இன்று அனுஷம். மஹாபெரியவா, “ஸத்-சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். காமாக்ஷியின் ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது? அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தாலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம். அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்.” என்கிறார்.
மூக பஞ்சசதீ ஆர்யா சதகத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில், மூக கவி, காமாக்ஷியின் ரூபத்தை வர்ணிக்கிறார். நமக்கு மஹாபெரியவா தான் காமாக்ஷி. அந்த ஸ்லோகத்தை கொண்டே மஹாபெரியவாளின் ரூப த்யானம் செய்து நிறைந்த நிறைவாகி விடுவோம். ஸ்லோகத்தின் விளக்கம் இந்த இணைப்பில்-> கஞ்சன காஞ்சீ நிலயம்
Categories: Upanyasam
Leave a Reply