ஒரு மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள், தன் அதிஷ்டான ஸ்தலத்தை ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளுக்கு வெளிப்படுத்தி, அந்த திதியிலேயே தன்னுடைய ஆராதனையை செய்து வருமாறு பணித்ததால், ஒவ்வொரு வருடமும் மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை கொண்டாடப் படுகிறது.
யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே |
தம்நமாமி யதிச்ரேஷ்ட்டம் போதேந்த்ரம் ஜகதாம் குரும் ||
[எவருடைய ஸ்மரண மாத்திரத்தில் நாமபக்தி உண்டாகிறதோ அந்த யதிஸ்ரேஷ்டரும், ஜகத்குருவுமான போதேந்திர ஸ்வாமிகளை வணங்குகிறேன்] என்று போற்றப்படும் அவரை வணங்குவோம்.
பகவன்நாம மஹிமையை பற்றிய மஹா பெரியவாளின் அருள்வாக்கும், அதற்கு ஸ்வாமிகள் அளித்த விளக்கமும் இந்த இணைப்பில் படிக்கலாம் -> பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம்
Categories: Upanyasam
Thank you Ganapthy Subramanian Garu… We have one request. There are huge non-Tamil readers coming to this blog. Can you consider English translation for those readers.
Periva Sharanam.
It is a lot of effort. I don’t have the time. If someone with expertise and cultural orientation can do the translation I can review and add to the post.
Thank you Mr.Ganapathi Subramanian I have read all your articles pertaining to Sri Kanchi Mutt as and when posting in the Title “Sage of Kanchi”. I wish you all the best
Thank you 🙏
ஸ்ரீ பகவன் நாம போதேந்த்ராளை ஸ்மரிப்பதே சுகமாக இருக்கிறது.
கலிகாலத்திற்கு ஏற்ற சாதனை பகவன் நாம ஸ்மரணம், பஜனம் என்று சாஸ்திரோக்தமாக நிலை நாட்டினார். இது சம்பந்தமாக பல கிரந்தங்கள் செய்தார். அவற்றில் “ஸ்ரீ பகவான் நாமாம்ருத ரஸோதயம்”, ” ஸ்ரீ பகவான் நாம ரஸாயனம்” என்ற இரண்டும் மிக முக்கிய இடத்தைப் பெற்றவை. இவை இரண்டையும் தமிழில் ஸ்ரீ பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், சென்னை-33 வெளியிட்டிருக்கிறார்கள். [ இரண்டாம் பதிப்பு: 2003, 2005]. இதில் முதல் புத்தகம் ஸம்ஸ்க்ருத மூலத்துடன் கூடியது.
தஞ்சாவூர் சீமையில் பக்திமார்க்கம் தழைக்கக் காரணமாக இருந்தவர் ஸ்ரீ போதேந்த்ர ஸ்வாமிகள். இந்த விஷயங்களைப் பற்றி டாக்டர் வி.ராகவன் அவர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ” The Power Of The Sacred Name” என்ற பெயரில் புத்தகமாகத் தந்திருக்கிறார் William J.Jackson (Sri Satguru Publications, Delhi, 1994)