், கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம், சிவானந்தலஹரீ போன்ற ஸ்லோத்ரங்களை நிறைய பாராயணம் செய்து, அஷ்டோத்தர நாமாவளியால் பூஜை செய்து அவருடைய அருளுக்கு பாத்திரமாவோம்.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam

இம்முறை ஆராதனை அன்று பக்தர்கள் ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் கூட வேண்டாம் என்று அதிஷ்டானம் ட்ரஸ்ட் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆர்யா சதகம் 52வது ஸ்லோகத்தில், “காஞ்சீபுரத்தில் காமாக்ஷி நித்ய வாசம் செய்கிறாள். ஆனால் என் மனத்தில் அல்லவோ ஆனந்தமாக இருக்கிறாள்” என்று மூக கவி சொல்வார். அது போல மேலே குறிப்பிட்ட ஸ்தோத்ரங்களையோ,

கோவிந்த கோவிந்த ஹரே முராரே

கோவிந்த கோவிந்த முகுந்த கிருஷ்ணா |

கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே

கோவிந்த தாமோதர மாதவேதி ||

போன்ற பகவானுடைய நாமங்களைச் சொன்னாலே அங்கே கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பிரஸன்னமாகி விடுவார்.

ஸ்வாமிகள் தன் பக்தர்களுக்கு பண்ணும் அனுக்ரஹம் பற்றி ஒரு உபன்யாசம் இங்கே -> ஸ்துதி சதகம் 21வது ஸ்லோகம் பொருளுரை – வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்Categories: Announcements, Upanyasam

Tags:

16 replies

 1. ஹரே க்ருஷ்ண கோவிந்த தாமோதராஹரே ஸ்ரீ மிகுந்த மாதவா

 2. Anekhakodi namaskarangal.

 3. ஸ்ரீ கோவிந்த தாமோதர மாதவேதி 🙏

 4. விளக்கம் மிக அருமை. ஸ்வாமிகளை ஒருமுறை பார்க்கவேணும் என்ற ஒரு ஆவல் என் மனதில் தோன்றுகிறது. அவரது ஆராதனை புண்ணிய நாளில் எனது அநேக கோடி நமஸ்காரங்கள்.
  K. V. Balasubramanian
  Trivandrum

 5. By Guru krupa we all went to Pazhur, had dharshan of Adhishtanam on 5th February 2021 , did yatha sakthi Parayanam and received Gurunathal’s Anugraham

  • தீர்க்காயுஷ்மான் பவ ஸௌம்ய. ஆரோக்யத்ருடகாத்ரப்ராப்திரஸ்து. ஸமஸ்த ஸன்மங்கள ப்ராப்திரஸ்து. வேதபாரங்கதோ பவ

  • Very glad .

 6. ஸ்ரீ சுவாமிகள் திருவடிகளில் பணிந்து வணங்குகிறோம் இவரது அதிஷ்டானம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம் பழூர் கிராமத்தில் உள்ளது என்று எண்ணுகிறேன். உறுதி செய்ய வேண்டுகிறேன்.

   • மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நல்லாசிகள். எனது தந்தை அமரராகி ஓராண்டு நிறைவு சுபஸ்வீகாரம் அன்று 2004-ல் அவர் அப்போது தான் பிருந்தாவனம் பிரவேசம் செய்த அதிஷ்டானத்தில் எனது தம்பியும் அடியேனும் நட்ட வில்வமரம் இன்று மரமாகி உள்ளது எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு விஷயம்.
    அவரது இனிய புனித நினைவுகளுக்கு இதயம் கனிந்த அஞ்சலி.

   • நல்லாசிகள் பல. வாழ்த்துக்கள் பல. இன்று கூட்டம் இருக்கும். எனவே, கட்டுப்பாடு காரணமாக ஆராதனைக்கு வர இயலவில்லை. ஆராதனைக்கு சென்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன். முடிந்த பிறகு, இயன்ற பொழுது ஆராதனை விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். சுவாமிகள் திருவடிகளில் மனதால் பணிந்து வணங்குகிறேன். மீண்டும் நல்லாசிகள் பல. வாழ்த்துக்கள் பல

  • பழுர், முத்தரசணலூர் PO.Trichy -620101

  • தொடர்புகொள்க
   S Seetharaman. 9488979201

 7. I guess I remember, in 2019, u went to the adishtanam of govinda damodara swamigal..I will do the paratabam tomorrow as u have mentioned anna

Leave a Reply

%d bloggers like this: