இன்று நீலகண்ட தீஷிதர் ஆராதனை

அப்பைய தீக்ஷிதரின் வம்சத்தில் அவதரித்து மீனாக்ஷி தேவியின் அத்யந்த பக்தராக விளங்கிய மஹாவித்வான் ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர். அவருடைய படைப்புகளான சிவலீலார்ணவம், ஆனந்தஸாகரஸ்தவம், கலி விடம்பனம் முதலியவை சம்ஸ்க்ருத பண்டிதர்கள் ரசித்து கொண்டாடுபவை. மஹாபெரியவா இவற்றிலிருந்து மேற்கோள் காட்டி பேசியுள்ளார்கள்.

மஹாகவியாக விளங்கிய போதும்  “என்னுடைய பூஜை, என்னுடைய பக்தி எல்லாம் ஒன்றும் இல்லை.  ‘மீனாக்ஷிம் விஷ்வஜனனீம் ஜனனீம் மமைவ சரணம் ப்ரபதயே (मीनाक्षीं विश्वजननीं जननीं ममैव शरणं प्रपद्ये)’ – ஜகன்மாதாவான, எனக்கும் அம்மாவான மீனாக்ஷி தேவியை சரணடைகிறேன்” என்று சொல்கிறார். இந்த வரிகளையே மந்திரம் போல சொல்லிக் கொண்டு இருக்கலாம் என்று பெரியவா சொல்லி இருக்கிறார்கள்.

மதுரையில் நாயக்க மன்னரின் அமைச்சராக இருந்த நீலகண்ட தீக்ஷிதர், முடிவில் வைராக்யம் அடைந்து, சன்யாசத்தை ஏற்று, திருநெல்வேலியில் உள்ள பாலாமடை என்ற கிராமத்தில் தங்கி அங்கேயே தனுர் மாசம் சுக்ல பக்ஷ அஷ்டமி திதியில் சித்தி அடைந்தார். இன்று அங்கு அவருடைய அதிஷ்டானத்தில் அந்த மஹானின் ஆராதனை கொண்டாடப் படுகிறது.

அவருடைய வாழ்வில் இருந்து சில நிகழ்ச்சிகளை இங்கே பகிர்ந்துள்ளேன் -> மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரை;Categories: Upanyasam

Tags:

4 replies

 1. Before somebody asks, here is the translation of the above Tamil text.

  Mahavidvan Sri Neelakanda Deekshithar, who was born in the family lineage of Appaya Deekshithar and became an ardent devotee of Goddess Meenakshi. His works such as Sivalilarnavam, Anandasakarasthavam, Kali Vidampanam etc. are celebrated by Samskrutha scholars. Maha Periyava also quotes several times from these.

  Even though he was a great poet, he said, “My worship and my devotion are nothing. ‘Meenakshim Vishwajananeem Jananeem Mamaiva Charanam Prabhataye (मीनाक्षीं विश्वजननीं जननीं ममैव शरणं प्रपद्ये)’ – I surrender to Meenakshi Devi, the mother of the world and my mother. ” Periyava is saying that these lines may be chanted daily as Mantram.

  Neelakanda Deekshithar, who was the minister of the Nayaka king in Madurai, finally reached the ‘Vairagya’ stage, accepted Sannyasa and stayed in the village of Palamadai in Tirunelveli, where he attained Siddhi on the month of Danur-Sukla Paksha Ashtami. Even today the worship of that great man is celebrated there in great honor.

  Maha Periva Sharanam!

 2. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
  HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
  OM SRI MATRE NAMAHA

Leave a Reply

%d bloggers like this: