திருப்புகழ் பாடல்கள் – குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களை இன்று உலகம் முழுவதும் அனைவரும் பாட, பெரும் தொண்டாற்றியவர் குருஜி ஸ்ரீ டெல்லி ராகவன் அவர்கள். திருப்புகழில் இருந்து ஒரு ஐநூறு பாடல்களை தேர்ந்தெடுத்து, அந்த பாடல்களை தகுந்த ராக தாளங்களைக் கொண்டு இசையமைத்து, “திருப்புகழ் அன்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அனைவரும் அதே ராக தாளத்தில் அந்த பாடல்களை பாடக் கற்றுக் கொடுத்தார். பஜனைகள் மூலம் மீண்டும் மீண்டும் அவற்றை பாடச் செய்தார். இதன் மூலம் அனைவரும் எளிதில் திருப்புகழ் பாடலாம் என்ற நம்பிக்கையையும், அவற்றை பாடுவதில் ஆசையையும் ஏற்படுத்தினார்.

அந்த பாடல்களை அட்டவணைப் படுத்தி, அவருடைய ஒலிப்பதிவையும் இணைத்து, பாடல் வரிகளையும் சேர்த்து ஒரு புத்தகம் போல வழங்கி இருக்கிறார்கள். திருப்புகழ் படிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரிய பொக்கிஷம்.

திருப்புகழ் பாடல்கள் – குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவுCategories: Audio Content

Tags:

6 replies

 1. அன்றைய (பரந்த) சென்னை ராஜதானி முழுவதும் அலைந்து திருப்புகழைப் பரப்பியவர் ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள் என்னும் ஸ்ரீ ஸ்வாமி ஸச்சிதானந்தா அவர்கள். ஸ்ரீ ரமணபகவானால் அனுப்பப்பட்டு ஸ்ரீ ஸேஷாத்ரி ஸ்வாமிகளை அடைந்த அர்த்தனாரி என்ற பெயருடைய இவர், அவரால் ”திருப்புகழே உனக்கு மாஹாமன்த்ரம், நீ வள்ளிமலைக்குப்போய் தவம் செய்’ என்று உபதேசிக்கப்பேற்றார். அதன்படி வள்ளிமலைக்குச் சென்று 12 வருஷங்கள் மலையிலிருந்து கீழிறங்காமல் திருப்புகழ் பாராயணமாகிய தவம் செய்தார். அப்போது இரவு நேரத்தில் அபூர்வ ராக தாளங்களில் திருப்புகழ்ப் பாடல்களப் பலபெண்கள் சேர்ந்துபாடுவது இவர்காதில் விழும்! அதைக்கொண்டே படிப்பறிவோ, சங்கீத அறிவோ இல்லாத அர்த்தனாரி, ஒரு தந்தி ‘ஜதி’ வாத்யத்துடன் தான் கேட்ட அதே ராகங்களில் திருப்புகழ் பாடல்களைப் பாடிப் பிரசாரம் செய்து திருப்புகழ் ஸ்வாமிகள் என்ற பெயரில் பிரபலமானார். ஸ்வாமிகள் 1950 நவம்பரில் சித்தியடைந்தார். அதற்குமுன் அவர் வகுத்த பாணியில் திருப்புகழ்ப் பாராயணம் தொடர்ந்து நடைபெறுவதற்காக, 12 திருப்புகழ் சபைகளை நிறுவினார். இது சென்ற நூற்றாண்டின் முன் பாதியில் சென்னை மாகாணத்தில் நடந்த தெய்வீக நிகழ்ச்சி.
  60களில் நம் தலைநகர் டெல்லியிலிருந்து குருஜி ராகவன் திருப்புகழ் பாடிப் பரவிப் பரப்பத் தொடங்கினார். அப்போது அவரை ‘டில்லி ராகவன்’ என்றே அழைப்போம்! பின்னர் “திருப்புகழ் அன்பர்கள்” அமைப்பு உருவானது. நாடெங்கிலும் கிளைகள் தோன்றின. எல்லோருக்கும் இலவசமாக சொல்லிக்கொடுத்தார்! பல அருமைச் சீடர்கள் உருவாயினர். அங்கங்கும் படி விழாக்களும் , அருணகிரி நாதர் ஜயந்தியும் வெகு விமரிசையாகவும் பக்திபூர்வமான சங்கீத பராயணத்துடனும் கொண்டாடப்பெற்று வருகிறது.
  இதில் முக்கிய அம்சம் குருஜி அமைத்த ராக தாளங்களுக்கு அவர் உரிமை பாராட்டவில்லை! செந்திலாண்டவன் அருளால் இந்த ராகதாளங்கள் அமைந்தன” என்றே பணிவாகச் சொல்வார். திருப்புகழ் அன்பர்கள் அருணகிரி நாதர் நூல்கள் அனைத்தையும் “திருப்புகழ் மதாணி” என்ற பெயரில் வெளியிட்டனர்! 1340 பக்கங்கள் உள்ள இந்தப்பெரிய புத்தகத்தை 1991ல் வெளியிட்ட அன்றே அனைத்துப் பிரதிகளையும் அன்பர்கள் வாங்கிக்கொண்டு விட்டனர்! 1999ல் இரண்டாம் பதிப்பு வந்தது. லாப நோக்கமில்லாமல், இப்பெரிய புத்தகத்தை 60ரூபாய் விலையில் அன்று கொடுத்தனர்!
  திருப்புகழின் விசேஷம் அதன் சந்த வோசை. இது இதற்கு முன்னும் இருந்த தில்லை, இதற்குப்பிறகும் வரவில்லை! சாதாரண சங்கீத வித்வான்களால் திருப்புகழைப் பாடமுடியாது. சந்தமும், தாளமும் ராகமும் சரியாக அமையும்படியும், அதே சமயம் வார்த்தைகள் சிதறாமலும் பொருள் திரியாமலும் இருக்கும் படியும் பாடவேண்டும்! இதில் குருஜி ராகவன் கண்டிப்பாக இருப்பார். அப்படி திருப்புகழ் பயிலும் அன்பர்களுக்காக, ” திருப்புகழ் இசை வழிபாடு” என்ற அரிய நூலை உருவாக்கித்தந்தார். இதில் திருப்புகழில் வரும் சந்தங்களை நடைமுறையில் உள்ள தாளங்களுடன் அருமையாக விளக்கி இருக்கிறார், மேலும் திருப்புகழ் பயிலும் அன்பர்கள் கடைப்பிடித்தொழுகவேண்டிய நெறிமுறைகளையும் சொல்லியிருக்கிறார். திருப்புகழ் பூஜையையும் உரிய மன்த்ரங்களுடன் கலந்து செய்யும் விதமும் விளக்கப்பட்டிருக்கிறது.
  ஆக, சென்ற நூற்றாண்டு முழுதும் திருப்புகழ் நம்மை ஆக்ரமித்துக்கொண்டது! இன்றும் தொடர்கிறது. வாழையடி வாழையென வரும் திருமரபு!
  அன்று குருஜி ராகவன் பாடியதை நேரடியாகக் கேட்டோம்! இன்று அவர் குரலை பதிவில் கேட்கிறோம்! அவருடைய அன்பர்கள் இன்றும் அதே பாணியில் திருப்புகழ் பாராயணம் செய்து வருவது நமது பாக்யம்
  பாடத் தெரியாதவர்கள் கேட்காவாவது செய்யலாமே!

 2. 🙏 🙏
  Mahaperiyava Paadham sharanam
  This is a wonderful collection of treasure.
  It is a blessing from Lord Muruga today with just a click, one can listen and be in the bliss.
  🌹🌹

 3. அரியபொக்கிஷம். 1985 ,86 ஆம் வருடங்களில் ராகவன் குருஜீ யின் நேரடி சிஷ்யயான மாமியிடம் காஞ்சீபுரத்தில் கற்கும் பாக்யம் எனக்கும் கிடைத்தது. கர்னல் மாமா என்று அழைக்கபடும் அவர் ஶ்ரீமடத்தில் கைங்கரயம் செய்து வந்தவர், அவருடைய துணைவியார்தான் அவர்கள். மஹா பெரியவா சன்னதியில் பாடும் பாக்யமும் பெற்றோம் . குருவிற்கும் பரமகுரு ராகவன் குருஜீக்கும் இந்த சமயத்தில் அநேக நமஸ்காரங்கள்.🙏🙏🙇‍♀️🙇‍♀️

 4. அருமையான பதிவு….நல்ல முயற்சி…அவர் பாடல்களை kaumaram.com என்ற இணைய தளத்தில் கேட்டுள்ளேன்.

 5. குருஜி ஸ்ரீ ராகவன் அவர்கள் திருப்புகழ் ராகங்கள் சந்தத்துக்கு ஏற்ப அமைந்த பொக்கிஷம் ! அவரது நேரடி சிஷ்யர்கள் மூலம் கற்கும் பாக்யம் எங்களுக்குக் கிட்டியது ! ஒவ்வொரு வருடமும் ஸ்கந்த சஷ்டி பெருவிழாவில் சென்னை சிருங்ககேரி மண்டபத்தில் காலை ஏழு முதல் மதியம் ஒன்று வரை திருப்புகழ், அலங்காரம், அனுபூதி, வேல்.மயில் விருத்தம், வகுப்பு இவையனைத்தும்.குருஜி தலைமையில் பாராயணம் செய்வோம். பின் அன்னதானம் !
  அதுபோல் ஜனவரி மாதம்.குன்றத்தூரில் படி விழா குருஜி தலைமையில் நடக்கும் !
  இன்றும் ஸ்ரீ மணி.மாமா அவர்கள் நடத்தி வருகிறார் !
  1994 வருடம் music academy l எங்கள்து திருப்புகழ் இசைவி ழா முதல்.முறையாக மேடை ஏறியது குறிப்பிடத் தக்கது !!
  திருப்புகழ் அன்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கி உலக முழுதும் thiruppugazhaip பரப்பியவர் !! அவரது இழப்பு எம் போன்ற seedarkaLukkup பேரிழப்பு !!

Leave a Reply

%d bloggers like this: