Thanks to Sri Venkat Seetharaman who contacted me recently with an idea of one article for each day of Navarathiri. These are slokas from Soundarya Lahari and meaning given by Sri Sri Sri Mahaperiyava in Deivathin Kural – true gems! It is often difficult to read lot of chapters in deivathin kural daily. However, reading subset on these occasions are great way to make progress.
Big thanks to Sri Venkat.
Aum Sri Matrey namaha

நவராத்திரி 9 நாளுக்கும் சௌந்தர்ய லஹரியிலிருந்து தினம் ஒரு ஸ்லோகமாக பகிர்ந்து கொள்ளலாம் என் நினைத்தேன். முதல் நாளுக்கு ஒரு மிகவும் அழகான ப்ரார்த்தனை..அதற்கு ஒரு அற்புதமான விள்க்கம்- காஞ்சிப் பெரியவா (தெய்வத்தின் குரல் பாகம் 6)
जपोजल्पःशिल्पंसकलमपिमुद्राविरचना
गतिःप्रादक्षिण्यक्रमणमशनाद्याहुतिविधिः।
प्रणामःसंवेशःसुखमखिलमात्मार्पणदृशा
सपर्यापर्यायस्तवभवतुयन्मेविलसितम्॥ 27॥
ஜபோஜல்ப: சில்பம்ஸகலம்அபிமுத்ராவிரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமணம்அசனாத்-யாஹுதிவிதி: |
ப்ரணாம: ஸம்வேச: ஸுகம்அகிலம்ஆத்மார்பண-த்ருசா
ஸ்பர்யா-பர்யாய: தவபவதுயந்-மேவிலஸிதம்
நாம் பண்ணுகிற ஸகல காரியமும் அம்பாளுக்கு அர்ப்பணமாகி விடவேண்டும் என்பது சுருக்கமாக இதன் தாத்பர்யம்.
ஜபோ ஜல்ப: “ஜல்ப:” என்றால் பேச்சு. உளறிக் கொட்டுவது உள்பட எல்லாம் ‘ஜல்பம்’ தான். இந்த ஜல்பமே ஜபமாக இருக்கிற நிலை அது. “நான் பேசுவதெல்லாம் உன் ஜபமாயிருக்கட்டும்!’
ஸகலம் சில்பம் அபி முத்ரா விரசநா – “நான் கையில் செய்கிற ஸகல காரியமும் உன் பூஜையில் பிடிக்கிற ஹஸ்த முத்திரைகளாகட்டும்”. “முத்ரா விரசநா” – ‘முத்ரை பிடிப்பது’. ‘அது என்னுடைய எல்லா சில்பமுமேயாகட்டும்.’ சில்பம் என்றால் பொதுவாக எல்லாத் தொழிலுந்தான். தமிழில் அது சிற்பத்தொழில் என்கிற Sculpture மட்டுமாகி விட்டது. இதில்தானே பிரம்மா ஸ்ருஷ்டிக்கிற மாதிரி மநுஷ்யனும் ரூபங்களைத் தானாகப் படைக்கிறான்? அதனால் போலிருக்கிறது.
தனியாக உள் கோயில் என்று ஒரு இடத்தைத் தேடி ப்ரதக்ஷிணம் பண்ணுவது என்றில்லாமல் ‘கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமணம்’: நான் நடக்கிற நடையெல்லாம் க்ரமமாக உன்னை ப்ரதக்ஷிணம் செய்வதாக – உன்னை வலம் வருவதாக – இருக்கட்டும். நான் எங்கே ஸஞ்சாரம் பண்ணினாலும் உன்னைத்தான் சுற்றி வருகிறேன் என்ற எண்ணம் இருக்கட்டும். சாப்பிடுகிறேன் அல்லவா? அந்தச் சாப்பாடு’……….’அசனாதி’ என்றால் ‘அசனம் முதலியன’ என்று அர்த்தம்; ‘அசனம்’ என்றால் உணவு. ‘அசனம்’ என்று மட்டும் சொல்லாமல் ‘அசனாதி’, அதாவது உணவு முதலியவை என்கிறார். இதனால் வாயால் சாப்பிடுவது போல, கண்ணால் சாப்பிடுவதான காட்சிகள்,காதால் சாப்பிடுவதான பேச்சு பாட்டு முதலியன, தேஹத்தால் சாப்பிடுவதான ஸ்பரிசானந்த விஷயங்கள் முதலிய எல்லா இந்திரிய அநுபவங்களையும் குறிப்பிட்டதாகிறது. “இந்தச் ‘சாப்பாடு’கள் யாவும் – ஆஹுதி விதி:’ – உனக்கு ஹோமத்தில் ஆஹுதி கொடுக்கிற முறையாக ஆகட்டும்.”
சாதம் சாப்பிடுவதை நமக்குள் உள்ள பஞ்சப் பிராணன்களுக்கு ஆஹுதியாகக் கொடுத்துவிட்டுத்தான் ஆரம்பிக்கிறோம். கீதையிலும் பகவான், தானே பிராணிகளின் தேஹத்தில், வயிற்றில், வைச்வாநரன் என்ற ஜாடராக்னியாக இருந்துகொண்டு ஆஹாரத்தை ஜெரிப்பதாகச் சொல்கிறார். அவர் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற உணர்ச்சி வந்தால் தப்பு வஸ்துக்களை, வெங்காயம், மதுபானம், மாம்ஸம் முதலியவற்றை உள்ளே போடத் தோன்றுமா? இப்படியே கண்ணும், காதும், மூக்கும், சர்மமும் அவரால்தான் அநுபோகம் பண்ண முடிகிறது என்னும்போது இவற்றைக் கெட்டதுகளில் செலுத்தத் தோன்றுமா?
‘ஸம்வேச:’ – படுத்துக் கொள்கிறேனே, அது’; ‘ப்ரணாம:’ – உனக்குப் பண்ணும் நமஸ்காரமாக இருக்கட்டும்’. படுக்கும்போது அம்பாள் பாதத்தில் கிடக்கிறோம் என்று நினைத்துக் கொண்டுவிட்டால் எத்தனை சாந்தமாக நாள் முடியும்? அப்படி ஆகட்டும்.
“லிஸ்டை நீட்டிக்கொண்டே போவானேன்? சுருக்கமாகச் சொன்னால், ஸாதனை என்று தனியாக, கஷ்டமாக நான் முயற்சி பண்ணி ஜப ஹோமாதிகள், தியானாதிகள், பிரதக்ஷிண நமஸ்காராதிகள் செய்வது என்றில்லாமல் நான் பாட்டுக்கு ஸெளக்யமாக எதையோ பண்ணிக் கொண்டிருந்தாலும், எதைப் பண்ணிக் கொண்டிருந்தாலும், —
ஸுகம் அகிலம் ……..யந்மே விலஸிதம்
– ‘ஸுகமாக நான் பண்ணிக் கொண்டிருக்கும் ஸகல காரியமும்’ என்று அர்த்தம் – என்னுடைய எல்லாச் செயலும்,
தவஸபர்யாபர்யாய: பவது
– “உன்னுடைய பூஜைக் கிரமமாக ஆகட்டும்”.
“நான் பண்ணுகிற செயல்கள் அத்தனையும் உன் பூஜையாக இருக்கட்டும்.”
‘ஸபர்யா’ என்றால் பூஜை. பர்யாயம் என்பதற்குப்பல அர்த்தங்கள் இருப்பதில் ஒன்று ‘மறு பெயர்’, ‘Substitute’ என்பது. “உனக்குப் பண்ணும் பூஜைக்கு மறுபெயராக, அதனிடத்தைப் பெறும் ஸப்ஸ்டிட்யூட்டாக என் ஸகல கார்யமுமே ஆகிவிடட்டும்!” ‘ஸபர்யா பர்யாய’ என்று ஒரே சப்தங்களைத் திருப்பும் போது ‘யமகம்’ என்கிற சொல்லணியைக் கையாண்டிருக்கிறார்.
இப்படி ஸகலத்தையும் தனக்கு அர்ப்பணம் பண்ணும்படி பகவானே கீதையில் சொல்கிறார். “எதைச் செய்தாலும், எதைத் தின்றாலும் எதை ஹோமமோ தானமோ செய்தாலும், எந்தத் தபஸ் பண்ணினாலும் (எதிலே concentrate பண்ணினாலும் என்று அர்த்தம். எந்த விஷயத்தையும் தீவிரமான ஈடுபாட்டோடு பண்ணினால் அது தபஸ்தான்) அதையெல்லாம் எனக்கு அர்ப்பணம் செய்’,என்கிறார்.
யத்கரோஷியத்அச்நாஸியத்ஜுஹோஷிததாஸியத் | யத்தபஸ்யஸிகௌந்தேயதத்குருஷ்வமத்அர்பணம் ||(IX. 27)
“என் செயலாவது யாது ஒன்றுமில்லை”, “நன்றே செய்வாய், பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே?” என்றெல்லாம் நால்வர், ஆழ்வார்கள், இன்னம் மதாந்தரங்களில் உள்ள பெரியவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட total surrender – ஐ (பரிபூர்ண சரணாகதியை)ச் சொல்லியிருக்கிறார்கள். பிறவியின் தலையாய பயனான ஜீவன் முக்தியைத் தருவது அதுதான்.
Categories: Deivathin Kural
அருமையா விளக்கம். நன்றிகள் பல.
Yes, this 27th sloka is the best one among whatever I read so far. It is a good start with this sloka here.
இந்த ஸ்லோகம், கடைசி பிரதீப ஜவாலாபி; இரண்டு ஸ்லோகங்களை சொன்னால்.அனைத்து ஸ்லோகங்கள் சொன்ன பலன் என்ற அபிப்ராயம் உண்டு !
இந்த ச்லோகம் ஆத்மார்ப்பண மாகக் கருதப்படுகிறது ! இதே அர்த்தத்தில் அபிராமி அந்தாதி. யில் நின்றும் இருந்தும் கிடந்தும், நடந்தும்.நினைப்பது உன்னை வணங்குவது உன் மலர்த் தாள் என்று வருகிறது ,,! ஆத்மார்ப்பணம் இவை !
அம்பாள் சாரணத்தை விடாது பற்றினால் நம்மை உயர்த்தி விடுவாள் என்பதில்.ஐயமில்லை !
JaiShriKrishna, Can someone kindly do an English translation? Thank you.
Rama Rama 🙏
http://www.krishnamurthys.com/profvk/gohitvip/DPDS46-50.html
This translation is by Prof V.Krishnamurthy a mathematician and an advaita academy speaker .
🙏🙏
Regards
Sujatha.R
Rama Rama 🙏
Scroll down to verse 27in the link
Regards
Sujatha.R
Dear Sujathaji, Thank you for your kind effort. RamRam,dhhananjay
Sent from Yahoo Mail for iPhone
Thank you sir. Wonderful sloka. you have explained it easily.
L.Srinivasan 95660 79862
The explanation is by Maha Periyava (from Deivathin Kural – part 6), where he explained most of the Soundarya Lahiri Slokas. They have reproduced here 🙂