அனுஷம், புதாஷ்டமி, ராதாஷ்டமி

अमावास्या तु सोमेन सप्तमी भानुना सह ।
चतुर्थी भूमिपुत्रेण सोमपुत्रेण चाऽष्टमी ।
चतस्र स्तिथयस्त्वेताः सूर्य ग्रहण सन्निभाः ।

அமாவாஸ்யாது ஸோமேந ஸப்தமீ பாநுநாஸஹ ।
சதுர்த்தீ பூமிபுத்ரேண ஸோமபுத்ரேண சாஷ்டமி ।
சதஸ்ரஸ் திதயஸ்த்வேதா : ஸுர்யக்ரஹண ஸந்நிபா : ।।

இன்று புதாஷ்டமி. புதன் கிழமையும் அஷ்டமி திதியும் ஒன்று சேரும் நாள்தான் புதாஷ்டமி புண்யகாலம். இன்று நாம் செய்யும் புண்ய கார்யங்கள், பூஜைகள், ஜபங்கள், பாராயணங்கள் மற்ற நாட்களில் பண்ணுவதை விட பல மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக் கூடியவை. அதோடு இன்று அனுஷம். மகாபெரியவாளை பூஜித்து, இஹபர ஸௌக்யங்களை அடைவோம். மஹாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இருக்கிறேன். இந்த இணைப்பில் கேட்கலாம் -> மஹாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – முதல் பகுதி

அதோடு இன்று ராதாஷ்டமி. ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த நன்னாள், ராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஶ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி முடிந்த பின்னர் அதற்கு அடுத்த அஷ்டமியன்று இந்நன்னாள் வருகின்றது. இன்றைய தினத்தில் ராதாக்ருஷ்ணர்களை வணங்கி, அந்த திவ்ய தம்பதியினரின் அருளைப் பெறுவோம். கிருஷ்ணனை பாடினாலே ராதாதேவியின் அருள் கிடைத்து விடும். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பில்வமங்களாச்சார்யர் அருளிய கோவிந்த தாமோதர ஸ்தோத்ரத்தை அம்ருத மழை போல இனிமையாக பாடியுள்ளதை கேட்போம் ->; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் குரலில் கோவிந்த தாமோதர ஸ்தோத்ரம்



Categories: Upanyasam

Tags: ,

2 replies

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  2. This day is also Budha anuradha Amrutasiddhi yoga parayana punyakalam. Parayanam of Devi stotrams, like Lalitha Sahasranam, Chandi Parayanam etc are done today.

Leave a Reply

%d bloggers like this: