தென் ஆற்காடு பகுதியில் வாழ்ந்த வடக்குபட்டு சுப்பிரமணிய பிள்ளை என்பவர் தான் முதலில் அருணகிரிநாதரின் திருப்புகழை ஓலைகளில் இருந்து தேடி எடுத்துப் பதிப்பித்தவர். சுப்பிரமணிய பிள்ளையின் மகன் வ.சு.செங்கல்வராய பிள்ளை. தணிகைமணி வ. சு. செங்கல்வராய பிள்ளை அவர்கள், அருணகிரிநாதரின் திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்புகள் ஆகியவற்றுக்கு, நுட்பமான ஆராய்ச்சி செய்து, சிறந்த உரை எழுதி உள்ளார். பரந்துபட்ட தமிழ் இலக்கிய, இலக்கண சாத்திரப் புலமையும், அனுபவ அறிவும் இணைந்த இந்த ஆராய்ச்சிக்கு ஈடு இணை இல்லை.
அவர், சிவபெருமானது புகழைப் பாடும் அருள் நூல்கள் பன்னிரு திருமுறைகளாக தொகுக்கப்பட்டிருப்பது போல, முருகப் பெருமானது புகழைப் பாடும் அருள் நூல்களையும் பன்னிரு திருமுறைகளாக – முருகவேள் பன்னிரு திருமுறை என்று தொகுத்து பொருளுரையோடு வெளியிட்டார்.
முருகவேள் பன்னிரு திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்துப் பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. திருவகுப்பு ஒன்பதாம் திருமுறை ஆகியது. கந்தரனுபூதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய முருகனைப் பற்றிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.
முருகவேள் பன்னிரு திருமுறை இப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டு மின்னூல் வடிவில் கிடைக்கின்றன. வள்ளிமலை ஸ்வாமிகளின் கருணையால், அருணகிரிநாதரின் படைப்புகளை இப்போது உலகம் முழுவதும் முருக பக்தர்கள் பலரும் பாடி, ஓதி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் பேருதவியாக இருக்கும் என்பதால் இங்கே பகிரப்படுகிறது. (big files warning – each file is about 300 mb. ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 300 mb அளவிலானது)
முருகவேள் பன்னிரு திருமுறை தொகுதி-1
முருகவேள் பன்னிரு திருமுறை தொகுதி-2
முருகவேள் பன்னிரு திருமுறை தொகுதி-3
முருகவேள் பன்னிரு திருமுறை தொகுதி-4
Categories: Bookshelf
Really glad to see this treasure of collection.. thank you for sharing this rare book.
வ. சு. செங்கல்வராய பிள்ளை’s other books have been scanned, typed and proof-read by volunteers at Project Madurai. For example, see his classic book
அருணகிரிநாதர் – வரலாறும் நூலாராய்ச்சியும்
at
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0400_03.html
His other books (numbered 391, 392, 395, 397, 400) are also available as HTML & PDF (soon as ePubs) from
https://www.projectmadurai.org/pmworks.html
Thank you
பெருத்த பாருளீர் நீங்கள் பயன் பெற வாருமே🙏🙏🙏🙏⬆️
I was looking for Thiruppugazh explanation. Thanks for your nice effort in bringing this out. Thanks once again.
கிடைத்தற்கரிய படைப்புகளை பொக்கஷங்களை தேடி தந்தமைக்கு 🙏🙏. மேலும் மேலும் பணி தொடர பெரியவா, ஸ்வாமிகள் அருளுவர் .
இந்தப் புத்தகங்களை சுமார் 30 வருஷங்களுக்குமுன் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சிந்தாந்தக் கழகத்தினர். மிக அருமையான பதிப்பாக வெளியிட்டனர்.
இந்தப் புத்தகத்தில் வரிக்குவரிப் பொருள் தந்திருக்கிறாரே தவிர, பதவுரை இல்லை. ஆனால் மிக அருமையான அடிக்குறிப்புக்கள் தந்திருக்கிறார். இறுதியில் பல விஷயங்கங்களை அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். நிதானமாக, ஆழ்ந்து படிக்கவேண்டிய புத்தகம். மின்னூல் வடிவில் இப்படி நிதானித்துப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின்பு உமா பதிப்பகத்தினர் திருப்புகழை மட்டும் 5 பாகங்களாக வெளியிட்டிருக்கின்றனர். (2012) அழகிய பதிப்பு- ஆனால் இதில் அச்சுப்பிழைகள் இருக்கின்றன.
தணிகைமணி அவர்கள் எழுதிய ” தேவார ஒளி நெறி”க்கட்டுரைகள் மிக அரிய விஷயங்கள் கொண்டவை. அதே போல் ” திருப்புகழ் ஒளி நெறி”க்கட்டுரைகளை அவரது குமாரத்தியார் வி.சி.சசிவல்லி அவர்கள் எழுதியிருக்கிறார். மூன்று பாகங்களாக வெளிவந்துள்ள இந்த நூலில் (2007) 168 தலைப்புக்களில் திருப்புகழில் வரும் அரிய விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன. திருப்புகழை சரியாகக் கற்க இதுவும் உதவும்.
Mikka nandri ayya
சுவாமி நம் ஹிந்து தர்மத்தில் எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ஒரு ஜன்மம் இன்டெக்ஸ் படிக்க கூட போது மானது இல்லை என்று தெரிகிறது. ஆனால் இதில் பிறந்து குறித்து இறைவனுக்கு நன்றி, மீண்டும் இதில் தான் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன்
Great job with effort ! Very useful to Murugan devotees ! Thanks a ton Ganapathy!