பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்

ஜகத்குரு டிரஸ்ட் மடிப்பாக்கம் ஏற்பாட்டில் பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்கள் நேரலையில் 39 நாட்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாசம் செய்தார்கள். அதன் ஒளிப்பதிவை இங்கே கேட்கலாம் -> வால்மீகி ராமாயணம் பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்கள்

அடுத்ததாக அவர் 45 நாட்கள் ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் வரும் 27.09.20 முதல் 12.11.20 தினமும் இந்திய நேரம் மாலை 6.45 to 8.45 வரை உபன்யாஸம் செய்ய இருக்கிறார்கள். அதை இந்த இணைப்பில் கேட்கலாம் – https://www.youtube.com/channel/UCqp570Pw6ydpwjDFugA7onA

ஸ்ரீ சுந்தர்குமார் மஹாபெரியவாளிடமும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடமும் மாறாத பக்தி கொண்டவர். தன்னுடைய உபன்யாசங்களில் தினமும் அவர்களை ஸ்மரிக்கத் தவற மாட்டார். ஸ்வாமிகள் சொல்லி ராமாயண, பாகவதம் மூல பாராயணம் நிறைய செய்து கொண்டு இருக்கிறார். ஸ்வாமிகள் ஆராதனையின் போது, வருஷம் தவறாமல் வந்து, அவருக்காக ஒரு பாகவத சப்தாஹம் பண்ணி சமர்ப்பித்து விட்டு, அந்த ஆராதனை வைபவங்களில் கலந்துண்டு சந்தோஷப்படுவார். குருவை எப்படி கொண்டாடணும்னு நமக்குக் காட்டித் தருகிறார். ஸ்வாமிகள் பேரில் அவர் இயற்றிய அஷ்டோத்தரம் அவருடைய குரு பக்தியை வெளிப்படுத்துகிறது. அந்த அஷ்டோத்தரத்தில் இருந்து சில நாமாக்களை விளக்கி, நான் அனுபவித்த சந்தோஷத்தை இங்கே பகிர்ந்துள்ளேன் -> அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே



Categories: Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: