Journey of Lord Tirunavukarasarar – an independent analysis by Sri Anand Venkat

Thanks to Sri Kannan for sharing this and a big hats off to Anand for taking an attempt at this – incredible work, Reminds me of my work in attempting to plot Mahaperiyava’s last padayatra in google maps and at the completion one thing stood out – we are the most luckiest people to have received all the fruits from their hardwork. I wish I have the time to plot them in google maps to visually see how He walked.

Aum HrIm Nama Shivaya!

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியது இந்த பதிவை முடிக்க. பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதிந்துள்ளேன். சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?
எண் இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்
  1. திருவாமூர் – பாடலிபுத்திரம் (பாட்னா, இன்றைய பிஹார் மாநில தலைநகரம்) 2308
  2. பாடலிபுத்திரம் – திருவதிகை 2270
  3. திருவதிகை – திருப்பாதிரிப்புலியூர் 22
  4. திருப்பாதிரிப்புலியூர் – திருவதிகை 22
  5. திருவதிகை – திருமாணிக்குழி 15
  6. திருமாணிக்குழி – திருதினைநகர் 23
  7. திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23
  8. திருமாணிக்குழி – திருவீரட்டானம் 16
  9. திருவீரட்டானம் – திருவெண்ணைநல்லூர் 125
  10. திருவெண்ணைநல்லூர் – திருவாமாத்தூர் 22
  11. திருவாமாத்தூர் – திருக்கோவலூர் 37
  12. திருக்கோவலூர் – திருபெண்ணாடகம் 86
  13. திருபெண்ணாடகம் – திருத்தூங்கானை 0.5
  14. திருநாரையூர் – சீர்காழி 67
  15. திருவரத்துறை – திருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58
  16. திருமுதுகுன்றம் – சிதம்பரம் 44
  17. சிதம்பரம் – திருப்பாப்புலியூர் 42
  18. திருப்பாப்புலியூர் – சிதம்பரம் 42
  19. சிதம்பரம் – திருவேட்களம் 5
  20. திருவேட்களம் – திருக்கழிப்பாலை 4
  21. திருக்கழிப்பாலை – திருநாரையூர் 84
  22. திருநாரையூர் – சீர்காழி 62
  23. சீர்காழி – திருக்கோலக்கா 166
  24. திருக்கோலக்கா – திருக்கறுப்பறியலூர் 95
  25. திருக்கறுப்பறியலூர் – திருப்புன்கூர் 98
  26. திருப்புன்கூர் – திருநீடூர் (நீடூர்) 18
  27. திருநீடூர் (நீடூர் – குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10
  28. திருநன்றியூர் – திருநனிப்பள்ளி 14
  29. திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52
  30. (செம்பனார்கோவில்) நாகப்பட்டினம் – மயிலாடுதுறை 55
  31. மயிலாடுதுறை – திருத்துருத்தி 15
  32. திருத்துருத்தி – திருவேள்விக்குடி 3
  33. திருவேள்விக்குடி – எதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4
  34. எதிர்கொள்பாடி – திருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9
  35. திருக்கோடிக்கா – திருவாவடுதுறை, 3
  36. திருவாவடுதுறை – திருவிடைமருதூர், 10
  37. திருவிடைமருதூர் – திருநாகேஸ்வரம் 5
  38. திருநாகேஸ்வரம் – பழையாறை 14
  39. பழையாறை – திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1
  40. திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம் – திருநல்லூர், 14
  41. திருநல்லூர் – திருக்கருகாவூர், 26
  42. திருக்கருகாவூர் – திருவாவூர் திருவாவூர் – புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.
  43. திருவாவூர் – திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது
  44. திருப்பாலைத்துறை – திருப்பழனம் 19
  45. திருப்பழனம் – திங்களூர் 2
  46. திங்களூர் – திருச்சோற்றுத்துறை 10
  47. திருச்சோற்றுத்துறை – திருநல்லூர் 35
  48. திருநல்லூர் – திருவாரூர் 49
  49. திருவாரூர் – திருவலஞ்சுழி 47
  50. திருவலஞ்சுழி – திருகுடமுக்கு 13
  51. திருகுடமுக்கு – திருநாவலூர் 108
  52. திருநாவலூர் – திருச்சேறை 122
  53. திருச்சேறை – திருகுடவாயில் (குடவாசல்) 5
  54. திருகுடவாயில் – திருநறையூர் 11
  55. திருநறையூர் – திருவாஞ்சியம் 18
  56. திருவாஞ்சியம் – திருப்பெருவேளூர் 42
  57. திருப்பெருவேளூர் – திருவாரூர் 49
  58. திருவாரூர் – திருவலிவலம் 21
  59. திருவலிவலம் – திருக்கீழ்வேளூர் 16
  60. திருக்கீழ்வேளூர் – திருக்கன்றாப்பூர் 16
  61. திருக்கன்றாப்பூர் – திருவாரூர் 16
  62. திருவாரூர் – திருப்புகலூர் 21
  63. திருப்புகலூர் – திருச்செங்காட்டங்குடி 4
  64. திருச்செங்காட்டங்குடி – திருநள்ளாறு 15
  65. திருநள்ளாறு – திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26
  66. திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268
  67. திருப்புகலூர் – பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)
  68. பூம்புகலூர் – திருக்கடவூர் 296
  69. திருக்கடவூர் – திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24
  70. திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33
  71. திருவீழிமிழலை – திருவாஞ்சியம் 9
  72. திருவாஞ்சியம் – திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90
  73. திருமறைக்காடு – திருவாய்மூர் 37
  74. திருவாய்மூர் – திருமறைக்காடு 37
  75. திருமறைக்காடு – திருவீழிமிழலை 93
  76. திருவீழிமிழலை – திருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47
  77. திருநாகைக்காரோணம் – திருவாவடுதுறை 62
  78. திருவாவடுதுறை – பழையாறை 25
  79. பழையாறை – திருவானைக்கா 87
  80. திருவானைக்கா – திருவாலம்பொழில் 44
  81. திருவாலம்பொழில் – திருக்கானுர் 184
  82. திருக்கானுர் – திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176
  83. திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41
  84. திருக்கண்டியூர் – மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21
  85. மேலைத்திருக்காட்டுப்பள்ளி – திருவானைக்கா 32
  86. திருவானைக்கா – திருவெறும்பியூர் 15
  87. திருவெறும்பியூர் – திருச்சி 11
  88. திருச்சி – திருப்பராய்த்துறை 16
  89. திருப்பராய்த்துறை – திருப்பாதிரிப்புலியூர் 192
  90. திருப்பாதிரிப்புலியூர் – திருப்பைங்ங்கீலி, 178
  91. திருப்பைங்ங்கீலி – அண்ணாமலை 232
  92. அண்ணாமலை – திருவோத்தூர் 484
  93. திருவோத்தூர் – காஞ்சி 30
  94. காஞ்சி – திருமால்பேறு 22
  95. திருமால்பேறு – காஞ்சி 22
  96. காஞ்சி – திருக்கழுக்குன்றம் 52
  97. திருக்கழுக்குன்றம் – திருவான்மியூர் 52
  98. திருவான்மியூர் – மயிலாப்பூர் 8
  99. மயிலாப்பூர் – திருவொற்றியூர் 17
  100. திருவொற்றியூர் – திருப்பாச்சூர் 56
  101. திருப்பாச்சூர் – பழையனூர் 15
  102. பழையனூர் – திருவாலங்காடு 2
  103. திருவாலங்காடு – திருக்காரிக்கரை (ராமகிரி) 370
  104. திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338
  105. திருக்காளாத்தி – திருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396
  106. திருப்பருப்பதம் – காசி, 1565
  107. காசி- கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843
  108. திருவையாறு – திருநெய்த்தானம் 2
  109. திருநெய்த்தானம் – திருமழபாடி 17
  110. திருமழபாடி – திருப்பூந்துருத்தி 21
  111. திருப்பூந்துருத்தி – சீர்காழி 94
  112. சீர்காழி – திருப்புத்தூர் 210
  113. திருப்புத்தூர் – மதுரை 65
  114. மதுரை – திருப்பூவணம் 20
  115. திருப்பூவணம் – ராமேஸ்வரம் 180
  116. ராமேஸ்வரம் – திருநெல்வேலி 215
  117. திருநெல்வேலி – திருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221
  118. திருக்கானப்பேர் – பூம்புகலூர் 191
  119. பூம்புகலூர் – திருப்புகலூர் 2
———–
மொத்த தூரம் 14,380
வெறுமனே நாம் எங்கே இருக்கிறோம், இவர்கள் எங்கே இருக்கிறார்கள், எவ்வளவு உழைத்தார்கள் என்று மட்டும் சிந்தித்து குறைந்தது இன்று முதல் தினசரி அருகில் உள்ள கோவிலுக்கு தவறாமல் செல்வது என்ற சங்கல்பம் மட்டுமாவது எடுத்துக்கொண்டால் இந்த பதிவை இட நான் பட்ட பாட்டிற்கு பலன் கண்டதாக எடுத்துக்கொள்வேன்.


Categories: Announcements

13 replies

  1. அருமை

  2. This is another research book that came earlier on the subject. Attaching the link for reference.

    https://archive.org/details/acc.no.25472devaramoovarthalayatirai1990/page/n31/mode/2up

  3. Amazing Yatra!
    Commendable research..
    Thiruvamur is between Panruti and Cuddalore. Not in Bihar. This point needs correction..
    Thanks for sharing..
    R Balasubramanian

  4. நமஸ்காரம் திருவாமூர் பண்ருட்டி அருகில் உள்ளது. திருநாவுக்கரசர் சுவாமிகள் அவதரித்த தலம். தருமபுரம் ஆதீனம் நிர்வாகத்தில் உள்ளது. நன்றி

  5. Namaskaram, the book you requested is available to read online in this link.
    http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm

    Hara Hara Sankara Jaya Jaya Sankara!

  6. இதிலே ஆரம்பத்தில் உள்ள பாடலீபுத்ரம் பாட்னா அல்ல.
    கடலூருக்கு பழைய பெயர் என தெய்வத்தின் குரலில் படித்த ஞாபகம் உள்ளது.

  7. மஹா பெரியவா சரணம். அடேயப்பா, எத்துணை திருத்தலங்கள், எத்துணை தெய்வ தரிசனங்கள், அருளாசி கிட்டிய அருட்பெருந்திருவருட்செல்வர். என்னே நடைப்பயண யாத்திரை, மெய் சிலிர்க்கிறது. பெரியவாளும் இப்பெருந்தகையும் ஒன்றே என்ற உணர்வு ஏற்படும் வண்ணம் பாத யாத்திரை. இவர்கள் நடந்த பாதைகளில் ஊர்களில் நாம் சிறிதளவேனும் அடி பதித்திருந்தால் அதுவே நம் பாக்கியம். ஆராய்ச்சி செய்து பதிவிட்ட திரு ஆனந்த் வென்கட் அவர்களுக்கும் நம் திரு மஹேஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி. இறையருளுடன் இன்புற்றிருக்க பிரார்த்தனைகள்.

  8. திருநாவுக்கரசர் வேறு mahaperiava வேறு அல்ல. அவரின் மறு பிறப்பே இவர் எனும் படி உள்ளது. அவரின் இயற் பெயர் இவருக்கு பட்ட பெயர் எனலாம். தெய்வத்தின் குரல் எழுதியது ரா கணபதி. சதாரண மனித முயற்சியில் இவ்வளவு சீராக இருக்க முடியாது. தெய்வ Anugraham ஒன்றினால் தான் முடியும். எனவே இறைவனே அவதாரம் எடுக்கிறார் அவருக்கு வேண்டிய சகாக்கள் உடன்.

  9. Good Effort. Thank you very much.
    There is a book by Pu.Ma.Jayasenthilnathan, asthana vidwan of Kanchi Mut,, – that was published after much research. It clearly tracks the travel itinerary of Appar, Sundarar, and Gnanasambandar.

    Namaskaran.
    Srinivasan

Leave a Reply to B.SRINIVASANCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading