பொங்கலோ பொங்கல்

உழைத்த உழவனுக்கும்,
உடனிருக்கும் கால்நடைகளுக்கும்,
உதிக்கும் கதிரவனுக்கும்,
உளமார்ந்த நன்றிகளை
உரித்தாக்கும் பொங்கல் திருநாள் இது.

மஞ்சள், கரும்பு, செந்நெல் செழிக்க
பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்து விளங்க,
அன்பு, அறம், ஒற்றுமை, செல்வம், மகிழ்ச்சி நிலைத்திட, இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

மனத்தாமரையை மலரச் செய்யும் சூர்யனாக காமாக்ஷி கடாக்ஷத்தை வர்ணிக்கும் ஒரு அழகான ஸ்லோகம்.

हृत्पङ्कजं मम विकासयतु प्रमुष्णन्
उल्लासमुत्पलरुचेस्तमसां निरोद्धा ।
दोषानुषङ्गजडतां जगतां धुनानः
कामाक्षि वीक्षणविलासदिनोदयस्ते ॥

ஹ்ருʼத்பங்கஜம் மம விகாஸயது ப்ரமுஷ்ணன்
உல்லாஸமுத்பலருசேஸ்தமஸாம் நிரோத்³தா⁴ ।
தாே³ஷானுஷங்க³ஜட³தாம் ஜக³தாம் து⁴னான:
காமாக்ஷி வீக்ஷணவிலாஸதி³னோத³யஸ்தே ॥

பொருள் அறிந்து கொள்ள -> கடாக்ஷ சதகம் 58வது ஸ்லோகம் பொருளுரை



Categories: Upanyasam

Tags:

2 replies

  1. அம்பாளை சூரியனாக வர்ணனை செய்த ஸ்லோகம் மிக அற்புதமே!சர்வலோகத்தையும் ரக்ஷிக்கும் தாய் நமக்காக எந்த ரூபத்தையும் எடுக்கவல்லவள் அன்றோ.
    “கல்யாண தாத்ரீ ந்ருணாம் காருண்யகுல மானஸா பகவதி காம்பாதடே ஜ்ரும்பதே ” என்ற ஸ்லோகம். கருணை நிறைந்த மனம் கொண்டவள் தானே!

  2. கற்பனைக்கெட்டாத ஆசார்யர்கள் திருவடிகளில் மகரஸங்க்ராந்தி தின நமஸ்காரங்கள் பல.
    தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

Leave a Reply

%d bloggers like this: